நூறு நாள் வேலை தொழிலாளர்களுக்கு 'ஜாக்பாட்'? : 'கற்பனை தொகை' என எஸ்.பி.ஐ., விளக்கம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நூறு நாள் வேலை தொழிலாளர்களுக்கு 'ஜாக்பாட்'? : 'கற்பனை தொகை' என எஸ்.பி.ஐ., விளக்கம்

Added : பிப் 10, 2018 | கருத்துகள் (4)
Advertisement
நூறு நாள் வேலை தொழிலாளர்களுக்கு 'ஜாக்பாட்'? : 'கற்பனை தொகை' என எஸ்.பி.ஐ., விளக்கம்

பழநி: பழநி அருகே பாப்பம்பட்டி நுாறுநாள் வேலைத்திட்ட தொழிலாளர் வங்கி கணக்குகளில் 90 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் வரை வரவு வைக்கப்பட்டுள்ளது. அதனை எடுக்கமுடியாமல் வங்கி கணக்குகள் அக்கவுண்ட் 'லாக் ' செய்துள்ளதால் பாதிக்கப்பட்டுள்ளனர்.பாப்பம்பட்டி எஸ்.பி.ஐ., வங்கி கிளை மூலம் முதியோர் உதவித்தொகை, நுாறுநாள் வேலை தொழிலாளர்களுக்கு சம்பளம், உதவித்தொகை அவர்களது வங்கி கணக்கில் வழங்கப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக நுாற்றுக்கும் மேற்பட்ட நுாறுநாள் திட்ட தொழிலாளர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. அத்தொழிலாளர்கள் ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி கணக்கு இருப்பு விபரத்தை சரிபார்த்தபோது, ஒவ்வொருவர் கணக்கிலும் ரூ.90ஆயிரம் முதல் ரூ.ஒரு லட்சம் வரை கூடுதலாக இருப்பு உள்ளது தெரியவந்தது. ஆனால் பணத்தை எடுக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.இதுகுறித்து பாப்பம்பட்டி மகேஷ் கூறுகையில், 'எனது மனைவி பழனியம்மாள் நுாறுநாள் வேலை சம்பளம் வங்கி கணக்கில் கூடுதலாக ரூ.99ஆயிரத்து 920 உள்ளது. தற்போது கணக்கை 'லாக்' செய்துள்ளதால் எடுக்கமுடியவில்லை. இதனால் மிகவும் சிரமமாக உள்ளது' என்றார்.வங்கி கிளைமேலாளர் செந்தில்குமார் கூறியதாவது: வாடிக்கையாளர்கள் அனைவரின் கைரேகை, ஆதார் அட்டை இணைக்க வலியுறுத்துகிறோம். முறையாக இருப்பிடச்சான்று, ஆதார் அட்டை இணைக்காதோரின் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஒருவரது வங்கி கணக்கை தற்காலிமாக முடக்கம் செய்யும்போது கற்பனைத்தொகை ரூ.1லட்சம் இருப்பு காட்டும். இத்தொகை வாடிக்கையாளர் கணக்கில் இருப்புள்ள தொகையை பொறுத்து மாறுபடும். இது கணக்கு பயன்பாட்டிற்கு வரும்போது சரியாகிவிடும். வீண் வதந்திகளை மக்கள் நம்பவேண்டாம்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
10-பிப்-201819:16:04 IST Report Abuse
தமிழ்வேல் தேதி வாரியாக நாளொன்றுக்கு ஒரு தொகை என எப்படி கற்பனைத் தொகையாகும் ? யாரு நன்மைக்காகவோ எதோ ஒரு தில்லு முள்ளு நடந்தாப்போல தோணுது.
Rate this:
Share this comment
Cancel
பொலம்பஸ் - CHENNAI,இந்தியா
10-பிப்-201818:01:19 IST Report Abuse
பொலம்பஸ் No karpanai. It is " default figure "
Rate this:
Share this comment
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
10-பிப்-201814:16:06 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN அதென்ன கற்பனை தொகை புதியதாக கேள்வி படுகிறேன். எங்கும் ஊழல் எதிலும் ஊழல் மலிந்து போய்விட்டது. தண்டனைக்க்கு யாரும் பயப்படல.யான்னா கோர்ட்டு வாய்தா வக்கீல் ன்னு நீதி நெகிழ்ந்து கொடுக்கிறதே. மேல்ம் மனித நேய அரசியல் வாதிகளும் குற்றவாளி ஓட்டுக்கு சிபாரிசும் செய்து பேசுகிறார்களே அரசு பணத்தில் சாப்பாடு போட்டு பத்து ஆஃடு ஆனதும் விடுதலையாம் என்னங்க சட்டம் போன உயோர் திரும்புமா .எனவே உயிர் கொலை செய்தவனை கழுமரம் ஏற்றிடனும் .அப்படி செய்தால் தான் கொலை செய்ய பயப்படுவான் சட்டம் மாற்றப்படுமா>??நீதி தழைக்க>>>>>>
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X