பா.ஜ.,கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ.,கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

Added : பிப் 13, 2018
Advertisement

ராமநாதபுரம்: மண்டபம் ஒன்றியம் வேதாளை கிராமத்தில், கொல்லன்குளம் பிள்ளையார் கோயில் நிலத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கிராவல் ரோட்டை அகற்றி நிலத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும். இங்கு குப்பை கொட்டுவதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன் பா.ஜ., மற்றும் பொதுமக்கள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
பா.ஜ., மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் ஆத்மா கார்த்திக், ராம அமிர்தம், வேதாளை விஸ்வகர்ம தலைவர் நடராஜன், துணைத் தலைவர் நாகலிங்கம் முன்னிலை வகித்தனர். பா.ஜ., மாநில துணைத் தலைவர் குப்புராமு, கோட்ட பொறுப்பாளர் சண்முகராஜா, இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, வேதாளை முருகன் கோயில் கமிட்டி தலைவர் தவசி முனியாண்டி உள்பட பலர் பங்கேற்றனர். பா.ஜ., மண்டபம் ஒன்றிய பொருளாளர் பஞ்சவர்ணம் நன்றி கூறினார்.--

Advertisement