ஜெயலலிதா படம் எதிர்ப்பு ஒரு அரசியல் நாடகம்:பொன். ராதாகிருஷ்ணன் ஆதங்கம் - Jayalalitha | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜெ., படம் எதிர்ப்பு ஒரு அரசியல் நாடகம்:பொன். ராதாகிருஷ்ணன் ஆதங்கம்

Added : பிப் 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாகர்கோவில்:''சட்டசபையில் ஜெயலலிதா படம் திறப்பதை தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பது அரசியல் நாடகம்,'' என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.நாகர்கோவிலில் அவர் கூறியதாவது: ஜெயலலிதாவை ஒரு முதல்வராகதான் பார்க்க வேண்டும். அரசு விடுதிகள், அலுவலகங்களில் அவரது படம் வைக்கப்பட்டுள்ளது. அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் சட்டசபையில் மட்டும் படம் வைக்க எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இது அரசியல் ஆதாயத்துக்காக நடத்தப்படும் நாடகம். ஜெ., நினைவிடத்திற்கு அமைச்சர்கள் அடிக்கடி செல்வதை தவிர்த்தால் அவரது மாண்பு காப்பாற்றப்படும்.திராவிடம் என்பதில் பெருமை கொள்ள வேண்டும். நடிகர் கமலுக்கு சுயநலம் உள்ளது. இவர் காவி பூசுகிறாரா ரஜினி காவி அணிகிறாரா என்பது முக்கியம் இல்லை. தியாகத்தின் சின்னமான காவியை யாரும் கொச்சைப்படுத்த வேண்டாம்.மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீவிபத்துக்கு சதிதான் காரணமாக இருக்க முடியும். அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும். இனயம் துறைமுக திட்டம் கைவிடப்படவில்லை. இனயத்துக்கு பதில் வேறு இடத்தில் இந்த துறைமுகம் அமைகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை