'எழுதாத கேள்வியை குறிப்பிடுங்கள்'; டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் புதுமை| Dinamalar

தமிழ்நாடு

'எழுதாத கேள்வியை குறிப்பிடுங்கள்'; டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் புதுமை

Added : பிப் 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

திருப்பூர் : 'தெரியாத, விடையளிக்காத கேள்விகள் இருந்தால், அதனையும் விடைத்தாளில் குறிப்பிடுங்கள்,' என, தேர்வர்களிடம் டி.என்.பி.எஸ்.சி., அறிவுறுத்தியது.
இளநிலை உதவியாளர், வரி தண்டலர், நில அளவர், வரைவாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட 9,351 பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) நேற்று குரூப்- 4 தேர்வை நடத்தியது.முதன் முறையாக விண்ணப்பதாரர் போட்டோ, பெயர், பதிவுஎண், பிறந்ததேதி உள்ளிட்ட விபரங்கள் விடைத்தாளில் (ஓ.எம்.ஆர்., சீட்) இடம் பெற்றிருந்தது.
நேற்று நடந்த தேர்வில் புது முயற்சியாக, விடையளிக்காத கேள்விக்கென தனிபகுதி கொடுக்கப்பட்டிருந்தது. 200 வினாக்களின் நீங்கள் பதில் அளிக்காத வினா எவ்வளவு என்பதை குறிப்பிடும் படி தேர்வர்களுக்கு, தேர்வு மையத்தில் அறிவுறுத்தப்பட்டது.
இது குறித்து, தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில்,'தெரிந்த கேள்விகளுக்கு முதலில் பதில் எழுதும் தேர்வர்கள்; தெரியாத கேள்விகளுக்கு அவசர கதியில் இரண்டு இடங்களில், 'சேடோ' அடிக்கின்றனர். இதனால், தேர்வர்களுக்கு ஒரு வித பதட்டம், குழப்பம் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கவும், தெரியாதவற்றை எழுதி, நேரத்தை வீணாடிப்பதை குறைக்க, இந்த பகுதி உருவாக்கப்பட்டிருக்கலாம்,' என்றனர்.
6,743 பேர் 'ஆப்சென்ட்':
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று, டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 போட்டித்தேர்வை, 37,051 பேர் எழுதினர்; 6,743 பேர் வரவில்லை. மாவட்டத்தில், 102 இடங்களில், 140 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, 43, 794 பேர் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாவட்ட அளவில், 37 ஆயிரத்து, 051 பேர் நேற்று தேர்வு எழுதினர்.
கலெக்டர் பழனிசாமி, பல்வேறு தேர்வு மையங்களுக்கு சென்று, தேர்வு பணிகளை பார்வையிட்டார். திருப்பூர் வடக்கில், 6,507; திருப்பூர் தெற்கில், 5,915; பல்லடத்தில், 2,599; காங்கத்தில், 4,050; ஊத்துக்குளியில், 1,280; தாராபுரத்தில், 5,308; உடுமலையில், 6,769; மடத்துக்குளத்தில், 1,351; அவிநாசியில், 3,272 என, 37,051 பேர் நேற்று தேர்வு எழுதினர்; மொத்தம், 6,743 பேர் தேர்வுக்கு வரவில்லை.
மாவட்டத்தில், விண்ணப்பதாரர்களில், 84 சதவீதம் பேர் நேற்று தேர்வு எழுதினர்; 16 சதவீதம் பேர் தேர்வுக்கு வரவில்லை. அதிகபட்சமாக, உடுமலை தாலுகாவில், 1,245 பேர் தேர்வுக்கு வரவில்லை. திருப்பூர் அங்கேரிபாளையம் கொங்கு மெட்ரிக் பள்ளி, லிட்டில் பிளவர் பள்ளி, குமரன் கல்லுாரி மற்றும் அனுப்பர்பாளையம், அவிநாசி அரசு பள்ளி தேர்வு மையங்களில் கலெக்டர் பார்வையிட்டார்.
டி.ஆர்.ஓ., பிரசன்னா ராமசாமி, பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் பள்ளி, பல்லடம் அரசு பள்ளி, புளூபேர்டு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட மையங்களில், தேர்வு பணிகளை பார்வையிட்டார். சப் கலெக்டர் ஷ்ரவன்குமார், தாசில்தார்கள் கோபாலகிருஷ்ணன், சுப்பிரமணியன், சுப்பிரமணியம் உள்ளிட்டோர் ஆய்வின் போது உடனிருந்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை