ஜி.எஸ்.டி.,யை எளிமைப்படுத்துவேன்! காங்., தலைவர் ராகுல் திட்டவட்டம் Dinamalar
பதிவு செய்த நாள் :
ஜி.எஸ்.டி.,யை எளிமைப்படுத்துவேன்!
காங்., தலைவர் ராகுல் திட்டவட்டம்

கல்புராகி : ''மத்தியில், காங்., ஆட்சி அமைத்தால், ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரியை எளிமைப்படுத்துவேன்,'' என, காங்., தலைவர், ராகுல் கூறியுள்ளார்.

 Congress leader Rahul, GST, Finance Minister Arun Jaitley,  காங்கிரஸ் தலைவர் ராகுல் ,ஜி.எஸ்.டி., நிதியமைச்சர் அருண் ஜெட்லி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் , பிரதமர் நரேந்திர மோடி,former Prime Minister Manmohan Singh, Prime Minister Narendra Modi,Congress,  Goods and Services Tax, Rahul, Rahul Gandhi, ராகுல், ராகுல் காந்தி,


கர்நாடக மாநிலம், கலபுரகி நகரில் நேற்று, தொழில் வல்லுனர்கள் மத்தியில், காங்., தலைவர், ராகுல் பேசினார்.அப்போது, அவர் கூறியதாவது:மத்தியில், காங்., ஆட்சி அமைத்தால், ஜி.எஸ்.டி.,யில் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு, எளிமையாக்கப்படும்.
இந்த வரியால், மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்னைகளுக்கும், குழப்பங்களுக்கும் தீர்வு

காணப்படும். எல்லா பொருட்களுக்கும், ஒரே மாதிரியான வரி விதிப்பு அமல் செய்யப்படும்.

ஏழைகள் பயன்படுத்தும் அனைத்து பொருட்களையும், வரி வளையத்திலிருந்து அகற்ற, காங்., திட்டமிட்டிருந்தது. ஜி.எஸ்.டி.,யில் அதிக பட்ச வரி, 18 சதவீதம் என நிர்ணயிக்க முடிவு செய்துஇருந்தோம். ஐந்து அடுக்கு உடையதாக, ஜி.எஸ்.டி.,யை அமல்படுத்த வேண்டாம் என, துவக்கத்திலிருந்து, மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம்.

ஜி.எஸ்.டி.,யை அமல்படுத்தும் முன், பரீட்சார்த்த அடிப்படையில் சோதித்து பார்க்கும்படி கூறிவந்தோம். ஜி.எஸ்.டி., அமல்படுத்தும் முன், மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லியை, முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங் சந்தித்து, ஐந்தடுக்கு, ஜி.எஸ்.டி., வேண்டாம் என,வலியுறுத்தினார். ஆனால் அதை, அவர்கள் ஏற்கவில்லை.
இந்த விஷயத்தில், பிரதமர் நரேந்திர மோடி, ஏற்கனவே முடிவு எடுத்து விட்டார்; எனவே, இதில் மாற்றம் செய்ய முடியாது; குறிப்பிட்ட

Advertisement


நாளில், ஜி.எஸ்.டி., அமல்படுத்தப்படும் என, அருண் ஜெட்லி திட்டவட்டமாக கூறிவிட்டார்.

அப்போதும், 'ஜி.எஸ்.டி., இணையதளம் சோதிக்கப்படவில்லை. எனவே, மூன்று மாதங்களாவது, பரீட்சார்த்த முறையில், ஜி.எஸ்.டி., அமலாக்கத்தை ஆராய வேண்டும்' என, ஜெட்லியிடம் வலியுறுத்தி கூறினோம்.பல முறை வலியுறுத்தியும், தங்கள் நிலைப்பாட்டில், மத்திய அரசு உறுதியாக இருந்தது. அதன் பலனைத் தான், தற்போது நாம் பார்க்கிறோம்.இவ்வாறு அவர்கூறினார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-பிப்-201821:27:41 IST Report Abuse

Pugazh V//hussain - cuddlore,இந்தியா 14-பிப்-2018 11:33 இங்கு பதிவிடும் சகோதர்களில் 90% பேர் என்ன பதிவிடுகிறார்கள் என்று அவர்களுக்கும் புரியவில்லை படிக்கும் நமக்கும் புரியவில்லை BJPயை பற்றி சொன்னாலும் எதிர் மறையில் பதிவிடுகிறாங்க காங்கிரஸ் பற்றி சொன்னாலும் எதிர் மறையா கருத்திடுறாங்க // மிகவும் சரியான கருத்து. ஒரு அங்கீகாரம் தேடுகிற, நானும் இருக்கிறேன் என்று தனக்கே சொல்லிக்கொள்ள வேண்டிய மனநிலை யில் தான் பெரும்பாலானோர் இருக்கிறார்கள். சுற்றிலும் மனிதர்கள் இருந்தும் ஒரு தனிமை, வெறுமை உணர்வு அனைவருக்கும். எனவே தான் என்ன சொன்னாலும் எடக்கு மடக்காக பதிவு செய்கிறார்கள். ஜெயலலிதா குற்றவாளி என்று எழுதினால் எதிர்ப்பார்கள், அவர் இரும்பு பெண்மணி என்பார்கள். வேறே செய்தியில் ஜெயலலிதா தைரியமானவர் என்று எழுதினால் உடனே, அவர் ஊழல் ராணி என்று எழுதுவார்கள். பலமுறை சிரிப்பூடன் வாசித்து விட்டு கடந்து சென்று விடுவேன்

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-பிப்-201819:50:08 IST Report Abuse

Pugazh Vவழக்கம் போல தனிமனித விமர்சனங்கள் ..போரடிக்குது... ஜிஎஸ்டியினால் நேர்ந்த கஷ்டங்கள் சாதாரண இந்தியர்கள் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். வெற்று அரசியல் எழுதுபவர்களுக்கு அந்த கஷ்டங்கள் தெரிய வாய்ப்பில்லை. என்னவோ வரி ஏய்க்கறவர்களை கண்டு பிடித்ததாக சொல்கிறார்கள். அன்றும் இன்றும் என்றும் வரி கட்டுவது மக்கள் தான், எந்த வணிகனுமல்ல. வரி விகிதம் உயர்ந்தால் பிஸினஸ் காரர்களுக்கல்ல, மக்களுக்கு தான் சுமை கூடுகிறது

Rate this:
siriyaar - avinashi,இந்தியா
14-பிப்-201818:36:50 IST Report Abuse

siriyaarHe should explain what he going to do, just saying any body can say. We very sure this pappu can only do in pattaya.

Rate this:
14-பிப்-201816:19:13 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்GST யை முழுவதுமாக படித்துவிட்டு ஒரு மணிநேரம் பொதுமேடையில் ஹிந்தியை ஆங்கிலத்தில் மற்றவர்கள் எழுதிக்கொடுக்கும் காகிதத்தை வைத்துக் கொள்ளாமல் பேசினால் நம்புகிறோம் உங்களுக்கு GST என்றால் என்னவென்று தெரிகிறது என்று. மக்களை ஏமாற்றிய காலம் அந்த காலம்.

Rate this:
Karuthukirukkan - Chennai,இந்தியா
14-பிப்-201818:50:21 IST Report Abuse

Karuthukirukkanஜிஎஸ்டி மசோதாவே காங்கிரஸ் எழுதி கொடுத்தது தான் .. ஹி ஹி .....

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
14-பிப்-201816:10:01 IST Report Abuse

Endrum Indianநெனச்சா தாய்லாந்து, இங்கிலாந்து செல்லும் நீ படித்தது என்ன உழைத்தது என்ன? சம்பாதித்தது என்ன? அறிந்தது என்ன? இன்று வரை ஒன்று கூட இல்லை. அப்படி இருக்கும் போது ஜி.எஸ்.டி. கப்பார் சிங் டாக்ஸ் என்று கூறின உனக்கு ஜி.எஸ்.டி பற்றி என்ன தெரியும்? சும்மா காலையில் எழுந்தவுடன் என்ன உளறவேண்டும் இன்று என்று எழுதி வைத்து உனக்கு சொல்வார்கள், அதை நீ மைக்கின் முன்னே பார்த்து பார்த்து (ரவுல் வின்சி மைக்கின் முன்னே பேசும் போது பார்க்கவும்) ஏதோ ஒன்று உளறுகிறாய், அவ்வளவு தானே உனது செயல்.

Rate this:
Karuthukirukkan - Chennai,இந்தியா
14-பிப்-201818:49:40 IST Report Abuse

Karuthukirukkanமோடி படித்தது என்ன ?? எங்கே படித்தார் என்றாவது தெரியுமா ? எங்கே உழைத்து கொட்டினார் ?? அத்வானி சென்ற மதவெறி ரத யாத்திரையில் மைக் பிடித்தது தான் மாபெரும் உழைப்பு .. வேறு பல இடங்களில் வெறுப்பை கக்கி பேசியதும் உழைப்பு என்று வெச்சுக்கலாம் .. இது எல்லாம் இல்லாமல் இருக்கும் ராகுல் ஆயிரம் மடங்கு பரவாயில்லை ....

Rate this:
Jayaraman Easwaran - india,இந்தியா
14-பிப்-201819:26:18 IST Report Abuse

Jayaraman Easwaranமோடி அடிமட்டத்திலிருந்து வந்த இந்தியன். வாழ்க்கையின் சுக துக்கங்களை தெரிந்தவர் , மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் BRO...

Rate this:
anand - Chennai,இந்தியா
14-பிப்-201815:57:34 IST Report Abuse

anandபாப்கார்ன் மீது வரி கிடையாது.., எல்லா இந்தியர்களும் வருடம் ஒரு முறை தாய்லாந்து இலவசமாக செல்லலாம்.. இப்படி சொல்லுங்க ராகுல் நிறைய வோட்டு கிடைக்கும்...கச்சத்தீவு, காஷ்மீர் கொடுத்ததை போல் பக்கத்து நாடுகளுக்கு இந்தியாவின் பகுதிகள் தானம் கொடுக்கப்படும்..கரெக்ட் தானே ராகுல்

Rate this:
Tamilnesan - Muscat,ஓமன்
14-பிப்-201815:14:50 IST Report Abuse

Tamilnesan ஆமா, எளிமையாக்கி இத்தாலிக்கு அனைத்து பணமும் கொண்டு செல்லப்படும் என்பதே உண்மை......

Rate this:
Shanu - Mumbai,இந்தியா
14-பிப்-201814:34:41 IST Report Abuse

Shanuஇப்போ காங்கிரஸ்க்கு ஆதரவு அதிகரிக்கிறது. இந்த வாய்ப்பை ராகுல் சரியாக பயன்படுத்துவார்.

Rate this:
Ramkumar - Madurai,இந்தியா
14-பிப்-201813:52:31 IST Report Abuse

RamkumarPlease make GST as 5 % to All (All One India One தாஸ்)

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
14-பிப்-201815:13:28 IST Report Abuse

ஆரூர் ரங்டாஸ்மாக்குமா?? நாடு வெளங்கிடும்...

Rate this:
Karuthukirukkan - Chennai,இந்தியா
14-பிப்-201813:33:26 IST Report Abuse

Karuthukirukkanஜிஎஸ்டியை உருவாக்கிய காங்கிரசுக்கு தான் அதை முறையாக செயல்படுத்தவும் அறிவு இருக்கும் .. அதை அமல்படுத்த 8 ஆண்டுகள் முட்டுக்கட்டை போட்டு விட்டு , அதை தப்பும் தவறுமாக மக்களை நசுக்கும் விதமாக அமல்படுத்தி இருக்கிறது பிஜேபி .. என்ன செய்வது பிஜேபியில் கொஞ்சம் அறிவு தட்டுப்பாடு ஜாஸ்தி .. காங்கிரஸ் திட்டங்களை பெயர் மட்டும் தான் மாற்ற தெறியும் .. சுஷ்மாவை தவிர மற்றவர்களை அமைச்சர் என்று சொல்வதே தவறு .. எல்லாம் டம்மி .. சும்மா தலையாட்டி பொம்மைகளாக அமர்த்தப்பட்டு இருக்கின்றனர் .. காங்கிரஸ் மட்டும் 2009 டு 2014 ஒழுங்காக ஆண்டு இருந்தால் இந்த நிலை நாட்டுக்கு ஏற்பட்டு இருக்காது .. தவறுகளை திருத்தி கொண்டு வாருங்கள் ..

Rate this:
sankar - trichy,இந்தியா
14-பிப்-201816:28:24 IST Report Abuse

sankarஜீயெஸ்ட்டி அமல் படுத்தினால் தான் வெளிநாட்டினர் எளிதாக தொழில் தொடங்க வருவார் என்பது தெரிந்தும் பத்து ஆண்டு பாயில் படுத்து தூங்கிய காங்கிரசு . தான் இயற்கை உபாதையை கழிக்க கூட சோனியாவை நம்பி இருந்த மன்மோகன் . மன்மோஹனை இஷ்டத்துக்கு விமர்சித்த ராகுல் . இவங்க எல்லாம் ஒன்னும் கிழிக்க மாட்டாங்க . பீஜேபித்தான் ஓட்டை பற்றி எண்ணாமல் வருங்காலம் பற்றி யோசித்து திட்டங்களை செய்யும்...

Rate this:
Karuthukirukkan - Chennai,இந்தியா
14-பிப்-201818:55:32 IST Report Abuse

Karuthukirukkanநானும் என் தம்பி என் தங்கை எல்லாரும் வெளிநாட்டு கம்பெனியில் தான் வேலை செய்யிறோம் .. கடந்த 10 வருஷமா ?? அப்போ எல்லாம் எப்படி வந்துச்சு வெளிநாட்டு கம்பெனி ?? ஜிஎஸ்டி என்பது ஒரு வரி முறை அவ்வளவே .. அது வந்தால் வரி வசூல் எளிமையாக இருக்கும் என்று காங்கிரஸ் மசோதாவை உருவாக்கியது .. இதெல்லாம் 1993 ஆம் ஆண்டு மன்மோகன் எழுதிய ஆய்வறிக்கையில் இருந்த திட்டம் .. அப்போது அதை அமல்படுத்த இந்திய நாடு நிலைமை இல்லை .. 2000 பிறகு அமல்படுத்த கூடிய அளவில் வாட் எல்லாம் விதித்து நிலைமை இருந்தது .. ஜிஎஸ்டி மசோதா காங்கிரஸ் உருவாக்கியது 2007 .. 2009 இல் இருந்து பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய விடாமல் தடுத்தது யார் ?? 8 பாராளுமன்ற கூட்ட தொடர்களை முற்றிலும் பால்படுத்தி நிறுத்திசாதனை படைத்த கட்சி , வளர்ச்சிக்கு குந்தகம் விளைவித்த கட்சி பிஜேபி .. ஜிஎஸ்டி வேண்டாம் என்று கதறிய பிஜேபி , ஆட்சிக்கு வந்தவுடன் செய்தது அதே ஜிஎஸ்டியை அமல் செய்தது .. அதையும் காங்கிரஸ் ஆதரித்தது .. வரலாறு முக்கியம் .. உளற கூடாது .....

Rate this:
மேலும் 40 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement