'பார்' கவுன்சில் தேர்தல் பணப்புழக்கம் : வருமானவரித்துறை குழுவிடம் புகார்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'பார்' கவுன்சில் தேர்தல் பணப்புழக்கம் : வருமானவரித்துறை குழுவிடம் புகார்

Added : பிப் 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

மதுரை: 'தமிழ்நாடு, புதுச்சேரி 'பார்' கவுன்சில் தேர்தலில் பணப்பட்டுவாடாவை கட்டுப்படுத்த வருமானவரித்துறை குழு அமைக்கவேண்டும். புகார் தெரிவிக்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.மதுரை பாஸ்கர் மதுரம் தாக்கல் செய்த பொதுநல மனு:தமிழ்நாடு, புதுச்சேரி 'பார்' கவுன்சில் தேர்தல் மார்ச் 25 ல் நடக்கிறது. இதில் போட்டியிடுவோர், அரசியல் கட்சிகளில் நிர்வாகியாக இருக்கக்கூடாது என்பன உட்பட 7 நிபந்தனைகளை 'பார்' கவுன்சில் சிறப்புக்குழு தீர்மானம் நிறைவேற்றியது.ஒருஓட்டுக்கு 10 ஆயிரம் முதல் 30ஆயிரம் ரூபாய் வரை சில வழக்கறிஞர்கள் பட்டுவாடா செய்ய முயற்சிப்பதாக சென்னை உயர்நீதிமன்ற விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டது.வழக்கறிஞர்களின் குடும்ப உறுப்பினர்களின் சொத்து மற்றும் கடன் நிலுவை விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் மீது கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளதா அல்லது வழக்கு முடிவுக்கு வந்துவிட்டதா என்பதை மனு தாக்கலின்போது குறிப்பிட வேண்டும். அதைமனு பரிசீலனைக்கு முன் டி.ஜி.பி.,யிடம் அனுப்பி, உண்மை தன்மையை ஆய்வு செய்ய வேண்டும். பின், தகுதியான மனுக்களை பரிசீலனைக்கு ஏற்க வேண்டும். இவற்றை ஏற்கனவே உள்ள தேர்தல் நிபந்தனைகளுடன் சேர்க்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனு செய்திருந்தார்.நீதிபதிகள் என்.கிருபாகரன், ஆர்.தாரணி அமர்வு உத்தரவு:தேர்தலில் பணப்புழக்கத்தை தடுக்க வருமானவரித்துறை குழு அமைக்க வேண்டும். புகார் தெரிவிக்க தனி இமெயில், அலைபேசி வசதியை ஏற்படுத்த வேண்டும். வேட்பாளர்களின் சொத்து விபரங்கள், குற்ற வழக்கு விபரங்களை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்வதற்கு முன், அவர்கள் பற்றிய விபரங்களை டி.ஜி.பி.,யிடம் அனுப்பி, பின்புலத்தை விசாரிக்க வேண்டும். பின் டி.ஜி.பி.,யிடம் அறிக்கை பெறவேண்டும். விசாரணை பிப்., 12 க்கு ஒத்திவைக்கப்படுகிறது, என்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை