'மரங்களை வெட்டிய எம்.பி., மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்':இ.கம்யூ., மாநில துணை செயலாளர் கருத்து| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'மரங்களை வெட்டிய எம்.பி., மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்':இ.கம்யூ., மாநில துணை செயலாளர் கருத்து

Added : பிப் 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குன்னுார்;குன்னுாரில் நடந்த இ. கம்யூ., கட்சியின் மாவட்ட மாநாட்டில் பங்கேற்ற, மாநில துணை செயலாளரான, முன்னாள் எம்.பி., சுப்பராயன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:மத்திய, அரசு கூறியபடி, எந்த விவசாய பொருளுக்கும் இரு மடங்கு விலை கிடைக்கவில்லை; உலக மயம் தனியார் மயம் தாராளமயத்தால் பொருளாதாரம் இந்திய தொழில்கள் அழிந்து வருகின்றன.
யார்வேண்டுமானாலும் கூட அரசியலுக்கு வரலாம். ரஜினி சிஸ்டம் சரியில்லை என்கிறார். கமலும் ரஜினியும், தமிழகத்தின் சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு என்ன திட்டத்தை முன் வைத்துள்ளனர். கோடி கணக்கான ஏழை எளிய மக்கள் மருத்துவ சிகிச்சை பெற முடிவதில்லை.ஜனநாயக அரசியல் அமைப்பில், தேர்தல் போட்டியிடும் வரை தங்கள் கட்சிக்குள் ஆட்சிகளை பற்றி பேசலாம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு மக்களின் அரசாங்கமாக நடத்தப்பட வேண்டும்.
ஒவ்வொரு சட்ட விரோதமான செயல்களும் அ.தி.மு.க.,வால் சட்டப்பூர்வம் போல், நடத்தப்படுகிறது. மரம் வெட்டுவது சட்ட விரோதம். அனுமதியில்லாமல் மரங்களை வெட்டி, சட்ட விரோத செயலை மேற்கொள்ளும், நீலகிரி எம்.பி., கோபாலகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். நாடு படுமோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு இவர்களை போன்றவர்கள் முக்கிய அடையாளம்.இவ்வாறு, சுப்பராயன் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை