கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த கட்டடம் -எப்போது..! அரசு ஒப்புதலுக்காக காத்திருக்கும் திட்டம்| Dinamalar

தமிழ்நாடு

கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த கட்டடம் -எப்போது..! அரசு ஒப்புதலுக்காக காத்திருக்கும் திட்டம்

Added : பிப் 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த கட்டடம் -எப்போது..! அரசு ஒப்புதலுக்காக காத்திருக்கும் திட்டம்

மதுரை, மதுரை கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த கட்டடம் கட்டும் திட்டம் அரசு ஒப்புதலுக்காக பல மாதங்களாக காத்திருக்கிறது.கலெக்டர் அலுவலகம் 1916 ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கட்டடத்தில் இயங்குகிறது. தரை மற்றும் முதல் தளத்தில் கலெக்டர், டி.ஆர்.ஓ., துணை கலெக்டர் அலுவலகங்கள் உட்பட 39 துறை அலுவலகங்கள் செயல்படுகின்றன. இந்த வளாகத்தில் ஆர்.டி.ஓ., மதுரை தெற்கு, வடக்கு தாலுகா அலுவலகங்கள், வருவாய் அலுவலர், ஊழியர் மனமகிழ் மன்றங்களும், பழைய ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி முகமை, நில ஆர்ஜித வருவாய் அலுவலகங்கள், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், பூமாலை வணிக வளாகம் செயல்படுகின்றன.இடப்பற்றாக்குறையால் நெரிசல் :கலெக்டர் அலுவலகத்திற்கு தினமும் ஏராளமான பொது மக்கள், அலுவலர்கள் வந்து சென்ற வண்ணம் உள்ளனர். ஆர்.டி.ஓ., தாலுகா அலுவலகங்கள் பராமரிப்பின்றி பழமையான கட்டடங்களில் இயங்குகின்றன. இதனால் முக்கிய ஆவணங்கள் வைக்க முடியாத நிலைஉள்ளது. கலெக்டர் அலுவலக மெயின் கட்டடத்திலும் பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட மின்ஒயர்கள் பழுதடைந்துள்ளன. 2005 ல் மாவட்ட கருவூல அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பலாயின.மேலும் முதல் தளத்திலுள்ள கூட்ட அரங்கு போதியதாக இல்லை. மேற்கூரை சேதமடைந்து தண்ணீர் விழுகிறது. பல்வேறு மாவட்ட ஆய்வு கூட்டங்களை நடத்துவது சிரமமாக உள்ளது. கடந்த வாரம் உள்ளாட்சி தேர்தல் வார்டு மறுவரையறை ஆணையம் ஐந்து மாவட்ட ஆலோசனை கூட்டத்தை நடத்தியது. இடமின்மையால் ஒவ்வொரு மாவட்டமாக கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டது. ஏராளமானோர் வந்ததால் நெரிசலும் நிலவியது.அரசு ஒப்புதலுக்காக காத்திருப்பு: எனவே ஒருங்கிணைந்த புதிய கட்டடம் கட்ட வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தப்படுகிறது. இதற்காக 20 கோடி ரூபாயில் புதிய கட்டடம் கட்ட அரசு கடந்தாண்டு ஒப்புதல் வழங்கியது. கட்டடம் அமைவிடத்தை வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், வருவாய் நிர்வாக கமிஷனர் சத்யகோபால் மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வும் செய்தனர். தற்போதைய ஆர்.டி.ஓ., அலுவலகத்திலிருந்து மெயின் கட்டடம் பின்புறம் வரை ஒருங்கிணைந்த கட்டடம் கட்டவும் அறிவுரைகளை வழங்கினர். கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் அலுவலர்கள் பொதுப்பணித்துறையினர் மூலம் விரிவான திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு கடந்தாண்டு அனுப்பினர். ஆனால் ஆறு மாதங்களுக்கு மேலாகியும் அரசு ஒப்புதல் வழங்கவில்லை. வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இதுகுறித்து அரசு அறிவிக்க வேண்டும் என அலுவலர்கள் எதிர்பார்க்கின்றனர்.நிதி ஒதுக்கப்படுமா: மாவட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது: அரசு நிதி ஒதுக்கீடு செய்ததும், பொதுப்பணித்துறை மூலம் டெண்டர் விடப்பட்டு பணிகள் உடனடியாக துவங்கப்படும். நிதி ஒரே தவணையில் கிடைத்தால் ஓராண்டிற்குள் கட்டி முடிக்க வாய்ப்புள்ளது, என்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை