தாய் இறந்தது தெரியாமல், உடலருகே தூங்கிய மகன்| Dinamalar

தாய் இறந்தது தெரியாமல், உடலருகே தூங்கிய மகன்

Added : பிப் 13, 2018 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ஐதராபாத், தாய், மகன், மரணம்,

ஐதராபாத்: ஐதராபாத்தில் தனது தாய் இறந்தது தெரியாமல், அவரது உடலருகிலேயே 5 வயது மகன் படுத்து தூங்கியது அங்கிருந்தவர்களின் கண்களில் நீர் வர செய்தது.தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் சமீனா சுல்தானா. கட்டட தொழிலாளி. உடல் நலக்குறைவு காரணமாக உஸ்மானிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அப்போது சமீனா சுல்தானாவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார்.

இது தொடர்பாக போலீசாருக்கு மருத்துவமனை சார்பில் தகவல் அளித்தது. சமீனா சுல்தானா உடலை கட்டிலிலேயே கிடத்தி வைத்திருந்தனர். இந்நிலையில், தன் தாய் உயிரிழந்ததை அறியாத சமீனா மகன், அவரது உடல் அருகில் படுத்து தூங்கினான். இதனை அங்கு சிகிச்சை பெற்றவர்கள் கண்களில் நீர் வர செய்ததுடன், மனதை உருக்கியது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arivu Nambi - madurai,இந்தியா
14-பிப்-201801:47:52 IST Report Abuse
Arivu Nambi வளர்ந்தவர்களே வாழ்க்கையை எதிர்கொள்ள முடியாமல் தன்னைத்தானே மாய்த்துக்கொள்ளும்போது ,அந்த பிஞ்சு வருங்காலங்களில் எதிர்கொள்ளவிருக்கும் கஷ்டங்களை கணித்து கண்கள் குளமாகின்றன நெஞ்சம் ரணமாகின்றன..கடவுளே உன்னிடம் என்ன கேட்பது எப்படி கேட்பது ...
Rate this:
Share this comment
Cancel
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
13-பிப்-201819:13:20 IST Report Abuse
THINAKAREN KARAMANI தாய் அருகில் இருக்கும்போது எனக்கென்ன குறை என்று எண்ணித் துயிலும் இந்தக் குழந்தையைப் பார்க்கும்போது இதயம் கனக்கின்றது. கண்கள் குளமாகின்றது. THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Share this comment
Cancel
a.velmurugan - puducherry,இந்தியா
13-பிப்-201819:13:03 IST Report Abuse
a.velmurugan சாதாரண மருத்துவ வசதி இல்லை டிஜிட்டல் இந்தியா என்று சொல்லும் அரசியல் தலைவர்கள் இன்னும் இந்தியா முன்னேறவில்லை முன்னேறப்போவதும் இல்லை தாய் இறந்தது கூட தெரியாத அந்த குழந்தை என்ன பாவம் செய்தது.
Rate this:
Share this comment
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
13-பிப்-201817:57:33 IST Report Abuse
pradeesh parthasarathy கண்கள் கலங்கின ......
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-பிப்-201817:46:24 IST Report Abuse
தமிழ்வேல் ஆஸ்பத்திரியில் இருக்கும்போது நெஞ்சுவலி ஏற்பட்டிருந்தது இறந்தால் அவர் சரியான கண்காணிப்பில் இல்லையா ?
Rate this:
Share this comment
Cancel
B. இராமச்சந்திரன் - இராமநாதபுரம்,இந்தியா
13-பிப்-201817:19:29 IST Report Abuse
B. இராமச்சந்திரன் செய்தியை படிக்கும்பொழுதே கண்ணீர் வரவழைக்கிறது..
Rate this:
Share this comment
Cancel
ushadevan -  ( Posted via: Dinamalar Android App )
13-பிப்-201815:47:45 IST Report Abuse
ushadevan அந்த செய்தியிலிருந்து மீள முடியவில்லை. அந்த குழந்தை நினைக்கவே மனம் கலங்குகிறது. கடவுளே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை