தொழிலதிபர் கெங்குசாமி நாயுடு மறைவு; முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொழிலதிபர் கெங்குசாமி நாயுடு மறைவு; முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி

Added : பிப் 13, 2018 | கருத்துகள் (3)
Advertisement

உடுமலை : உடுமலை ஸ்ரீ வெங்கடேசா தொழில் குழும தலைவரும், கம்ம நாயுடு மகாஜன சங்க மாநிலத்தலைவருமான கெங்குசாமி நாயுடு மறைவுக்கு, பல்வேறு முக்கிய பிரமுகர்கள், அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே பெதப்பம்பட்டியில், 1931ல், பிறந்தவர் கெங்குசாமி நாயுடு. வெங்கிடசுப்பா நாயுடு, லட்சுமி அம்மாள் தம்பதியின் ஒரே மகனான இவர், அமெரிக்காவில் பிஸினஸ் மேனேஜ்மென்ட் பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.

புதுச்சேரி பல்கலையில் முனைவர் பட்டம் பெற்ற அவர், அமராவதி ஸ்ரீ வெங்கடேசா பேப்பர் மில்ஸ், ராஜலட்சுமி பேப்பர் மில்ஸ், ஸ்ரீ வெங்கடேசா மில்ஸ், விஷ்ணுவர்த்தன் பேப்பர் மில்ஸ், வி.ஜி., பேப்பர் அண்டு போர்ட்ஸ் உட்பட பல்வேறு தொழில் நிறுவனங்களை மாநிலம் முழுவதும் துவக்கினார்.

சவுத் இண்டியன் பேப்பர் மில்ஸ் அசோசியேஷன் தலைவராகவும், அனைத்திந்திய சிறு காகித ஆலைகள் கூட்டமைப்பின், துணைத்தலைவராகவும், பதவி வகித்தார். மாநிலத்தில் செயல்படும், 50க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களின் தாளாளராக பணியாற்றிய அவர், தமிழ்நாடு கம்ம நாயுடு மகாஜன சங்கம், தெலுகு பெடரேஷன் தலைவராகவும், பல்வேறு விளையாட்டு சங்கங்களின் தலைவராகவும், உடுமலை மக்கள் பேரவை அமைப்பின் நிறுவனராகவும் இருந்தார்.

உடல்நலக்குறைவால், கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கெங்குசாமி நாயுடு, நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்தார். உடுமலை எஸ்.வி., மில் பகுதியிலுள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு, ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

கோவை பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர், ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ, துணை சபாநாயகர் ஜெயராமன், கால்நடைத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன், பொள்ளாச்சி எம்.பி., மகேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ., சண்முகவேலு, எம்.எல்.ஏ.,க்கள் சக்கரபாணி (ஒட்டன்சத்திரம்), கார்த்திக் (சிங்காநல்லுார்), ஜெயராமகிருஷ்ணன் (மடத்துக்குளம்), தி.மு.க., மாநில இளைஞரணி செயலாளர் சாமிநாதன், கம்ம நாயுடு மகாஜன சங்க மாநில செயல்தலைவர் மோகன், நிர்வாகிகள், பல்வேறு அமைப்பினர், கல்வியாளர்கள், பிரமுகர்கள் என, ஏராளமானோர், கெங்குசாமி நாயுடு உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அவரது உடலுக்கு, உடுமலை மின் மயானத்தில் நேற்று மாலை, இறுதி சடங்குகள் நடந்தன.இறந்த கெங்குசாமி நாயுடுவுக்கு, மனைவி ராஜலட்சுமி, மகன் ரவீந்திரன் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
14-பிப்-201808:43:58 IST Report Abuse
K.Sugavanam ஆழ்ந்த இரங்கல்கள்..
Rate this:
Share this comment
Cancel
thamodaran chinnasamy - chennai,இந்தியா
14-பிப்-201804:26:38 IST Report Abuse
thamodaran chinnasamy எங்கள் கம்மகுலத்தின் ஜோதி அவர். இணையில்லா வள்ளல். கம்மா குலத்தின் எழுச்சி நாயகர் . என்றும் என்றென்றும் எம் குலமக்களின் நலத்தை நாடிய மகான். நின்புகழ் வாழிய நீடுழி. தாமோதரன் நாயுடு, சிட்கோ நகர் வில்லிவாக்கம் , சென்னை.
Rate this:
Share this comment
Cancel
chandkec - singapore,சிங்கப்பூர்
14-பிப்-201801:39:04 IST Report Abuse
chandkec R.I.P
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X