தனுஷ்கோடி கடலில் 123 ஆமை குஞ்சுகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தனுஷ்கோடி கடலில் 123 ஆமை குஞ்சுகள்

Added : பிப் 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராமேஸ்வரம்: தனுஷ்கோடியில் பாதுகாப்பு வேலிக்குள் பொரித்த 123 ஆமை குஞ்சுகளை, வனத்துறையினர் கடலில் விட்டனர். மன்னார் வளைகுடா தீவு அமைந்துள்ள கடலோரத்தில் தனுஷ்கோடி அரிச்சல்முனை முதல் முகுந்தராயர் சத்திரம் கடற்கரை வரை மனிதர்கள் நடமாட்டம் குறைந்த பகுதியாகும். இதனால் மன்னார் தீவை சுற்றி வசிக்கும் ஆமைகள், இப்பகுதியில் குழிதோண்டி முட்டையிட்டு செல்லும். இதனை மண்டபம் வனத்துறையினர் சேகரித்து, முகுந்தராயர் சத்திரத்தில் உள்ள பாதுகாப்பு வேலிக்குள் புதைத்து வைத்து, பாதுகாக்கின்றனர். கடந்தாண்டில் சேகரித்த 12,500 முட்டையில், 95 சதவீதம் குஞ்சுகள் பொரித்தது.இந்நிலையில் நேற்று ஒரு குழியில் இருந்த 128 முட்டையில் 123 ஆமை குஞ்சுகள் பொரித்தது. இதனை மாவட்ட வனஉயிரின காப்பாளர் அசோக்குமார், வனஅதிகாரி சதீஷ்குமார் மீட்டு தனுஷ்கோடி கடலில் விட்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை