வெளிநாடு செல்ல ஸ்தபதிக்கு போலீஸ் தடை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வெளிநாடு செல்ல ஸ்தபதிக்கு போலீஸ் தடை

Added : பிப் 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

திருச்சி: காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சிலை செய்ய வசூலித்த தங்கத்தில், முறைகேடு செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட, ஸ்தபதி முத்தையா, வெளிநாடு செல்ல, தடை விதிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், சோமஸ்கந்தர் சிலை செய்ய உபயதாரர்களிடம் வசூலித்த தங்கத்தில், முறைகேடு நடந்துள்ளதாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார், சிலை செய்த ஸ்தபதி முத்தையாவை தேடினர். கைதிலிருந்து தப்பிக்க, சென்னை உயர் நீதிமன்றத்தில், முன் ஜாமின் கேட்டு, முத்தையா மனு தாக்கல் செய்தார். ஆனால், திருச்சியில் உள்ள, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸ் அலுவலகத்தில், பிப்., 2ம் தேதி முதல், 10 நாட்கள் ஆஜராகி, விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என, முத்தையாவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, 11ம் தேதி வரை, ஸ்தபதி முத்தையா, தொடர்ந்து விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு, ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் மற்றும், 10 டி.எஸ்.பி.,க்கள், மாறி மாறி விசாரித்த நிலையிலும், முறைகேடு தொடர்பாக எந்த பதிலும், முத்தையா சொல்லவில்லை; விசாரணைக்கும் முழுமையாக ஒத்துழைக்கவில்லை. நீதிமன்ற உத்தரவுப்படி, 10 நாட்கள் விசாரணைக்கு ஆஜராகி, நாட்களை கடத்திவிட்டால், முன்ஜாமின் பெற்று விடலாம் என முத்தையா நம்புவதாக போலீசார் கூறினர். மேலும், முன்ஜாமின் பெற்று, வெளிநாடு தப்பிச் செல்ல, முத்தையா திட்டமிட்டுள்ளதாக, அவரது உறவினர்களிடம், சிலை தடுப்பு போலீசார் விசாரித்த போது தெரிய வந்தது. இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதியுடன், ஸ்தபதி முத்தையா வெளிநாடு செல்ல தடை விதித்து, உத்தரவு பிறப்பித்து உள்ளனர். இதனால், அவருக்கு முன்ஜாமின் கிடைத்தாலும், அவர் வெளிநாடு தப்பிச் செல்ல முடியாது என, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை