மாவட்டத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் 1.28 லட்சம்! முதல் சவாலுக்கு பிளஸ் 1 மாணவர்கள் தயார்| Dinamalar

தமிழ்நாடு

மாவட்டத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் 1.28 லட்சம்! முதல் சவாலுக்கு பிளஸ் 1 மாணவர்கள் தயார்

Added : பிப் 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

விழுப்புரம் மாவட்டத்தில், ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 893 மாணவ, மாணவியர் இந்தாண்டு பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதவுள்ளனர்.இவர்களில், 41 ஆயிரத்து 68 மாணவ, மாணவியர் பிளஸ் 1 பொதுத்தேர்வை முதன் முறையாக சந்திக்கின்றனர்.

தமிழகத்தில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டுமே கடந்த ஆண்டு வரை, பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வந்தது. இந்த கல்வியாண்டு முதல்,பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கும், பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி, பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1ம் தேதி துவங்கி,ஏப்., 6ம் தேதி வரை நடக்கிறது. தொடர்ந்து, பிளஸ் 1 பொதுத்தேர்வு மார்ச் 7ம் தேதி துவங்கி, ஏப்., 16ம் தேதி வரையும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 16ம் தேதி துவங்கி, ஏப்., 20ம் தேதி வரையும் நடக்கிறது.விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள, விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய கல்வி மாவட்டங்களில் பிளஸ் 2 பொதுத்தேர்வை 19,576 மாணவர்கள், 20,294 மாணவியர் என மொத்தம் 39 ஆயிரத்து 870 பேர் எழுதுகின்றனர்.
இதேபோன்று, பிளஸ் 1 பொதுத்தேர்வில் 19,647 மாணவர்கள், 21,421 மாணவிகள் என மொத்தம்41 ஆயிரத்து 68 பேர் எழுதுகின்றனர். மாவட்டத்தில் 284 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியர் 236 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.
இந்தாண்டு மாவட்டத்தில்தரம் உயர்த்தப்பட்ட 16 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் முதன்முறையாக பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 தேர்வு எழுதுகின்றனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 180 மையங்களில், 24, 047 மாணவர்கள் மற்றும் 23,908 மாணவிகள் என மொத்தம் 47 ஆயிரத்து 955 பேர் எழுதுகின்றனர்.
மாவட்டத்தில், 65,623 மாணவிகள் மற்றும் 63,270 மாணவர்கள் என மொத்தம் 1 லடசத்து 28 ஆயிரத்து 893 மாணவ, மாணவியர் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும்பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதவுள்ளனர்.
மாவட்டத்தில் பொதுத்தேர்வில் மாணவர்களைவிட, 2353 மாணவிகள் அதிகமாக தேர்வு எழுதவுள்ளனர். பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, கடந்த 2ம் தேதி துவங்கிய, செய்முறை தேர்வு இன்று 13ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
இதேபோன்று, பிளஸ் 1மாணவர்களுக்கு வரும் 15ம் தேதி துவங்கும் செய்முறை தேர்வு, வரும் 26ம் தேதி வரை நடக்கிறது. கடந்த கல்வியாண்டுகளில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள், பிளஸ் 2 வகுப்பில் மீண்டும் பொதுத்தேர்வை சந்தித்தனர்.
ஆனால், இந்தகல்வியாண்டு முதல், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 என மூன்று பொதுத்தேர்வுகளை மாணவர்கள் சந்திக்கவுள்ளனர். தமிழகத்தில், முதன் முறையாகபிளஸ் 1 தேர்விற்கு, பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டதால், இந்தாண்டு பிளஸ் 1 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இது பெரும் சவாலாக இருக்கும்.
ஆலோசனைபொதுத்தேர்வு சம்மந்தமாக, கலெக்டர் தலைமையில் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் விரைவில் உள்ளது. இந்த கூட்டத்தில், தேர்வுமையங்களுக்கான வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், பிரச்னைகளுக்குறிய தேர்வு மையங்கள், வினாத்தாள், விடை தாள் எடுத்து செல்லுதல் மற்றும் தேர்வுகண்காணிப்பு பணி உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, மாவட்ட கல்வி அலுவலர்களுடன், கலெக்டர் சுப்ரமணியன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடக்க உள்ளது.


-நமது சிறப்பு நிருபர்-

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை