பெரியாறு அணையில் மழை : நீர்வரத்து அதிகரிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பெரியாறு அணையில் மழை : நீர்வரத்து அதிகரிப்பு

Added : பிப் 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கூடலுார்: நீர்பிடிப்பில் பெய்த மழையால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தேனி, மதுரை மாவட்டங்களில் குடிநீர் பிரச்னையைப் போக்க இந்த மழை தொடர எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் சிலவாரமாக மழையின்றி நீர்மட்டம் குறைந்து வந்தது.அதனால் தமிழகப்பகுதிக்கு குடிநீருக்கு மட்டும் வினாடிக்கு 100 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நீர்பிடிப்பு பகுதியான பெரியாறில் 17.2 மி.மீ., தேக்கடியில் 8.8 மி.மீ., மழை பதிவானது. இதனால் அணைக்கு நீர்வரத்து 102ல் இருந்து 299 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 114.20 அடியாக (மொத்த உயரம் 152 அடி) உள்ளது. நீர் இருப்பு 1593 மில்லியன் கன அடியாகும்.தற்போது அணையில் குறைவான நீர் இருப்பு உள்ளதால் ஜூன் மாதம் வரை தேனி,மதுரை மாவட்டங்களுக்குகுடிநீருக்கு பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குடிநீர் பிரச்னையை போக்க தொடர் மழை பெய்து அணை நீர்மட்டம் உயருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை