போலச்சேரி கிராமத்தில் கொள்ளையர்கள் தினந்தினம்... அட்டகாசம்! பயத்தில் உறைந்து போயுள்ள அப்பார்ட்மென்ட்வாசிகள்| Dinamalar

தமிழ்நாடு

போலச்சேரி கிராமத்தில் கொள்ளையர்கள் தினந்தினம்... அட்டகாசம்! பயத்தில் உறைந்து போயுள்ள அப்பார்ட்மென்ட்வாசிகள்

Added : பிப் 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

போலச்சேரி : பொன்மார் ஊராட்சி, போலச்சேரி கிராமத்திலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் தொடர் கொள்ளை சம்பவங்கள் நடப்பதாக, அப்பகுதிவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர். கொள்ளையர்களின் படங்கள், கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி, அவை போலீசார் வசம் இருந்தும், கொள்ளையர்களை இன்னமும் பிடிக்கவில்லை என, ஆதங்கப்படுகின்றன.
திருப்போரூர் ஒன்றியம், பொன்மார் ஊராட்சியில், போலச்சேரி கிராமம் உள்ளது. இங்கு, குறுகிய காலகட்டத்தில், 5க்கும் மேற்பட்ட அப்பார்ட்மென்ட் டுகள் ஏற்பட்டுள்ளன.இவற்றில், 2,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. பிரபல தனியார் கல்லுாரிகள், பள்ளிகள் மற்றும் சிறுசேரி, 'சிப்காட்' தகவல் தொழில்நுட்ப பூங்கா என, அனைத்திற்கும் இந்த பகுதி அருகில் இருப்பதால், மேற்கூறியவற்றில் பணிபுரிபவர்களில் பெரும்பாலானோர் இங்குள்ள அப்பார்ட்மென்ட்டுகளில் தங்கியுள்ளனர்.இங்குள்ள, அமைதி, பணிபுரியும் இடம் அருகாமை போன்றவை, இங்குள்ளோருக்கு இதமான சூழலை ஏற்படுத்தியது.

திடீரென வந்த திகில்:
இவ்வாறு, வேலை, குடும்பம் என, நிம்மதியாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு, சில மாதங்களாக அடுத்தடுத்து ஏற்பட்ட நிகழ்வுகள், திகிலை ஏற்படுத்திஉள்ளது. ஓர் அப்பார்ட்மென்ட்டில், மூன்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவங்களால், குடியிருப்புவாசிகள் ஆடிப்போயுள்ளனர்.ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள அப்பார்ட்மென்ட்டுகளில், ஒரு குடும்பத்தில் எத்தனை பேர் உள்ளனர்; அதில் எத்தனை பேர் வேலைக்கு செல்கின்றனர்; வீட்டில் நாள் முழுக்க யார் இருக்கின்றனர் போன்றவற்றை அறியும் கொள்ளையர்கள், கொள்ளையில் ஈடுபடுகின்றனர்.

'சிசிடிவி' பதிவுகள்:அப்பார்ட்மென்ட்டுகளில், பாதுகாப்பு கருதி ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ள, 'சிசிடிவி' கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகள், திகிலை ஏற்படுத்துகின்றன. உள்ளாடைகள் மட்டும் அணிந்தபடி உடல் முழுக்க எண்ணெய் தடவிக்கொண்டு, நள்ளிரவில், கையில் ஆயுதங்களுடன் சிலர் அப்பார்ட்மென்ட் உட்பகுதியில், கொள்ளையடிக்கும் நோக்கத்தில் சுற்றித்திரியும் காட்சிகள் பதிவாகியுள்ளன.இதைக் கண்ட குடியிருப்புவாசிகள் இரவு நேரம் வந்தாலே, பயத்துடன் காணப்படுகின்றனர்.

போலீஸ் ரோந்து:கொள்ளை முயற்சி மற்றும் கொள்ளை குறித்து, சிசிடிவி பதிவுகளுடன், தாழம்பூர் போலீசாருக்கு அப்பார்ட்மென்ட்வாசிகள் புகார் அளித்து உள்ளனர். இதையடுத்து, தாழம்பூர் போலீசார் அப்பகுதியில் இரவு நேரங்களில் ரோந்து வருகின்றனர். மேலும், இப்பகுதி இளைஞர்களும் குழு அமைத்து இரவு நேரங்களில் காவலில் ஈடுபடுகின்றனர். இது எல்லாவற்றையும் மீறி, மூன்று நாட்களுக்கு முன், வெளியூர் சென்ற ஒருவரின் வீட்டில், கொள்ளை நடந்துள்ளது.

கொள்ளை சம்பவம், வசிப்போரின் உயிருக்கும், உடைமைகளுக்கும், பாதுகாப்பு இல்லாத உணர்வை, குடியிருப்புவாசிகளுக்கு ஏற்படுத்தியுள்ளது. இதனால், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தினால், குற்றவாளிகளை பிடித்து விடுவோம் என கூறும் போலீசாரின் உறுதி, வெற்று பேச்சாக போயுள்ளது.

குடியிருப்பு வாசிகள் சந்தேகம்:
இப்பகுதிக்கு கட்டுமான பணிகள் நடக்கின்றன. அங்கு, 2,000க்கும் மேற்பட்ட வட மாநில இளைஞர்கள் வேலை செய்கின்றனர். இவர்கள், இரவு நேரங்களில் அதிகளவில் இங்குள்ள பகுதிகளில் சுற்றி திரிகின்றனர். மேலும், கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள நபர்கள், கைகளிலும், கால்களிலும், தாயத்து போல ஏதோ ஒன்றை கட்டியுள்ளனர். முகமும், வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் போலத் தான் உள்ளது. இவற்றை பார்க்கும் போது, கொள்ளையில் ஈடுபடுபவர்கள், வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் தான் என்ற சந்தேகம் எழுவதாக, அப்பார்ட்மென்ட்வாசிகள் கூறுகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை