PM Modi returns home after concluding his West Asia & Gulf visit | அரசு பயணம் முடிந்து நாடு திரும்பினார் மோடி| Dinamalar

அரசு பயணம் முடிந்து நாடு திரும்பினார் மோடி

Added : பிப் 13, 2018 | கருத்துகள் (12)
Advertisement
அரசு பயணம், முடிந்து, நாடு, திரும்பினார், மோடி

புதுடில்லி:அரசுமுறைப் பயணமாக பாலஸ்தீனம், யு.ஏ.இ., ஓமன் ஆகிய மூன்று நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அதன்படி ஜோர்டான் சென்ற அவர், தலைநகர் அம்மானில் அந்நாட்டு மன்னர் இரண்டாம் அப்துல்லாவை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேசினார்.
பின்னர் பாலஸ்தீனத்தின் ரமல்லா நகர் சென்று, அந்நாட்டு அதிபர் முகமது அப்பாசை சந்தித்தார். இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பயணத்தின் நிறைவாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்றார். அபுதாபி பட்டத்து இளவரசர் முகமது பின் ஜாயத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அபுதாபியில் அமையவுள்ள முதல் இந்துக் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார். தனது பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி நேற்று இந்தியா திரும்பினார். அவரை மந்திரி அமைச்சர் சுஷ்மா வரவேற்றார்

Advertisement