கிடப்பில் இருந்த பட்டாபிராம் ரயில்வே மேம்பால பணி... துவக்கம்! சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் நெரிசலுக்கு தீர்வு| Dinamalar

தமிழ்நாடு

கிடப்பில் இருந்த பட்டாபிராம் ரயில்வே மேம்பால பணி... துவக்கம்! சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் நெரிசலுக்கு தீர்வு

Added : பிப் 12, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
கிடப்பில் இருந்த பட்டாபிராம் ரயில்வே மேம்பால பணி... துவக்கம்! சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் நெரிசலுக்கு தீர்வு

சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில், பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த, பட்டாபிராம் ரயில்வே மேம்பால பணிகள், தற்போது துவங்கப்பட்டு உள்ளன.

முதல்கட்டமாக, ரயில்வே துறை பணி துவங்கிய நிலையில், மார்ச் மாதத்திற்கு பிறகு, போக்குவரத்து மாற்றங்கள் முறையாக அறிவிக்கப்பட்டு, நெடுஞ்சாலைத் துறை, முழுவீச்சில் பணி துவங்க, முடிவு செய்து உள்ளது.

சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில், பட்டாபிராமில் எல்.சி., - 2, ரயில்வே கேட் உள்ளது. இந்த ரயில்வே, நாள் ஒன்றுக்கு, 38 முறை, திறந்து மூடப்படும். ஒருமுறை கேட் மூடப்பட்டதால், ரயில்கள் சென்ற பிறகு திறக்க, 7 முதல், 10 நிமிடங்கள் வரை ஆகும். கேட், அடிக்கடி மூடப்படுவதால், வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து, கடுமையான நெரிசல் ஏற்படும்.

இதனால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் முதல், பணிக்கு செல்வோர் வரை, அனைத்து தரப்பினரும், குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வந்தது.இந்த நெரிசலுக்கு தீர்வாக, பட்டாபிராமில், ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்தது. இதற்காக, 2016ல், 38 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மேம்பாலம் அமைக்க, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் திட்டம் வகுத்தனர்.
மேம்பாலம் அமைக்க, முதல்கட்டமாக, மண் பரிசோதனை செய்யப்பட்டது. நிதி ஒதுக்கீடு இல்லாததால், பரிசோதனையுடன், மேம்பால திட்டம் கிடப்பில் போடப்பட்டது.இந்நிலையில், 52 கோடி ரூபாய் செலவில், பட்டாபிராமில் மேம்பாலம் அமைக்க, தமிழக அரசு, ஒப்புதல் அளித்தது. இதில், ரயில்வே தண்டவாளம் அமைந்துள்ள பகுதியில் மட்டும், மேம்பால பணிகளுக்கு, 11 கோடி ரூபாய் செலவாகும். இந்த பணியை ரயில்வே துறை செய்யும். நெடுஞ்சாலைத் துறை, 31 கோடி ரூபாய் செலவில், மீத பணிகளை மேற்கொள்ளும்.

இதில், நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு, 10 கோடி ரூபாய் செலவாகும். மேம்பால பணிகளுக்காக சிறிதளவு அரசு துறைகளுக்கு சொந்தமான நிலமும், 4,000 சதுர மீட்டர், தனியாருக்கு சொந்தமான நிலங்களும், கையகப்படுத்தப்பட உள்ளன. ரயில்வே துறை, இரண்டு மாதங்களாக, மேம்பால பணிகளை துவங்குவதற்கான, ஆயத்த பணிகளை மேற்கொண்டது. தற்போது, பணிகளுக்கு தேவையான வாகனங்கள், இரும்பு கம்பிகள், வரவழைக்கப்பட்டு, மேம்பால பணிகள், துவங்கப்பட்டு உள்ளன.

நெடுஞ்சாலைத் துறை, ஜனவரி மாத இறுதியில், மேம்பால பணிகளுக்கான டெண்டர் கோரியது. ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு, மார்ச் இறுதியில் பணிகள் துவங்கப்படும் என, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இப்படி தான் அமைகிறது மேம்பாலம்!
* பட்டாபிராம் ரயில்வே மேம்பாலம், இரண்டு பாதைகளில், இருவழி மேம்பாலமாக அமையும்.* இந்த மேம்பாலத்தின் நீளம், 640 மீட்டராகவும், அகலம், 24 மீட்டராகவும் இருக்கும்.* மேம்பாலத்திற்காக, மொத்தம், 17 துாண்கள் அமைக்கப்பட உள்ளன.பட்டாபிராம் ரயில்வே மேம்பால பணிக்காக, மார்ச் மாதம் முதல் போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட உள்ளது. இதன்படி, சென்னையில் இருந்து திருத்தணி, திருப்பதி செல்வோர், தண்டுரை, பட்டாபிராம் வழியாக நெமிலிச்சேரியை அடைந்து, சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் செல்லவும், திருப்பதி, திருத்தணியில் இருந்து வருவோர், ஒருவழிப்பாதையாக, ரயில்வே தண்டவாளத்தை கடந்து, தற்போதைய பாதையில் செல்லவும், ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, பின்னர் வெளியிடப்படும். இரண்டு ஆண்டுகளில் பாலப்பணி முடிக்கப்படும்.
-நெடுஞ்சாலைத் துறை அதிகாரி- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Chennai,இந்தியா
13-பிப்-201812:18:15 IST Report Abuse
Balaji இரண்டு ஆண்டு என்பது மிக நீண்ட காலம் , தற்போது உள்ள தொழில்நுட்பத்தில் 5 அல்லது 6 மாதங்களில் பணி முடிக்க முடியும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை