'அனைத்து திட்டங்களும் ஜெ., வழியில் நிறைவேற்றம்' Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'அனைத்து திட்டங்களும்
ஜெ., வழியில் நிறைவேற்றம்'

''ஜெ., வழியில், அனைத்து நலத்திட்டங்களும், சிறு துளி கூட மாறாமல், சிறப்பாக செயல்படுத்தப்படுகின்றன,'' என, முதல்வர் பழனிசாமி கூறினார்.

A.D.M.K,Jayalalithaa,அ.தி.மு.க,ஜெயலலிதா


தமிழக சட்டசபையில், நேற்று நடந்த, ஜெ., உருவப்பட திறப்பு விழாவிற்கு, தலைமை வகித்து, அவர் பேசியதாவது:தனக்கென ஒரு வாழ்க்கையை அமைக்காமல், தமிழக நலன் கருதி உழைத்தவர், ஜெயலலிதா. அவரின் ஆட்சிக் காலத்தில், பல சாதனைகள் புரிந்தார்.

அவரது மறைவு,அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தி விட்டது. 'தேசியமும், தெய்வீகமும் இரு கண்கள்' என்ற, பொன்மொழியை வாழ்நாள் முழுவதும் கடைபிடித்தவர் அவர்.

ஒற்றுமையை காப்போம்


சட்டசபையில், த.மா.கா., உறுப்பினர் ஒருவர், மத்தியில் இருந்த, காங்., அரசு, நிதி தராததை சுட்டிக்காட்டி, தேச ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், வார்த்தை ஒன்றை பேசினார். அதை, நீக்க வேண்டும் என, காங்., உறுப்பினர்கள் கோரினர்.அப்போது பேசிய, ஜெ., 'பிரிவினை கொள்கையில், எங்களுக்கு நம்பிக்கை இல்லை. நாட்டின் ஒற்றுமையை என்றும் காப்போம்' என்றார். அவரது வழியில், சிறு துளி கூட மாறாமல், அனைத்து நலத்திட்டங்களையும், இந்த அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.

முன்னிலை வகித்த, துணை முதல்வர், பன்னீர்செல்வம் பேசியதாவது: இந்த ஆட்சியை, மாற்றார் கபளீகரம் செய்ய விடாமல் தடுத்து நிறுத்தினோம். 'இந்த ஆட்சி நீடிக்காது' என, அவர்கள் சொன்ன ஆரூடத்தை, தவிடுபொடியாக்கி, ஜெ., ஆட்சியே தொடரும் வரலாற்றை ஏற்படுத்தி உள்ளோம்.

எதிர்க்கட்சிகளின் ஆணவப் போக்கை அடக்கி, சட்டசபையை ஆற்றலோடு நடத்த முடியும் என,நிரூபித்து உள்ளோம்.இந்த ஆண்டும், அடுத்தாண்டும், அதற்கடுத்த ஆண்டிலும், ஜெ., அரசு தான், பட்ஜெட்டை தாக்கல் செய்யும். இந்த ஆட்சியை வழிநடத்தும் சிறப்பான பயிற்சியை, ஜெ., எங்களுக்கு வழங்கி உள்ளார். இன்னும், 100

Advertisement

ஆண்டுகள், இந்த இயக்கத்தை நிலைபெறச் செய்வதே, நாம் அவருக்கு செலுத்தும் நன்றிக்கடன்.இவ்வாறு அவர் பேசினார்.

சபைக்கு பெருமை


ஜெ., உருவப்படத்தை திறந்து வைத்த, சபாநாயகர் தனபால் பேசியதாவது: தமிழகத்தை சீர்படுத்துவதில், தன் வாழ்க்கையை அர்ப்பணித்த தலைவர்கள் வரிசையில், இறந்தும் இறவா புகழ் பெற்ற, முன்னாள் முதல்வரின் உருவப்படத்தை திறந்து வைக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறோம்.

சபை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது, முதல்வராக இருந்தாலும், உறுப்பினர் என்ற முறையில், ஜெ., தன் கடமையை சரியாக ஆற்றினார். அதற்காக, இந்த சபை பெருமை கொள்கிறது. அவரது நடவடிக்கைகள் நமக்கெல்லாம் பாடம். அவரை பெற்றிருந்ததற்காக, இந்த சபை பெருமை அடைகிறது. அவர் காட்டிய பாதையில், தமிழகத்தை வளர்ச்சி பாதையில்,அழைத்துச் செல்வோம். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவின் நிறைவில், முதல்வர் பழனிசாமிக்கு, ஜெ., உருவம் பொறித்த நினைவுக் கேடயத்தை, சபாநாயகர் தனபால் வழங்கினார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D.Ratnam - Chennai,இந்தியா
13-பிப்-201816:29:59 IST Report Abuse

