உயிர்களை 'காவு' வாங்கும் நான்கு வழிச்சாலை துவரிமான் - சோழவந்தான் ரோட்டில் தொடரும் விபத்து| Dinamalar

தமிழ்நாடு

உயிர்களை 'காவு' வாங்கும் நான்கு வழிச்சாலை துவரிமான் - சோழவந்தான் ரோட்டில் தொடரும் விபத்து

Added : பிப் 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

மதுரை, மதுரை துவரிமான் - சோழவந்தான் இடையே நான்கு வழிச்சாலையை கடக்க, நேருக்கு நேர் வாகனங்கள் செல்வதால்
அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. வாரம் இரண்டு பேராவது
இறக்கின்றனர்.
மதுரை துவரிமானில் இருந்து சோழவந்தான் நோக்கி செல்லும் வாகனங்கள் திண்டுக்கல் -
விருதுநகர் நான்குவழிச்சாலையை கடப்பதால் தினமும் விபத்தை
சந்திக்கின்றன.
வாரம் குறைந்தது 2 பேராவது இறக்கின்றனர். இதை தவிர்க்க, மதுரையில் இருந்து வரும் வாகனங்கள், நான்குவழிச்சாலையில் இடது புறம் திரும்பி குறிப்பிட்ட துாரம் வரை சென்று, வலதுபுறம் திரும்பி சோழவந்தான் ரோட்டை அடைய வேண்டும். அதேபோல்
சோழவந்தானில் இருந்து வரும்போது, இடது புறமாக சென்று வைகை ஆற்றுப்பாலம் கடந்து, வலது புறம் திரும்பி துவரிமான் பாதையை அடைய வேண்டும். வாகனங்கள் நேருக்கு நேர் செல்வதை தவிர்க்க, தற்போதுள்ள துவரிமான் -
சோழவந்தான் வழித்தடத்தை
நிரந்தரமாக மூட வேண்டும்.
இதனால் தொடரும் விபத்திற்கு
முற்றுப்புள்ளி வைக்கலாம்.
தவிர, சமயநல்லுார் பழைய ரயில்வே பாலத்தை இந்த நான்கு வழிச்சாலையுடன் இணைத்து
விட்டனர். திண்டுக்கல்லில் இருந்து வரும் வாகனங்கள் இடது புறமாக சமயநல்லுார் வழியாக மதுரைக்கும், வலது புறமாக விருதுநகருக்கும் செல்கின்றன.
சமயநல்லுார் வழித்தடம் ஒரு வழிச்சாலையாக மாற்றியதால் மதுரையில் இருந்து விருதுநகர் செல்லும்
வாகனங்கள் நான்கு வழிச்சாலையில் எதிர் திசையில் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன. இதை தவிர்க்க, சமயநல்லுாரில் இருந்து விருதுநகர் செல்லும் வாகனங்களுக்கு பாலத்தின்கீழ் ரவுண்டானா பகுதியில் வழிஏற்படுத்த வேண்டும். இதை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X