தமிழக சட்டசபையில் ஜெயலலிதா படம் திறப்பு - Jayalalitha | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக சட்டசபையில் ஜெ., படம் திறப்பு

Added : பிப் 12, 2018 | கருத்துகள் (136)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சென்னை : தமிழக சட்டசபையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் திறக்கப்பட்டுள்ளது. இப்படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார்.


11வது படமாக ஜெ.,


தமிழகத்தில் 5 முறை முதல்வராக இருந்த ஜெயலலிதாவை கவரவிக்கும் விதமாக அவரின் படத்தை திறக்க உள்ளதாக தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்திருந்தது. அதன்படி, படத்திறப்பு விழா இன்று (பிப்.,12) சட்டசபை வளாகத்தில் நடந்தது. 7 அடி உயரமும், 5 அடி அகலமும் கொண்ட ஜெ.,வின் உருவப்படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார். சென்னை கவின் கலைக் கல்லூரி மாணவர்களால் ஜெ.,வின் உருவப்படம் உருவாக்கப்பட்டது. ஏற்கனவே தமிழக சட்டசபையில் ராஜாஜி, காமராஜர் உள்ளிட்ட 10 தலைவர்களின் படங்கள் இடம்பெற்றுள்ளது. தற்போது 11வது படமாக ஜெ., படம் இடம்பெற்றுள்ளது.


எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு :


இந்த விழாவை ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.,க்கள் புறக்கணித்துள்ளனர். திமுக கூட்டணி கட்சியான காங்.,ம் இந்த விழாவை புறக்கணித்துள்ளது. சுற்றுப்பயணத்தில் இருப்பதால் சுயேட்சை எம்எல்ஏ தினகரனும் இவ்விழாவில் கலந்து கொள்ளவில்லை. திமுக இவ்விழாவை புறக்கணித்ததால், திமுக எம்.எல்.ஏ.,க்களின் இருக்கைகள் அதிமுக எம்.பி.,க்கள் , நீதிபதிகள், அதிமுக நிர்வாகிகள் ஆகியோருக்கும் திமுக எம்.எல்.ஏ.,க்களின் இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தது.

Advertisement
வாசகர் கருத்து (136)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Rajan - Auckland,நியூ சிலாந்து
13-பிப்-201801:28:26 IST Report Abuse
S. Rajan படத்தின்முன் நிமிர்ந்துநிற்கிறார்கள் . என்ன தைரியம் அடிமைகளுக்கு?
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
12-பிப்-201823:52:44 IST Report Abuse
Mani . V ஜெயலலிதா ஒரு சிறந்த நிர்வாகி என்பதிலும், தலை சிறந்த அரசியல் தலைவி என்பதிலும் மாறுபட்ட கருத்து இல்லை. இருந்தாலும் அவர் நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டவர். அப்படி இருக்கையில் அவரின் புகைப்படத்தை சட்டசபையில் திறந்து வைப்பது ஒரு தவறான முன்னுதாரணம். ஒரு மாநிலத்தில் முதல்வர் தன் மீதும், தன் கட்சி சார்ந்தவர்கள் மீதும் இருந்த அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து கொள்கிறார். இப்படி இருக்கையில் நீதிமன்றங்கள் தேவையா? என்ற சந்தேகம் எழுகிறது.
Rate this:
Share this comment
Cancel
Nellai Vendhan - Tirunelveli,இந்தியா
12-பிப்-201820:39:21 IST Report Abuse
Nellai Vendhan இன்று ஜெ விற்கு எதிராக கருத்து கூறும் பலரிடம் ஒன்று கேட்கிறேன் அவர் இருந்த வரை அண்டை மாநிலங்கள் முதல் மத்திய அரசு வரை தமிழகத்திற்க்கெதிராக செயல் பட பயந்தனர். ஜெ ஒருபோதும் தமிழக நலனை விட்டு கொடுத்தவர் இல்லை. காவிரி தீர்ப்பு முதல் முல்லை பெரியார் தீர்ப்பு வரை அனைத்தையும் வென்று காட்டியவர். இன்று அவரால் பயன் பெறாத ஒரு குடும்பம் தமிழகத்தில் இருக்குமா என்பது சந்தேகமே. அவர் உயிருடன் இருந்த வரை நிரபராதியாகவே இருந்தார். விசாரணை முடிந்து ஒரு வருடம் வரை தீர்ப்பு சொல்லப்படாதது ஏன்? சசிகலா பதவி ஏற்க போனதாக அறிந்ததுமே தீர்ப்பு வழங்கப்பட்டது. உயிரோட இருந்த போதும் விமர்சிக்கப்பட்ட ஒரு பெண் இறந்தும் விமர்சிக்கப்படுவது பெரும் வேதனை. இன்று இருக்கும் பல அரசியல்வியாதிகளை விட அவர் மிகவும் மேன்மையானவரே சில குறைகள் இருந்தாலும்.
Rate this:
Share this comment
GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா
12-பிப்-201821:45:47 IST Report Abuse
GB.ரிஸ்வான் வரவேற்கிறேன் சகோ நெல்லை வேந்தன்...
Rate this:
Share this comment
Sangeedamo - Karaikal,இந்தியா
13-பிப்-201811:41:29 IST Report Abuse
Sangeedamoஇந்த வேதனை எல்லோர் மனதிலும் இருப்பது உண்மையே அம்மையார் நிரபராதியாகத்தான் இருந்தார் நிரபராதியாகத்தான் மறைந்தார் அவரச கதியில் சசிகலா மேல் மக்களுக்கு இருந்த வெறுப்பையும், அவர் பதவியேற்றுவிடக்கூடாது என்கின்ற பயத்திலும் தான் சசிகலாவை சிறைக்கு அனுப்பவேண்டும் என்ற கட்டாயத்திலும், தமிழ் நாடு மன்னார்குடி கும்பலிடம் அகப்பட்டுவிட கூடாது என்பதற்காக திருத்தி அமைக்கப்பட்ட தீர்ப்பு இது என்பதும் மக்கள் நன்கு அறிவர்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X