Vijay D.Ratnamகுடும்ப அரசியல், பரம்பரை அரசியல் நடத்த முயன்ற மன்னார்குடி மாஃபியாவை அதிமுகவினர் ஒழித்து காட்டியது போல அதை விட நூறு மடங்கு பெரிய திருக்குவளை மாஃபியாவை திமுகவினர் ஒழித்துக்கட்டவேண்டும். விட்டால் அரசியல் தலைவர்களின் மவன் மவள், மருமகள் பேரன் பேத்திக்கெல்லாம் அரிப்பெடுக்க பதவி அரிப்பெடுக்க தொடங்கிடும்.

Rate this:
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
13-பிப்-201816:27:31 IST Report Abuse

தமிழர்நீதி 'ஜெ., வழியில் ஆறுகளில் மணல் கொள்ளை ,சாலைபோட்டால் 43 % கமிஷன் , வேலைகொடுத்தால் ஊழல் ,இடம் மாறுதல் என்றால் லஞ்சம் , காகிதத்தில் நிறைவேறும் திட்டம் என்று அனைத்து நலத்திட்டங்களும், உச்சநீதிமன்றம் சொத்துகுவிப்பு வழக்கில் நாலு வருடம் சிறையும் 100 கோடி தண்டனையும் கொடுக்கும் அளவுக்கு சிறு துளி கூட மாறாமல், சிறப்பாக செயல்படுத்தப்படுகின்றன மோடி கண்காணிப்பில் .

Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
13-பிப்-201816:14:57 IST Report Abuse

Malick Rajaஎவ்வளவு சொன்னாலும் இவருக்கு மட்டும் ஊரறிந்த இல்லை உலகறிந்த உண்மை காலம் கனியும் ..

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
13-பிப்-201815:27:48 IST Report Abuse

Endrum Indian'அனைத்து திட்டங்களும் ஜெ., வழியில் நிறைவேற்றம்' எவ்வளவு அழகாக கொள்ளை, ஊழலே எங்கள் தலையாய கொள்கை என்பதை சொல்லியிருக்கின்றார்.

Rate this:
Thiyagarajan - Bangalore,இந்தியா
13-பிப்-201812:50:22 IST Report Abuse

Thiyagarajanநல்லது செய்தால் மக்கள் வாக்களிப்பர்.

Rate this:
rajan - kerala,இந்தியா
13-பிப்-201812:30:02 IST Report Abuse

rajanசபாஸ் அண்ணே அம்மா வழி ஆட்சி, திட்டம்னு சொல்லி வேறும் ஸ்கூடர் படத்தை காட்டி 5000 ருபா பிரிப்பு, ரேசன் கடை பணி நியமனம் ருவா 6 லட்சம் பிரிப்பு. ஆட்சி ரொம்பா கோலாகமா நடக்குதப்பா பழனி முருகா

Rate this:
rajan - kerala,இந்தியா
13-பிப்-201811:11:22 IST Report Abuse

rajanஅப்போ கட்டிங் வாங்க எந்த திட்டமும் நிறைவேறாதோ?

Rate this:
கைப்புள்ள - nj,இந்தியா
13-பிப்-201810:04:10 IST Report Abuse

கைப்புள்ளஎன்றைக்கு ஜெ., போனார்களோ அன்றைக்கே அ.தி.மு.க கலைக்க பட வேண்டும் என்பதே என் அவா. அ.தி.மு.க பெயரை சொல்லி கொள்ளை அடிப்பார்கள் தவிர ஜெ., போன்ற சிந்தனையுடன் ஒரு போதும் ஆட்சி கொடுக்க யாராலும் முடியாது.

Rate this:
R Sanjay - Chennai,இந்தியா
13-பிப்-201814:28:44 IST Report Abuse

R Sanjayநன்று, நன்றாககூறினீர்கள், என் கருத்தும் அதே...

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-பிப்-201808:53:08 IST Report Abuse

Srinivasan Kannaiyaஜெ., வழியில் நிறைவேற்றம்'...அதற்க்கு சசி மாதிரி ஒருவர் வேண்டுமே.... யாரை பிடித்து இருக்கிறீர்கள்... பன்னீரா...?

Rate this:
H Jothi - Delhi,இந்தியா
13-பிப்-201808:50:16 IST Report Abuse

H Jothiஜே நலத்திட்டம் சரி, நாட்டு நலத்திட்டம் எப்போ?

Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement