மீனாட்சி கோயில் தீ விபத்து சதியா : ராஜா கிளப்புகிறார் சந்தேகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மீனாட்சி கோயில் தீ விபத்து சதியா : ராஜா கிளப்புகிறார் சந்தேகம்

Added : பிப் 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஸ்ரீவில்லிபுத்துார்: ''மீனாட்சி அம்மன் கோயிலில் நடந்தது தீ விபத்தா, சதியா என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும்,'' என பா.ஜ.,தேசிய செயலர் எச்.ராஜா கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்துாரில் அவர் கூறியதாவது: இந்து தர்மத்தின் ஆளுமைகளை கொச்சைபடுத்தும் விதத்தில் பொய் பரப்பப்படுகிறது. பொய்யை நிலைநிறுத்தி, எதிர்காலத்தில் இந்து தர்மத்தின் மீது சந்தேக விதைகளை துாவும் விதத்தில் திராவிட பேச்சாளர்கள் செயல்படுகின்றனர். இதன் வெளிப்பாடு தான் ஆண்டாள் குறித்து வைரமுத்துவின் பேச்சு.இந்து தர்மத்தை கொச்சைப்படுத்தும் செயலை திராவிட இயக்கங்கள் நிறுத்தி கொள்ளவேண்டும். இனிமேல் மக்கள் பொறுத்து கொள்ளமாட்டார்கள்.மீனாட்சி கோயிலில் நடந்தது தீ விபத்தா, சதியா என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும். கண்காணிப்பு பதிவுகள் மூலம் உண்மை கண்டறியப்பட வேண்டும். திருவலங்காடு சிவன்கோயில் தலவிருட்சம் தீப்பிடித்துள்ளது. அங்கு வி.ஐ.பி.,க்களுக்காக சுவர் இடிக்கப்பட்டு வாசல் ஏற்படுத்தபட்டுள்ளது. இந்து சமய ஆகமத்தையும், தர்மத்தையும் களங்கப்படுத்தும் விதத்தில் அறமற்ற துறையாக இந்து அறநிலையத்துறை செயல்படுகிறது,

என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை