ரஜினி, கமலுக்கு முதல்வர் ஆசை: சாத்தூர் ராமச்சந்திரன் சாடல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரஜினி, கமலுக்கு முதல்வர் ஆசை: சாத்தூர் ராமச்சந்திரன் சாடல்

Added : பிப் 13, 2018 | கருத்துகள் (1)
Advertisement

ராஜபாளையம்;'மக்கள் பிரச்னைக்கு குரல் கொடுக்காத ரஜினி, கமல் போன்றோர் முதல்வர் பதவிக்கு மட்டும் ஆசைப் படுகிறார்கள்,'' என, முன்னாள் அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் பேசினார்.ராஜபாளையம் தொகுதி தி.மு.க., சார்பில் நடந்த இளைஞர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும்விழாவில் அவர் பேசியதாவது:அரசியலுக்கு வருவோம் என கூறிக் கொள்ளும் ரஜினி, கமல் போன்றோர் இது வரை மக்களின் பிரச்னையில் தலையிடவில்லை. எந்த பிரச்னைக்கும்குரல் கொடுக்காமல் முதல்வர் பதவிக்கு மட்டும் ஆசைப் படுகின்றனர், ''என்றார்.250 அணிகளைசேர்ந்த 2500க்கு மேற்பட்ட இளைஞர்களுக்குரூ. 11 லட்சம் மதிப்பீட்டில் கிரிக்கெட் மட்டை, பந்து, ஸ்டெம்ப் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பைகள், மற்றும் வாலிபால், கால்பந்துவிளையாட்டு பந்துகள் வழங்கப் பட்டன. உபகரணங்களை எம்.எல்.ஏ.,க்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கபாண்டியன் வழங்கினர்.முன்னாள் எம்.எல்.ஏ., தனுஷ்கோடி உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.

Advertisement