வார்டு மறுவரையறை பட்டியல் பிப். 28ல் வெளியீடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வார்டு மறுவரையறை பட்டியல் பிப். 28ல் வெளியீடு

Added : பிப் 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சிவகங்கை: உள்ளாட்சி அமைப்புக்கான வார்டு மறுவரையறை இறுதிப் பட்டியல் பிப்., 28 ல் வெளியாகிறது.உள்ளாட்சி அமைப்பு வார்டு மறுவரையறை 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு படி நடந்தது. வார்டுகளின் எண்ணிக்கை மாறாமல், எல்லைகள் மாற்றியமைக்கப்பட்டன. மறுவரையறை வரைவு பட்டியல் டிச., 27 ல் வெளியிடப்பட்டது. ஜன., 12 வரை ஆட்சேபனை மனுக்கள் பெறப்பட்டன. மாநிலம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான மனுக்கள் குவிந்தன. தொடர்ந்து மண்டல அளவிலான கருத்துக் கேட்புக் கூட்டம் ஆணையர் தலைமையில் ஜன., 23 முதல் நடந்து வருகிறது.இதுவரை வேலுார், சென்னை மறைமலைநகர், திருச்சி, மதுரை, துாத்துக்குடி ஆகிய இடங்களில் நடந்துள்ளன. இன்று (பிப்., 10) சேலத்தில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடக்கிறது. மனுக்கள் அதிகளவில் வரப்பெற்ற போதிலும், மாவட்டங்களில் சில வார்டுகளை மட்டுமே மாற்றியமைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.தொடர்ந்து மாவட்டங்களில் பிப்., 15 க்குள் வார்டு மறுவரையறை இறுதி செய்யப்பட்டு ஆணையரகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். பிப்., 28 ல் இறுதி பட்டியல் வெளியாகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை