இளையான்குடியில் 3,000 ஏக்கரில் மிளகாய் பாதிப்பு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இளையான்குடியில் 3,000 ஏக்கரில் மிளகாய் பாதிப்பு

Added : பிப் 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சிவகங்கை: இளையான்குடி அருகே வறட்சி, இலைசுருட்டல் நோய் பாதிப்பால் மூவாயிரம் ஏக்கரில் மிளகாய் பாதிக்கப்பட்டது.சிவகங்கை மாவட்டத்தில் இளையான்குடி, திருப்புவனம், காளையார்கோவில் உள்ளிட்ட வட்டாரங்களில் 10,750 ஏக்கரில் மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது. இளையான்குடி, சாலைக்கிராமம் பகுதிகளில் 3 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சாகுபடி நடக்கிறது. பருவநிலை மாற்றத்தால் இப்பகுதி மிளகாய் செடிகளில் இலைசுருட்டல் நோய் பாதிப்பு ஏற்பட்டது. இந்த பாதிப்பால் செடிகளின் இலைகள் சுருண்டு சிறிதாக மாறின.இலை துவாரங்கள் மறைந்ததால் ஒளிச்சேர்க்கை குறைந்து, ஆயிரம் ஏக்கருக்கு மேல் விளைச்சல் பாதிக்கப்பட்டது. மேலும் வறட்சியால் தண்ணீர் இல்லாமல் 2 ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் கருகின. பலத்த நஷ்டம் ஏற்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.சாலைக்கிராமம் விவசாயிகள் கூறியதாவது: நடவு செய்த காலத்தில் இருந்து எதிர்பார்த்த மழை இல்லை. தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வந்தோம். இருந்தும் பனியும், வெயிலும் மாறி, மாறி வந்ததால் செடிகள் கருகிவிட்டன. ஒரே நிலத்தில் மூன்றுமுறை சாகுபடி செய்தும் பயனில்லை. இதனால் பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நிவாரணம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை