முதல்வருடன் ஸ்டாலின் சந்திப்பு; 27 கோரிக்கைகள் வைத்தார்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வருடன் ஸ்டாலின் சந்திப்பு; 27 கோரிக்கைகள் வைத்தார்

Updated : பிப் 13, 2018 | Added : பிப் 13, 2018 | கருத்துகள் (48)
Advertisement

சென்னை: முதல்வர் பழனிசாமியை, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சந்தித்து போக்குவரத்து கழகத்தை சீர் செய்வது குறித்த 27 பரிந்துரைகளை வழங்கினார்.


சந்திப்பு

தமிழகத்தில் கடந்த மாதம் திடீரென பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில் பஸ் கட்டண உயர்வு குறித்து ஆய்வு நடத்திட தி.மு.க. சார்பில் நியமிக்கப்பட்ட குழு தனதுஅறிக்கையை ஸ்டாலினிடம் சமர்பித்தது. இதனை முதல்வர் பழனிசாமியிடம் ஒப்படைக்க திமுக சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக நேரம் கேட்கப்பட்டது.நேரம் ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து இன்று தலைமை செயலகத்தில் நண்பகல் 12 மணியளவில் முதல்வர் பழனிசாமியை ஸ்டாலின் சந்தித்து, போக்குவரத்து கழகத்தை சீர் செய்வது குறித்த திமுகவின் அறிக்கையை வழங்கினார்.27 பரிந்துரைகள்


பின்னர் நிருபர்களை சந்தித்த ஸ்டாலின் கூறியதாவது: போக்குவரத்து கழகத்தை எப்படி சீரமைப்பது குறித்து ஆராய திமுக சார்பில் குழு அமைப்பட்ட குழு 27 பரிந்துரை வழங்கியுள்ளது. இதன்படி செயல்பட்டால், மக்கள் தலையில் பஸ் கட்டணத்தை சுமத்த வேண்டிய அவசியமில்லை.
இந்த அறிக்கையின்படி, போக்குவரத்து கழகத்தை மக்களின் சேவையாக கருதி நஷ்டத்தை அரசே ஏற்க வேண்டும்.டீசல் மீதான கலால் மற்றும் மதிப்பு கூட்டு வரிகளை ரத்து செய்ய வேண்டும். ஒரே சீரான 10 சதவீத ஜிஎஸ்டி வரியை விதிக்க வேண்டும். டிரைவர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு நல்லிணக்க கூட்டம் நடத்த வேண்டும். பஸ்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என கூறியுள்ளோம்


அனைத்து கட்சி கூட்டம்

முதல்வருடனான சந்திப்பின் போது, துணை முதல்வர், போக்குவரத்து அமைச்சர் மற்றும் பல அமைச்சர்கள் இருந்தனர். எங்களது கோரிக்கையை வலியுறுத்தி வந்துள்ளோம். அரசு தரப்பில் எந்த உறுதியும் அளிக்கவில்லை. பார்ப்போம் என கூறியுள்ளனர். அரசு நிர்வாகம் செயல்படாத நிலையில் தான் எதிர்க்கட்சியாக நாங்கள் யோசனை கூறியுள்ளோம் எங்கள் பரிந்துரைகளை செயல்படுத்தனால், வரவேற்போம். இல்லாதபட்சத்தில், தேவைப்பட்டால், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி என்ன நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்வோம். பொருட்கள் கட்டுமானத்தில் கமிஷன் வாங்குவதை கட்டுபடுத்தினால் கடனை குறைக்க முடியும்.


விளக்கம் வேண்டும்

அவர்கள் மீதான தவறுகளை மறைக்க, அபாண்டமான குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர். இது குறித்து ஏற்கனவே விளக்கமளித்துள்ளோம். சட்டசபையில், ஜெயலலிதா படத்தில் எந்த அடிப்படையில் திறக்கப்பட்டது என்பதற்கு விளக்கமளிக்க வேண்டும். ஜெயலலிதா பட திறப்பு விழாவிற்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர்,கவர்னர் அழைத்தும் வரவில்லை ஏன் வரிவில்லை என்பது குறித்து விளகக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement