ஹார்வர்ட் பல்கலையில் தமிழ் இருக்கை சங்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஹார்வர்ட் பல்கலையில் தமிழ் இருக்கை சங்கம்

Added : பிப் 13, 2018 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ஹார்வர்ட் பல்கலை, தமிழ் இருக்கை சங்கம்

சென்னை: ஹார்வர்ட் பல்கலையில் இருக்கை அமைவதற்காக ஹார்வர்டு தமிழ் இருக்கை தமிழ் சங்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உலகின் அனைத்து பகுதிகளில் வசிக்கும் மக்கள், தமிழ் பாரம்பரிய இலக்கியங்கள் குறித்த ஆராய்ச்சிக்கு தமிழ் இருக்கும் உதவும். கிரேக்கம், லத்தீன் இலக்கியங்களுக்காக ஹார்வர்ட் பல்கலையில் நூலகம் அமைக்கப்பட்டது போல், தமிழ் குறித்து ஆராய, பாரம்பரியம் குறித்த நூலகம் ஒன்றையும் அமைத்துள்ளது.
ஹார்வர்ட் பல்கலையில் தமிழ் இருக்கை அமைப்பது, பல ஆயிரம் தமிழ் காப்பியங்களுக்கு உத்வேகமாக இருப்பதுடன், எங்களின் தமிழின் பெருமை உலகெல்லாம் ஆராய்ச்சி செய்வோம் என்ற பாரதியாரின் கனவு நினைவாகும். தமிழ் இருக்கைக்கு இதுவரை 5.8 மில்லியன் டாலர் நிதி வசூலாகியுள்ளது. இதற்கு பலர் தங்களது பங்களிப்பை அளித்துள்ளனர். இதனால், ஹார்வர்ட் பல்கலையில் தமிழ் இருக்கை அமைவது உறுதியாகும் நிலையில் உள்ளது. ஹார்வர்ட் பல்கலையில், நிரந்தரமான தமிழ் பேராசிரியரை பார்க்க பல்கலை முன்னாள் ஊழியர்கள், மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர்.
ஹார்வர்ட் தமிழ் சங்கம் அமைப்பதற்கு கடந்த வாரம் ஹார்வர்ட் அலுமினி நிர்வாக குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதில், முன்னாள் முாணவர்கள், ஊழியர்கள், மற்றும் சிலர் இடம்பெற்றுள்ளனர். இந்த சங்கமானது, ஹார்வர்ட் பல்கலையில் தமிழ் இருக்கை அமைவதற்கான உதவியை செய்யும். இதில் இணையவிரும்பும் முன்னாள் மாணவர்கள், ஊழியர்கள், நிர்வாகிகள் சங்கத்தை தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
13-பிப்-201819:14:14 IST Report Abuse
ஆரூர் ரங் தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகமே நிதி நெருக்கடியிலும் மாணவர்களின் பாராமுகத்திலும் திண்டாடுவதாக செய்திகள் வருகின்றன. அதனைக் காப்பாற்ற முயற்சியுங்கள். ஹார்வாடெல்லாம் நன்மையோ இல்லையோ நமக்கு அவசர அவசியமில்லை (கடுமையாக எழுதுவதற்கு மன்னிப்பு கேட்கிறேன்)
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
13-பிப்-201819:09:20 IST Report Abuse
ஆரூர் ரங் குறைந்தபட்சம் 90 % தமிழர்களுக்காவது தனது தாய்மொழியின் பெயரை சரியாக உச்சரிக்கக் கற்றுக்கொடுத்தபிறகு இதெல்லாம் முயற்சிக்கலாம். தமிழாசிரியர்களின் பிள்ளைகளே வேற்றுமொழியைத் தான் விருப்பப்பtடமாகப் படிக்கும் அவலநிலை . யாரோ காசு பார்க்க நாம் உதவவேண்டியதில்லை
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
13-பிப்-201819:04:18 IST Report Abuse
ஆரூர் ரங் இது ஏதோ வியாபாரம் போலத்தான் தெரிகிறது (ஹார்வர்டு மாணவர் ஒருவர் சொன்னது) .இந்தக் காசில் பல நூறு தமிழ் ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கலாம் . அரசுப்பள்ளிகளிலேயே பல்லாயிரம் இடங்கள் காலி. பாவம் மாணவர்கள்
Rate this:
Share this comment
Cancel
13-பிப்-201818:41:57 IST Report Abuse
அப்பு நம்ம டைமண்ட் கவிஞரை அனுப்பி வெக்கலாம்...ஆண்டாளைப் பற்றி இன்னும் ருசியான தகவல்களை வெளியிடுவாரு.....
Rate this:
Share this comment
Cancel
Modikumar - Auckland CBD,நியூ சிலாந்து
13-பிப்-201816:01:32 IST Report Abuse
Modikumar ஹார்வர்ட் பல்கலையில், நிரந்தரமான தமிழ் பேராசிரியரை நியமிக்க ஒரு துணைவேந்தர் பதவிக்கு சமமாக ஒருவரை தமிழக அரசு சிபாரிசு செய்யும். அந்த பேராசிரியர் ஹார்வர்ட் பல்கலையில் சில பல பேரை பேராசிரியர், உதவி பேராசிரியர் என நியமிக்க வேண்டும். அந்த பதவிகளுக்கு திமுகவை அணுக வேண்டுமா அல்லது அதிமுகவை அணுக வேண்டுமா? அல்லது தற்சமயம் ஹார்வர்ட் பல்கலையில் பிலிம் காமித்து கொண்டிருக்கும் கமலை அணுக வேண்டுமா
Rate this:
Share this comment
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
13-பிப்-201819:16:00 IST Report Abuse
ஆரூர் ரங்நம்ம ஊரு ஸ்கூலிலேயே டாமில் வாத்தியார் தான் இருக்காங்க தமிழ் ஆசிரியர் இடங்கள் காலி .இதில் எங்கோ இருக்கற நாற்காலிக்கு என்ன அவசரம்?...
Rate this:
Share this comment
Cancel
partha - chennai,இந்தியா
13-பிப்-201815:33:35 IST Report Abuse
partha தமிழர்களுக்கு இதைப்பற்றி எவ்வளவு கருத்து பார்த்தீர்களா?? ஹார்வார்ட் தமிழ் சங்கம் வாழ்க
Rate this:
Share this comment
Cancel
Raj Pu - mumbai,இந்தியா
13-பிப்-201815:16:39 IST Report Abuse
Raj Pu ஒரு சமஸ்கிருத இருக்காய் அமைய வெகு எளிதில் முதிந்த பொது ஒரு மாநிலத்தின் மொழி உலகெங்கும் வாழும் தமிழர்களின் மொழி ஆண்டாள் வளர்த்த தமிழ் இதற்கு ஒரு இருக்காய் அமைவது எவ்வளவு முயற்சி தேவைப்படுது, இந்திக்கு வெகு எளிதில் UN சபையில் இடம் தமிழுக்கு தமிழ்நாட்டிலும் இடம் இல்லை
Rate this:
Share this comment
பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா
13-பிப்-201816:37:15 IST Report Abuse
பலராமன்முதல்ல தன குழந்தைகளை தமிழ் வழியில் சேருங்க....தமிழ் தானே வளரும்....கோடி கோடியா செலவு பண்ணி இப்ப தமிழை வளர்க்கணுமா? அதற்கு பதில் தமிழ் காப்பியங்களை வேறு மொழிகளில் மொழி பெயர்த்து அனைவரையும் படிக்க செய்யுங்கள்....அப்போது தமிழின் அருமை தானாக தெரிய வரும்....தானாக வளரும்.....இருக்கை காட்டறாங்களாம்.......ராமாயணம். மஹாபாரதம், சாகுந்தலம், போன்ற சமஸ்க்ரித நூல்கள் தமிழில் பெயர்ந்ததால் அந்த மொழிகளின் பெருமை உலகிற்கு தெரிய வந்தது.....பணம் கொடுத்து இருக்கை அமைத்தால் மொழி வளராது......அது தொட்டிலில் இருந்து வரவேண்டும்.....தன் குழந்தைகளை ஆங்கில வழி கல்வியில் படிக்க வைக்க வேண்டியது....அம்மா என்று கூப்பிட்டால் அவமானமாக கருதுவது.....ஒருத்தன் தமிழில் பேசினால் அவனை நாடு புரத்தான் என்று கேலி செய்ய வேண்டியது.....அப்பறம் தமிழ் எப்படி வளரும்........
Rate this:
Share this comment
Cancel
13-பிப்-201815:09:00 IST Report Abuse
மகாதேவி,சென்னை தமிழ்நாட்டில் தமிழுக்கான மரியாதை கிடைப்பதை இன்னும் உறுதி செய்ய வில்லை. தாய்மொழியான தமிழைப் பயிற்று மொழியாக படித்தவர்களுக்கே தமிழக அரசில் வேலை என்று ஒரு சட்டத்தை போட வக்கில்லாத அரசியல் வாதிகளை தேர்ந்தெடுத்த மக்களை என்னவென்று சொல்வது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை