மீனாட்சி கோயிலை காப்போம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மீனாட்சி கோயிலை காப்போம்

Added : பிப் 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

புனிதம் காக்க வேண்டும்
சீரும் சிறப்பும் உள்ள மீனாட்சி கோயில் இன்று அக்னி பகவானின் அகோர பசிக்கு ஆளாகி இருப்பது கொடுமை. வியாபாரிகளின் கொடிய கூடாரமாகி விட்டது மீனாட்சி கோயில். நிபந்தனைகள் இன்றி அத்தனை கடைகளும் உடனே அகற்ற வேண்டும். புதுமண்டபத்தை அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கும் கடைகளையும் உடனே அகற்ற வேண்டும். கோயிலின் புனிதத்தை காக்க வேண்டும். கடைகளை அகற்றாமல் வெறும் தீயணைப்பு நடவடிக்கை எடுப்பதால் பயனில்லை.
-- என்.மல்லிகை மன்னன், மதுரை
கடைகளை அகற்றிய இடங்களில் என்ன செய்ய போகிறீர்கள்
நமது பாரம்பரிய சின்னமாக மீனாட்சி அம்மன் கோயில் கருதப்படுகிறது. தினமும் கோயிலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை வைத்து இக்கோயிலின் பெருமையை அறியலாம். இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கோயிலை சுத்தமாக வைத்திருக்க நடவடிக்கை எடுத்தாலும் தொடர் கண்காணிப்பு இல்லாததால் மோசமாக காணப்படுகிறது. சான்ட் பிளீச்சிங் மூலம் கடந்த கும்பாபிேஷகத்தின் போது சிற்பங்கள், துாண்கள், மண்டப மேற்கூரைகள் சுத்தப்படுத்தப்பட்டன. ஆனால் தொடர்ந்து பராமரிக்காததால் அவை பாழடைந்தது போல காணப்படுகிறது. உயர்நீதிமன்ற உத்தரவின்படி கடைகளை காலி செய்தது வரவேற்கத்தக்கது. கடைகள் இருந்த இடங்களை பழமை மாறாமல் புதுப்பொலிவுபடுத்தி, பக்தர்கள் தரிசிக்க வழி செய்ய வேண்டும். கடைகள் அகற்றப்பட்ட இடங்களில் அலுவலகமோ, டிக்கெட் கவுன்டர்களோ அமைக்க கூடாது. கட்டண தரிசனங்களையும் ரத்து செய்தால் பக்தர்களிடம் வரவேற்பை பெறலாம்.
-எஸ்.மஞ்சுளா, எல்.ஐ.சி., முதுநிலை உதவியாளர், மதுரை
உண்மை கண்காணிப்பு குழு
மீனாட்சி கோயிலை பாதுகாக்க கண்துடைப்பு கண்காணிப்பு குழுவை அமைக்காமல், நேர்மையாக பணி செய்யக் கூடிய குழுவை அமைக்க வேண்டும். அதில், கோயிலை பற்றி தெரிந்த பொறியாளர், கடைநிலை ஊழியர், அனுபவமிக்க அர்ச்சகர், போலீஸ் அதிகாரி இருக்க வேண்டும். சித்திரை, ஆடி வீதிகளில் நிரந்தரமாக தீயணைப்பு வாகனங்களை நிறுத்தி வைக்க வேண்டும்.
- கே.என்.புஷ்பா, மதுரை
மதுரை மீனாட்சி கோயில் நமது பொக்கிஷம். இக்கோயிலை இயற்கை சீற்றம், விபத்துக்கள், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார சீர்கேட்டில் இருந்து காப்பது நம் கடமை. மீனாட்சி கோயிலின் பழம்பெருமை, புராதனம் காக்க விரும்பும் வாசகர்கள், பல்துறை வல்லுனர்கள் அதற்கான ஆலோசனைகளை 'மீனாட்சி கோயிலை காப்போம், தினமலர், டி.வி.ஆர்., ஹவுஸ், தினமலர் அவென்யூ, மதுரை 625 016' என்ற முகவரிக்கு தங்கள் புகைப்படத்துடன் அனுப்பலாம். mdureporting@dinamalar.in

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை