முருகானந்தத்தின் கதை, 'பேடுமேன்' ; பாலிவுட்டிலும் சாதித்த கோவை நாயகன்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முருகானந்தத்தின் கதை, 'பேடுமேன்' ; பாலிவுட்டிலும் சாதித்த கோவை நாயகன்

Added : பிப் 11, 2018
Advertisement
முருகானந்தத்தின் கதை, 'பேடுமேன்'  ; பாலிவுட்டிலும் சாதித்த கோவை நாயகன்

கோவை : பாலிவுட்டில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும், பேடுமேன் படம், கோவையைச் சேர்ந்த, 'நாப்கின்' தயாரிப்பாளர், முருகானந்தத்தின் வாழ்க்கை வரலாறு என்பது, கோவைக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது.

கோவையைச் சேர்ந்தவர், முருகானந்தம்; பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்டவர். திருமணம் முடிந்த பின், மாதவிடாய் காலத்தில், தன் மனைவி படும் துயரங்களை பார்த்து சங்கடப்படுகிறார்.

'நாப்கின்' வாங்கினால், செலவு கட்டுப்படியாகாது என, மனைவி சொன்ன பின், தானே, சொந்தமாக நாப்கின் தயாரித்தால் என்ன என்று யோசித்து, அதற்கான முயற்சியிலும் இறங்குகிறார்.


விழிப்புணர்வு



இரண்டரை ஆண்டுகள் தொடர் ஆராய்ச்சிக்கு பின், குறைந்த விலையில், வெற்றி கரமாக நாப்கின் தயாரிக்கிறார். அதற்கான இயந்திரங்களையும், அவரே வடிவமைத்துள்ளார். சாதாரணமாக, நாப்கின் தயாரிக்க வேண்டுமானால், அதற்கு, 3.5 கோடி ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்களை வாங்க வேண்டும்.

ஆனால், முருகானந்தம் தயாரித்த இயந்திரத்தின் செலவு, வெறும், 65 ஆயிரம் ரூபாய் மட்டுமே.இவரின் தளராத முயற்சியால், இப்போது நாடு முழுவதும், ஏராளமான கிராமங்களில், சுய உதவிக்குழு பெண்கள், இவரது இயந்திரங்களை பயன்படுத்தி, நாப்கின் தயாரித்து விற்று, வருவாய் ஈட்டுகின்றனர்.

''இந்தியாவை, 100 சதவீதம் நாப்கின் பயன்படுத்தும் நாடாக மாற்றுவதே நோக்கம்,'' எனக் கூறும், முருகானந்தத்தின் சேவையை பாராட்டி, மத்திய அரசு, 'பத்ம ஸ்ரீ' விருது வழங்கி பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இவரின் பெருமையை அறிந்த, 'சீனிகம், பா, ஷமிதாப்' ஆகிய படங்களை இயக்கிய, பாலிவுட் இயக்குனர், பால்கி, அக் ஷய் குமாரை வைத்து, பேடுமேன் என்ற படத்தை இயக்கிவெளியிட்டார்.

சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கும் இந்த படம், பரவலான வரவேற்பையும் பெற்றுள்ளது. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும், நடிகர் அக் ஷய் குமாருக்கு, இந்த படம், மேலும் மகுடம் சூட்டும் என்றால் ஆச்சரியமில்லை.நம்மூர் தமிழரின் கதை, பாலிவுட்டில் எடுக்கப்பட்டு, பாராட்டு பெற்று உள்ளது, கோவைக்கு கிடைத்த பெருமையாகவே பார்க்கப்படுகிறது.


பாகிஸ்தானில் தடை



பேடுமேன் படத்தை, பாக்.,கில் வெளியிட அனுமதி கோரி, அந்நாட்டு தணிக்கை வாரியத்துக்கு அனுப்பப்பட்டது.படத்தை பார்த்த, பாக்., திரைப்பட தணிக்கை வாரிய உறுப்பினர்கள், தடை செய்யப்பட்ட கருத்து அடிப்படையில் படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறி, சான்றிதழ் வழங்க மறுத்துவிட்டனர்.

இது குறித்து, அவர்கள் கூறுகையில், 'கலாசாரம், சமூகம் அல்லது மதத்திற்கு எதிரான விஷயங்களில் தயாரான படங்களை வெளியிட அனுமதிக்க முடியாது' என்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை