கேரளாவிற்கு கடத்தப்படும் ரேஷன் அரிசி; உதவியாக இருக்கும் தமிழக அரசு பஸ்கள் Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கேரளாவிற்கு கடத்தப்படும் ரேஷன் அரிசி
உதவியாக இருக்கும் தமிழக அரசு பஸ்கள்

மூணாறு : தேனி மாவட்டம், போடிமெட்டு வழியாக கேரளாவிற்கு, தமிழக அரசு பஸ்களில், இலவச ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது.

கேரளாவிற்கு கடத்தப்படும் ரேஷன் அரிசி; உதவியாக இருக்கும் தமிழக அரசு பஸ்கள்


கேரளாவின் எல்லையோரம் உள்ள இடுக்கி மாவட்டத்திற்கு, தமிழகத்தில் இருந்து இலவச ரேஷன் அரிசி கடத்தல் அதிகரித்துள்ளது. கம்பம் மெட்டு, போடிமெட்டு வழித்தடங்களில் கூடுதலாக கடத்தப்படுகின்றன.

டிரைவர் உதவி


தனியார் வாகனங்களைக் காட்டிலும், தமிழக அரசு பஸ்களில், அதன் ஊழியர்களின்

உதவியுடன் வெகு, 'ஜோராக' கடத்தல் நடக்கிறது. போடிமெட்டு வழியாக கடத்தும் அரிசி, நகர் பகுதி பஸ்களில் ஏற்றப்படுவதுஇல்லை.

5 மூட்டை


முன் கூட்டியே ஆட்டோக்களில் கொண்டு வரப்பட்டு, வரும் வழியில் பஸ்களில் ஏற்றப்படுகிறது. அதற்கு டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் வசதி செய்து கொடுக்கின்றனர். தேனியில் இருந்து, நேற்று முன்தினம் காலை, 10:40 மணிக்கு புறப்பட்ட பஸ், முந்தல் அருகே வந்த போது, ஆட்டோவில் தயாராக இருந்த ஐந்து மூட்டை ரேஷன் அரிசி ஏற்றப்பட்டது.

இதை, பெண் ஒருவர் கடத்தி வந்து, ராஜாக்காட்டில் இறக்கினார். அதற்கு ஏதுவாக டிரைவர் மற்றும் கண்டக்டர் செயல்பட்டதால், பஸ் சற்று தாமதமாக மூணாறு வந்து சேர்ந்தது. தேனியில் இருந்து வரும் போது, முந்தல் மற்றும் போடிமெட்டு பகுதிகளில், போலீஸ் சோதனைச் சாவடிகள் உள்ளன. அவை பெயரளவுக்கு மட்டும் செயல்படுவதால், எவ்வித பயனும் இல்லை.

Advertisement

நடவடிக்கை


குறிப்பாக, 'சில்லரை'க் காக தனியார் வாகனங்களை மட்டும் குறி வைப்பதால், அரசு பஸ்களை கண்டு கொள்வது இல்லை. ஆகவே,கடத்தல்காரர்களின் நோக்கம்எளிதில் நிறைவேறிவிடுகிறது.தேனி மாவட்ட நிர்வாகம், கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravichandran Narayanaswamy - chennai,இந்தியா
14-பிப்-201809:32:14 IST Report Abuse

Ravichandran Narayanaswamyகேரளா ... தமிழ்நாட்டிலிருந்து அரிசி, மணல், எல்லாவற்றையும் திருடுகின்றன - அதற்கு எதற்கு ஒரு கேடுகெட்ட ஒரு ஆட்சி - கம்யூனிஸ்ட்காரனால் இப்படி தான் அண்டை மாநிலத்தில் திருடிதான் பிழைப்பானா வெக்கமாயில்லை

Rate this:
r.sundaram - tirunelveli,இந்தியா
12-பிப்-201815:19:00 IST Report Abuse

r.sundaramஇந்த சோதனைசாவடிகளே தமிழகத்தின் தொல்லை. இலவச ரேஷன் அரிசி வெளியில் போவதை தடுப்பதில்லை. அதேபோல் கேரளா ஆஸ்பத்திரி கழிவுகள் தமிழ்நாட்டுக்குள் வருவதையும் இவர்கள் தடுப்பதில்லை. எதிலும் எங்கும் சில்லறை பார்ப்பதிலேயே குறி.

Rate this:
christ - chennai,இந்தியா
12-பிப்-201813:38:53 IST Report Abuse

christமக்களின் வரிப்பணம் இலவசம் என்கிற பெயரில் வீணடிக்கப்படுகிறது

Rate this:
12-பிப்-201812:24:41 IST Report Abuse

ருத்ராயாரும் வாங்கவில்லை என்றால் மதிய உணவுகூடங்களுக்கு தரலாமே. மக்களுக்கான அரிசியை கடத்துபவர்களை நாடுகடத்த வேண்டும்.

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
12-பிப்-201809:00:05 IST Report Abuse

Srinivasan Kannaiyaதிருட்டு தொழிலை திராவிடர்கள் விட போவதில்லை... தயவு செய்து ரேஷனை எடுத்து விடுங்கள்... வசதியை பொறுத்த மக்கள் வேண்டிய இடத்தில் வாங்கிக்கொள்ளுவார்கள்..

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
12-பிப்-201804:32:18 IST Report Abuse

Kasimani Baskaranசேட்டன்களுடன் சேர்ந்து சேட்டை செய்த பன்றிகளை அடையாளம் கண்டு சிரச்சேதம் செய்யவேண்டும்...

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement