மதச்சார்பற்ற வேட்பாளர்களுக்கு நாகாலாந்தில் காங்., ஆதரவு | Dinamalar

மதச்சார்பற்ற வேட்பாளர்களுக்கு நாகாலாந்தில் காங்., ஆதரவு

Added : பிப் 13, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோஹிமா: நாகாலாந்தில், தாங்கள் போட்டியிடாத இடங்களில், பா.ஜ.,வை வீழ்த்தும் நோக்கில், மதச்சார்பற்ற கட்சிகளின் வேட்பாளர்களுக்கு, ஆதரவு அளிக்கப் போவதாக, காங்., கூறியுள்ளது.வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான, நாகாலாந்தில், நாகாலாந்து மக்கள் முன்னணி தலைவர், டி.ஆர்.ஸெலியாங் முதல்வராக உள்ளார். 60 உறுப்பினர்கள் உள்ள, நாகாலாந்து சட்டசபைக்கு, 27ல் தேர்தல் நடக்க உள்ளது. இதில், காங்., 19 இடங்களில் போட்டியிடுகிறது.இது குறித்து, நாகாலாந்து, காங்., கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கை:நாகாலாந்து சட்டசபை தேர்தலில், காங்., போட்டியிடாத தொகுதிகளில், மதச்சார்பற்ற கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரிப்பதென, முடிவு செய்யப்பட்டு உள்ளது.நாகாலாந்து மக்களின் உரிமைகளில், சமரசம் செய்யக் கூடாது; மக்களின் வாழ்வியல் நடைமுறைகளில் குறுக்கீடுகள் கூடாது என்ற நோக்கில், இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.நாகாலாந்து சட்டசபை தேர்தலில், என்.டி.பி.பி., எனப்படும், தேசியவாத ஜனநாயக முன்னேற்ற கட்சியுடன், பா.ஜ., கூட்டணி அமைத்து உள்ளது. இக்கட்சி, மூன்று முறை முதல்வர் பதவி வகித்த, நெய்பியு ரியோ தலைமையில் செயல்படுகிறது. இத்தேர்தலில், பா.ஜ., 20 இடங்களிலும், என்.டி.பி.பி., 40 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-பிப்-201809:16:18 IST Report Abuse
Srinivasan Kannaiya நமக்கு இரண்டு கண்ணும் போனாலும் பரவா இல்லை எதிரிக்கு ஒரு கண் போகவேண்டும் என்று நினைக்க கூடாது... வேட்பாளர் நல்லது செய்வாரா என்று பார்த்து வாக்களிக்க வேண்டும்..
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
13-பிப்-201807:03:18 IST Report Abuse
ஆரூர் ரங் யார் மதச்சார்பற்றவர் எனும் சர்டிபிகேட் வேண்டுபவர்கள் ஆளுக்கு 176000 கோடி கொடுத்து வாங்கிக்கொள்ளலாம்
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
13-பிப்-201801:25:32 IST Report Abuse
Cheran Perumal அங்கு பெரும்பாலும் கிறிஸ்தவர்கள் உள்ளனர். அவர்களை ஆதரித்தால் அது மதசார்பற்ற தன்மை. இந்துக்களை ஆதரித்தால் அது மதவாதம். இதுதான் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் சில்லறை கட்சிகளின் கொள்கை.தூத்தேறி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை