தமிழக மீனவர்கள் விடுவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக மீனவர்கள் விடுவிப்பு

Added : பிப் 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் மகன் இறுதி சடங்கில் பங்கேற்க, இலங்கை சிறையில் உள்ள மீனவர் உள்ளிட்ட 4 பேரை இலங்கை அரசு விடுவித்தது.ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் பிப்.,8ல் வலிப்பு நோயால் மீனவர் ஸ்டீபன் உயிரிழந்தார். இவரது தந்தை ஜெயசீலன் கடந்த ஜன.,15ல் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு, யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில் மகன் இறுதி சடங்கில் பங்கேற்க தந்தையை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரினர். அதன்படி நேற்று இலங்கையில் உள்ள இந்திய துாதரக அதிகாரிகள், இலங்கை அரசிடம் வலியுறுத்தினர்.இதனையடுத்து மீனவர் ஜெயசீலன், அப்படகில் கைதான மீனவர்கள் இபுராகிம்ஷா, முனியசாமி, பாலகுமார் ஆகிய 4 பேரையும் விடுவிக்க இலங்கை அட்டர்னி ஜெனரல் பரிந்துரை கடிதம் அனுப்பினார். அதன்படி 4 மீனவர்களை விடுவிக்க ஊர்காவல்துறை கோர்ட் உத்தரவிட்டது. இவர்கள் இன்று அதிகாலை காரைக்கால் துறைமுகம் வந்திறங்குவார்கள் என ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்தனர்.தந்தை வர தாமதமானதால் நேற்று மாலை ஸ்டீபன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X