இரவில் அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம்:மதுரை-ராமேஸ்வரம் செல்லும் பொது மக்கள் தவிப்பு| Dinamalar

தமிழ்நாடு

இரவில் அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம்:மதுரை-ராமேஸ்வரம் செல்லும் பொது மக்கள் தவிப்பு

Added : பிப் 13, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

திருப்புவனம்:மதுரை - ராமேஸ்வரம் வழித்தடத்தில் இரவு நேரங்களில் அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதால் பொது மக்கள் தவித்து வருகின்றனர்.மதுரையில் இருந்து திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மானாமதுரை வழியாக பரமக்குடி, ராமேஸ்வரம், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. காரைக்குடி மண்டலம் சார்பாக இந்த வழித்தடத்தில் 144 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இது தவிர மதுரை, ஈரோடு, சேலம், திரூப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ராமேஸ்வரத்திற்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மானாமதுரை பகுதிகளில் இருந்து மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்பவர்கள் பலரும் இரவு நேரங்களில் மாட்டுத்தாவணி வந்து தொலை துார பேருந்துகள் மூலமாக திருப்புவனம், திருப்பாச்சேத்தி வருவது வழக்கம்.மதுரையில் இருந்து திருப்புவனத்திற்கு 13 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அரசு பஸ்களில் கட்டண உயர்விற்கு பின் 20 ரூபாய் வசூலிக்கப்பட்டு கட்டண குறைப்பிற்கு பின் 18 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. பலரும் 18 ரூபாய் கட்டணம் செலுத்தி பயணம் செய்து வருகின்றனர். சமீபகாலமாக இரவு நேரங்களில் பயணிகளிடம் 18 ரூபாய்க்கு பதிலாக 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தட்டி கேட்கும் பயணிகளை பஸ்களில் ஏற்றுவதில்லை, பாதி வழியிலேயே இறக்கி விடுகின்றனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு மதுரை புதுக்குளம் கிளை பணிமனையைச் சேர்ந்த வண்டி எண் டி.என், என்1228 என்ற எண்ணுள்ள அரசு பஸ்சில் பயணம் செய்த பயணிகளிடம் 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. பயணிகள் கண்டக்டரிடம் கேட்ட போது இயந்திரத்தில் வருவதை தான் உங்களிடம் வசூலிக்கிறேன்.எனக்கு எதுவும் தெரியாது 25 ரூபாய் கொடுத்து பயணம் செய்யுங்கள்.இல்லையென்றால் இறங்கி விடுங்கள் என பதிலளித்துள்ளார். இந்த திடீர் கட்டண உயர்வால் கூலி தொழிலாளர்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பணிமனை மேலாளரிடம் கேட்ட போது குறிப்பிட்ட பஸ்சில் சென்ற கண்டக்டரிடம் விசாரிக்கிறேன் என அலைபேசியை துண்டித்து விட்டார். மதுரை- ராமேஸ்வரம் வழித்தடத்தில் டிக்கெட் பரிசோதனை நடைபெறுவதே கிடையாது.இதனால் ஒரு சில ஊழியர்கள் முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். நிறுத்தங்களில் பயணிகளை ஏற்றி இறக்குவது கிடையாது. கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் முறைகேடு நடக்கின்றன. எனவே போக்குவரத்து துறை தவறு செய்யும் ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை