கடலூர் அ.தி.மு.க.,வில் கோஷ்டி பூசல் உச்சக்கட்டம்! போட்டி கூட்டத்தில் இரு அணிகள் தள்ளுமுள்ளு| Dinamalar

தமிழ்நாடு

கடலூர் அ.தி.மு.க.,வில் கோஷ்டி பூசல் உச்சக்கட்டம்! போட்டி கூட்டத்தில் இரு அணிகள் தள்ளுமுள்ளு

Added : பிப் 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
கடலூர் அ.தி.மு.க.,வில் கோஷ்டி பூசல் உச்சக்கட்டம்!  போட்டி கூட்டத்தில் இரு அணிகள் தள்ளுமுள்ளு

கடலுார்: கடலுார் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., வில் கோஷ்டி பூசல் காரணமாக ரெட்டிச்சாவடியில் உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வழங்கும் போது இரு கோஷ்டிகளுக்கிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பதட்டம் நிலவியது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின் கடலுார் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., வில் அமைச்சர் சம்பத் தலைமையில் எடப்பாடி அணியும், அவைத்தலைவர் அய்யப்பன் தலைமை ஒ.பி.எஸ்., அணியும், முன்னாள் சேர்மன் தலைமையில் தினகரன் அணியும், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா அணியும் செயல்பட்டு வருகிறது.
ஓ.பி.எஸ்., எடப்பாடி அணி இணைந்த பின் அ.தி.மு.க., வலுவாக இருந்தது. ஆனாலும் ஓ.பி.எஸ்., மற்றும் எடப்பாடி அணி இணைந்தாலும் தொண்டர்கள் மத்தியில் சரியான உறவு இல்லை. அ.தி.மு.க.,வில் இரு அணியாக இருந்தாலும், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் நிகழ்ச்சிகளில் அவைத் தலைவர் அய்யப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வந்தனர்.
அமைச்சர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளை ஓ.பி.எஸ்.,அணியைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து புறக்கணித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 10ம் தேதி கடலுாரில் ஜெயலலிதா பிறந்த நாள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் கலந்துகொண்டு, உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தை வழங்கி துவக்கி வைத்தார்.
மாறுநாள் 11ம் தேதி, அமைச்சர் கூட்டம் நடத்திய அதே ஓட்டலில் அய்யப்பன் தலைமையிலான ஓ.பி.எஸ்., அணியினர் போட்டிக் கூட்டம் நடத்தி உறுப்பினர் சேர்ப்பிற்கான விண்ணப்பங்களை வழங்கி நிர்வாகிகளுக்கு கனிசமான தொகை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். தகவல் அறித்த அமைச்சர் அணியினர் அதிர்ச்சியடைந்தனர். ஓட்டல் முன்பு முதல் தாங்கள் கட்டியிருந்த அ.தி.மு.க., கொடிகளை அவர்களே அவிழ்த்தனர்.
இந்நிலையில் நேற்று காலை ரெட்டிச்சாவடி திருமண மண்டபத்தில் அய்யப்பன் தலைமையில் ஓ.பி.எஸ்., அணியினர் ஒன்றிய பகுதியில் உள்ள அ.தி.மு.க., வினருக்கு விண்ணப்பங்களை வழங்கினர். இந்த கூட்டத்திலும் விண்ணப்பத்துடன் வார்டு நிர்வாகிகளுக்கு பெரும் தொகை செலவிற்கு வழங்கப்பட்டத்தை அறிந்த அமைச்சர் ஆதரவாளர்கள் அச்சமடைந்தனர்.
அமைச்சரின் ஆதரவாளர்களான ஒன்றிய பகுதியைச் சேர்ந்த பக்கிரி, தர்மராஜ், ஏழுமலை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர், விண்ணப்பம் கொடுத்துக் கொண்டிருந்த அவைத்தலைவர் அய்யப்பனிடம், நீங்கள் எப்படி போட்டிக்கூட்டம் நடத்தலாம், தொடர்ந்து தனி அணியாக செயல்பட்டு வருவது நியாயமா என தட்டிக் கேட்டுள்ளனர்.
இதனால் மண்டபத்தில் கூடியிருந்த ஓ.பி.ஓஸ்., அணியினருக்கும் அமைச்சர் ஆதரவாளர்களுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் நெட்டித் தள்ளிக்கொண்டனர். இதனால் பதட்டம் ஏற்பட்டத்தை தொடர்ந்து, ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சமாதானம் செய்தனர்.
பிரச்னையை மேல்மட்டத்தில் பேசி தீர்க்காமல் கோஷ்டி பூசல் உச்சகட்டத்தில் வளர்ந்த வருவது ஆரோக்கியமான அரசியலாக இருக்காது. இதனால் வரும் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., வின் வெற்றியை பாதிக்கும் என அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை