கட்சிக்கு குற்றவாளி தலைமை தாங்கலாமா? சுப்ரீம் கோர்ட் கேள்வி| Dinamalar

கட்சிக்கு குற்றவாளி தலைமை தாங்கலாமா? சுப்ரீம் கோர்ட் கேள்வி

Added : பிப் 13, 2018 | கருத்துகள் (86)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
சுப்ரீம் கோர்ட், கட்சி, குற்றவாளி, தலைமை, கேள்வி, மத்திய அரசு

புதுடில்லி: குற்றம் நிரூபிக்கப்பட்ட அரசியல்வாதிகள், தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்ட பின், கட்சிக்கு தலைமை தாங்கலாமா; தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யலாமா என, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட அரசியல்வாதிகள், கட்சிக்கு தலைமை தாங்குவதை தடுக்கக் கோரி, பா.ஜ., வழக்கறிஞர், அஷ்வினி குமார் உபாத்யாயா, உச்ச நீதிமன்றத்தில், பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர், லாலு பிரசாத் யாதவ், சசிகலா உள்ளிட்ட அரசியல்வாதிகளுக்கு எதிராக, ஊழல் புகார், நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்ட போதும், அவர்கள், கட்சிகளில் தலைமை பொறுப்பு வகிப்பதை, தன் மனுவில், அஷ்வினி குமார் சுட்டிக்காட்டி உள்ளார். இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா, நீதிபதிகள், ஏ.எம்.கன்வில்கர், சந்திரசூட் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒருவர் தலைமை தாங்கும் அரசியல் கட்சிக்கு, அங்கீகாரம் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும், அத்தகைய கட்சிக்கு தடை விதிக்கப்பட வேண்டும் என்றும், தேர்தல் கமிஷன் கருத்து தெரிவித்துள்ளது. இத்தகைய அதிகாரம் தனக்கு இருந்தால், அரசியலில் குற்றவாளிகள் நுழைய முடியாது என்றும், தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.குற்றம் நிரூபிக்கப்பட்ட அரசியல்வாதிகள் தலைமை தாங்கும் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்யும் அதிகாரத்தை, தேர்தல் கமிஷனுக்கு, நீதிமன்றம் வழங்க முடியுமா என்பது குறித்து ஆராயப்படும்.குற்றம் நிரூபிக்கப்பட்ட அரசியல்வாதிகள், தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்ட பின், கட்சிக்கு தலைமை தாங்கலாமா; தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யலாமா என்பது குறித்து, மத்திய அரசு, பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.குற்றவாளி தலைவரா? நீதிபதி கேள்வி

