குஜராத்தில் சாலை, குடிநீர் வசதிகள் மோசம்: லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை காட்டம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குஜராத்தில் சாலை, குடிநீர் வசதிகள் மோசம்: லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை காட்டம்

Added : பிப் 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: ''குஜராத் மாநிலத்தில் சாலை, குடிநீர் வசதி மோசமாக உள்ளது,'' என, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார்.
கரூர் அருகே, வீரராக்கியத்தில், அ.தி.மு.க., கொடியேற்று விழா நேற்று நடந்தது. அதில் பங்கேற்ற, துணை சபாநாயகர் தம்பிதுரை பேசியதாவது: எம்.பி., தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டு, சட்டசபை தேர்தலுக்கு மூன்று ஆண்டுகள் உள்ளன. உங்களை தேர்தலுக்காக சந்திக்க வரவில்லை. அதனால், யாரும் பயப்பட வேண்டாம். அடிக்கடி உங்களை சந்தித்து வந்தேன். கடந்த, ஓராண்டாக உங்களை சந்திக்க முடியவில்லை. காரணம், ஜெயலலிதா மறைவு, கட்சியில் ஏற்பட்ட பிரச்னைகள்தான். தற்போது, கட்சியில் அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்பட்டுள்ளன. கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு ஒரு தெளிவு பிறந்துள்ளது. முதல்வர், துணை முதல்வர் இருவரும் கட்சி, ஆட்சியை சிறப்பாக வழிநடத்தி வருகின்றனர். லோக்சபா துணை சபாநாயகர் என்ற முறையில், நாடு முழுவதும் சென்று வருகிறேன். பிரதமர் மோடியின், சொந்த மாநிலத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி படுமோசமாக உள்ளது. ஆனால், தமிழகத்தில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பூர்த்தியடைந்துள்ளன. அதற்கு காரணம், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா திட்டங்கள்தான். அ.தி.மு.க., என்ற கட்சி இல்லை என்றால், நடுத்தெருவில்தான் நிற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X