ஹபீஸ் சயீத்தை பயங்கரவாதியாக அறிவித்தது பாக்.,| Dinamalar

ஹபீஸ் சயீத்தை பயங்கரவாதியாக அறிவித்தது பாக்.,

Added : பிப் 13, 2018 | கருத்துகள் (78)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பாகிஸ்தான், பயங்கரவாதி, ஹபீஸ் சயீத், மும்

இஸ்லாமாபாத்: ஐ.நா.,வின் பயங்கரவாத பட்டியலில் இடம்பெற்றுள்ள ஹபீஸ் சயீத்தை பயங்கரவாதியாக அறிவிக்கும் சட்டத்தில் பாகிஸ்தான் அதிபர் கையெழுத்திட்டார்.

மஹாராஷ்டிர தலைநகர், மும்பையில், 2008 நவம்பரில் நடந்த, தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில், ஏராளமானோர் உயிரிழந்தனர்.இந்த தாக்குதல்களின் பின்னணியில், பாகிஸ்தானைச் சேர்ந்த, ஜமாத் - உத் - தவா பயங்கரவாத அமைப்பின் தலைவன், ஹபீஸ் சயீத் மூளையாக செயல்பட்டான். இவனை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா., மற்றும் அமெரிக்கா அறிவித்துள்ளன. அங்கு அவன் அரசியல் கட்சி துவக்கி வரும் தேர்தலில் போட்டியிட தீவிரம் காட்டி வருகிறான்.

இந்நிலையில், ஐ.நா.,வின் தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத அமைப்புகளை பாகிஸ்தானில் தடை செய்யும் அவசர சட்டத்தில் அந்நாட்டு அதிபர் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத தடுப்பு மைய வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

இந்த பட்டியலில் ஹபீஸ் சயீத் மற்றும் அவனது ஜமாத் - உத் - தவா அமைப்பும் மற்றும் சில பயங்கரவாதிகளின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்த சட்டத்தின்படி, பட்டியலில் இடம்பெற்றுள்ள பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கவும், அவர்களது அலுவலகங்கள், மற்றும் வங்கி கணக்குகளை முடக்கி வைக்கவும் முடியும்.

Advertisement
வாசகர் கருத்து (78)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan. - kerala,இந்தியா
13-பிப்-201821:40:39 IST Report Abuse
rajan.  NOW CHINA LASTS ITS FACE IN U.N FOR THIS HABIES CASE. THIS IS THE TIME FOR INDIA TO MOOT AGINST HABIES IN U.N
Rate this:
Share this comment
Cancel
Rathinasami Kittapa - San Antonio,யூ.எஸ்.ஏ
13-பிப்-201819:43:30 IST Report Abuse
Rathinasami Kittapa இருபுறமும் கடுமையான விமரிசனம் செய்வோர் உள்ளனர். மோடி இந்தியப் பிரதமர் என்ற முறையில் அனைவராலும் மதிக்கப்பட வேண்டியவர். ஆனால் சில இஸ்லாமிய பதிவாளர்கள் மிகவும் தரம் தாழ்ந்து விமரிசிக்கின்றனர். இது தேசப் பற்றுள்ள யாராலும் பொருத்துக்கொள்ள இயலாது. அதன் விளைவாக பொதுவில் வசைகின்றனர். அனைவருக்கும் பொருமையும் கட்டுப்பாடும் வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
13-பிப்-201818:33:04 IST Report Abuse
அப்பு அடுத்த வேளை உணவு இல்லேன்னா இது மாதிரிதான் செய்யணும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X