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (86)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
15-பிப்-201808:10:36 IST Report Abuse
Rajendra Bupathi இதுக்கு ஏகபட்ட முன் உதாரணம் இருக்கே ?
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
15-பிப்-201800:37:34 IST Report Abuse
தமிழ்வேல் காசு குடுத்து ஜெயிக்கிறவனுவோலையே நீங்க வெளியே அனுப்ப முடியல... இதுல கூட அதிகாரம் கேட்குதா ?
Rate this:
Share this comment
Cancel
Ramamoorthy P - Chennai,இந்தியா
14-பிப்-201809:26:59 IST Report Abuse
Ramamoorthy P பிகார் தமிழ்நாட்டில் என்ன நடந்தது? கொள்ளையடித்தவர்கள் தான் ஆட்சிக்கட்டில் ஏறினார்கள். மக்கள் மண்ணாந்தைகளாக இருக்கும் வரை இது நடக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்
13-பிப்-201821:40:40 IST Report Abuse
Raghuraman Narayanan அரசியல் சட்டப்படி உச்ச நீதி மன்றத்திற்கு அதிகாரம் இல்லை. சட்டம் இயற்ற பாராளு மன்றத்திற்கு தான் உரிமை உண்டு. உச்ச நீதி மன்றத்தால் கேள்வி தான் கேட்க முடியும், இதுதான் ஜனநாயகம்.
Rate this:
Share this comment
Cancel
prabhu - trivandrum,இந்தியா
13-பிப்-201820:10:36 IST Report Abuse
prabhu மக்களாட்சி இனியும் கைபுள்ளையாக இருப்பது அவமானம் .நம் நாடு மிகப்பெரிய நல்ல மக்களாட்சி கொண்ட நாடு என்று எப்போது பெயர் எடுப்போம்?அனுதினமும் நாம் அனைவரும் பாடம் படிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
13-பிப்-201819:50:36 IST Report Abuse
Pugazh V //partha - chennai,இந்தியா 13-பிப்-2018 13:37 ஒரு மனைவி இரண்டு மூன்று துணைவியுடன் இருப்பவரெல்லாம் தலைவனாக இருக்கலாமா என்ற கேள்வியையும் சேர்த்து நீதிபதிகள் கேட்டிருக்கலாம்// அதிகார பூர்வமாக நாலு மனைவிகள் + 60,000 பிற மனைவிகளுடன் தசரதன் ராஜாவாகவே இருந்தார். பாமா, ருக்மணி என்று மனைவிகள், ராதா என்று girl fri உடன் மதுராவை ஶ்ரீகிருஷ்ணன் ஆண்டார்..போகிற இடத்தில் எல்லாம் அர்ச்சுனன், பீமன் கல்யாணம் பண்ணினார்கள்..எனவே நீங்கள் கேட்டதை நீதிபதிகள் கேட்க மாட்டார்கள், தெய்வ குற்றம் ஆகிவிடும்.
Rate this:
Share this comment
Cancel
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
13-பிப்-201819:21:13 IST Report Abuse
முருகவேல் சண்முகம்.. நீயெல்லாம் அடிமைகள் பற்றி பேசுகிறாய், கொத்தடிமை கூட்டத்தின் ஒட்டு மொத்த பிரதிநிதி நீ... அது பத்தாது என்று அங்கே சிங்கை யில்... கையேந்தி பிழைப்பு நடத்தும் நீ.. நான் சொல்லாததை சொல்லி மகிழ்ந்து கொள்வது உனக்கு மகிழ்ச்சி எ‌ன்றா‌ல் நான் என்ன செய்வது. உன் பிழைப்பு உன்னோடு.
Rate this:
Share this comment
Cancel
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
13-பிப்-201819:13:02 IST Report Abuse
முருகவேல் சண்முகம்.. ஏண்டா காசு மணி துட்டு.. ஒனக்கு மூளைக்கு பதில் களி மண்ணை வ ச்சி.. படைத்து விட்டான்.. என்ன செய்ய. நான் எங்கேடா கருணா வை ஆதரித்து சொன்னேன்... வெளியே இருப்பவ ன்... எல்லாம் நிரபராதி இல்லை என்றேன்... ஒடனே உனக்கு வே ர்க்கு து. ஒன் கருத்தும் ஒன்னைய போலவே பொறம்போக்கு தனமா தான் இருக்கு...
Rate this:
Share this comment
Cancel
unmaiyai solren - chennai,இந்தியா
13-பிப்-201818:26:23 IST Report Abuse
unmaiyai solren நம் நாட்டில் ஒரு சாதாரண பொறுப்பில் இருப்பவர்கள் முதல் பிரதமர் பொறுப்பில் இருக்கின்றவர்கள் வரை அனைவருமே குற்றவாளிகள் தான் காவல் மற்றும் நீதி துறை வரை. இதில் யாரை தண்டிப்பது???
Rate this:
Share this comment
Cancel
Abu Faheem - Riyadh,சவுதி அரேபியா
13-பிப்-201817:41:53 IST Report Abuse
Abu Faheem அப்டினா பா ஜ க தேசியத்தலைவர் அமீத்ஷா பதவிக்கு ஆப்பு, இதுக்கு பேருதான் சொந்தக்காசுல சூனியம் வைக்கிறதோ????
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை