என்ன ஒரு சிரிப்பு!| Dinamalar

என்ன ஒரு சிரிப்பு!

Updated : பிப் 11, 2018 | Added : பிப் 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
 டில்லி உஷ், ரேணுகா சவுத்ரி,  ஜனாதிபதி உரை, பிரதமர் மோடி, காங்கிரஸ், அதிமுக எம்.பி., வெங்கையா நாயுடு, ராஜ்யசபா

டில்லி அரசியல் வட்டாரங்களில் இப்போது அதிகமாக விவாதிக்கப்படும் விஷயம் சிரிப்பு; அது ஆணவ சிரிப்பா, சாதாரண சிரிப்பா என விவாதங்கள் நடக்கின்றன. இந்த சிரிப்பின் சொந்தக்காரர் காங்கிரஸ், எம்.பி., ரேணுகா சவுத்ரி.
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து, பிரதமர் மோடி ராஜ்யசபாவில் பேசியபோது, பெரும் சத்தத்துடன் சிரித்தார், ரேணுகா. கடுப்பான, சபை தலைவர் வெங்கையா நாயுடு, ரேணுகாவைப் பார்த்து, 'டாக்டரைப் போய் பாருங்கள்' என்றார்.பிரதமரோ, 'அவரைத் தடுக்க வேண்டாம்; ராமாயணம் தொடருக்குப் பின், இப்போது தான் இந்த சிரிப்பைக் கேட்க முடிகிறது' என, சிரித்தபடியே கூறினார். உடனே, ஒட்டுமொத்த சபையும் சிரித்தது.'பிரதமர் என்ன சொல்ல வருகிறார். ராமாயணத்தில் சூர்ப்பனகை சிரித்ததை சொல்கிறாரா; அப்படியானால் ரேணுகாவை சூர்ப்பனகை என்கிறாரா...' என, சமூக வலைதளங்களில் விவாதம் களைகட்டியது.காங்கிரஸ் மற்றும் இந்த கட்சியைச் சார்ந்த மகளிர் அமைப்புகள், 'பெண்களுக்கு எதிராக பிரதமர் பேசுகிறார்' என, பிரசாரம் செய்யத் துவங்கின.
ரேணுகா சவுத்ரி, அதிரடி அரசியல் செய்து வருபவர். ஒரு முறை டிராக்டரை இவரே ஓட்டிக் கொண்டு, பார்லிமென்டிற்கு வந்தார். பிரதமரின் கிண்டல், இவரை கோபமடைய வைத்துள்ளது. மோடிக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என யோசித்து வருகிறார்.'உங்களின் எம்.பி., பதவி, ஏப்ரல் மாதத்தில் முடிவடைகிறது; எனவே, இப்போதே பதவியை ராஜினாமா செய்து, சிரிப்பு விஷயத்தில் எதிர்ப்பைக் காட்டுங்கள்' என, காங்கிரசார் இவரிடம் ஆலோசனை சொல்ல, 'அதெல்லாம் முடியாது' என, மறுத்து விட்டாராம், ரேணுகா.


வாயை மூடி பேசவும்!

'ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு, எதிர்க்கட்சி, எம்.பி.,க்கள் சபையில் பேச வாய்ப்பு தருவதில்லை' என, புகார் எழுந்துள்ளது. இதற்காக, வெங்கையா நாயுடுவை கண்டித்து, எதிர்க்கட்சியினர், ராஜ்யசபாவில் வெளிநடப்பும் செய்தனர்.இந்த வெளிநடப்பில், அ.தி.மு.க.,வும் பங்கேற்றதா என அப்போது சரியாக தெரியவில்லை. இது குறித்து அந்த கட்சி, எம்.பி.,க்களிடம் கேட்டபோது, 'வெளிநடப்பு செய்வதா; நாங்க நல்லா இருக்கிறது உங்களுக்கு பிடிக்கவில்லையா? ஏற்கனவே எங்க அமைச்சர் மற்றும் கட்சிக்காரர்கள் மீது, மத்திய அரசு அமைப்புகள் சோதனை நடத்தியுள்ளன. 'இதில், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அரசிடம் உள்ளன; அப்படியிருக்கும்போது, நாங்கள் வெளிநடப்பு செய்தால், பழைய வழக்குகள் உயிர் பெறும். எதற்கு வம்பு; வாயை மூடி இருப்பது தான் நல்லது' என்கின்றனர்.
மற்றொரு பக்கம், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், தனித்தனியாகவே பார்லிமென்டில் வலம் வருகின்றனர். பார்லிமென்ட் சென்ட்ரல் ஹால், எம்.பி.,க்கள் அரட்டை அடிக்கும் இடமாக உள்ளது. இங்கு கூட, அ.தி.மு.க., - எம்.பி.,க் களை ஒன்றாக பார்க்க முடிவதில்லை. இதில், தன்னந்தனியாக தெரிபவர், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன். த.மா.கா.,வில் இருந்து, அ.தி.மு.க.,வுக்கு வந்தவர் என்பதால், அ.தி.மு.க.,வினர், இவரை கண்டுகொள்வது இல்லை.
சென்ட்ரல் ஹாலுக்கு, எஸ்.ஆர்.பி., வந்தாலும், தனியாகத்தான் இருக்கிறார். சபையில் பேச உத்தரவு வந்தால் பேசுகிறார். மற்ற, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், ஆளும் கட்சியான, பா.ஜ.,வுக்கு எதிராக வாயே திறப்பது இல்லை. எஸ்.ஆர்.பி., காங்கிரஸ்காரர் என்பதால், பா.ஜ.,வை எதிர்த்து தான் பேசுகிறார்.இதனாலேயே, இவர் பக்கம், அ.தி.மு.க., வினர் திரும்புவது இல்லை. 'எத்தனை நாள் எங்க ஆட்சி தமிழகத்தில் நிலைக்கும் என தெரியவில்லை; எனவே, அமைதியை கடைபிடிப்பது தான் எங்களுக்கு நல்லது' என்கின்றனர், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை