கிரிமினல் வழக்கு பின்னணியுடன் 11 மாநிலங்களின் முதல்வர்கள் Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கிரிமினல் வழக்கு பின்னணியுடன்
11 மாநிலங்களின் முதல்வர்கள்

புதுடில்லி : மாநில முதல்வர்களில், 11 பேருக்கு எதிராக, கிரிமினல் வழக்குகள் உள்ளன; அதிகபட்சமாக, மஹாராஷ்டிர முதல்வர், தேவேந்திர பட்னவிசுக்கு எதிராக, 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

 மாநில முதல்வர்கள், கிரிமினல் வழக்கு , மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், பீஹார் முதல்வர் நிதிஷ் குமார், ஜம்மு - காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முப்தி, கிரிமினல் பின்னணி, State Chief Ministers, Criminal Case, Maharashtra Chief Minister Devendra Patnaivis, Bihar Chief Minister Nitish Kumar, Jammu and Kashmir Chief Minister Mehbooba Mufti, criminal background,ஏ.டி.ஆர்., எனப்படும், ஜனநாயக சீர்திருத்தங்கள் சங்கம், நாட்டின், 31 முதல்வர்கள் தொடர்பான ஆய்வறிக்கையை, சமீபத்தில் வெளியிட்டது.

அதன் விவரம்:


நாட்டின், 31 முதல்வர்களில், 11 பேருக்கு எதிராக, கிரிமினல் வழக்குகள் உள்ளன. இவர்களில், எட்டு பேருக்கு எதிராக, மிக கடுமையான வழக்குகள் உள்ளன.


அதிகபட்சமாக, மஹாராஷ்டிர முதல்வர், தேவேந்திர பட்னவிசுக்கு எதிராக, 22 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இவற்றில், மூன்று வழக்குகள், மிக தீவிரமானவை.பீஹார் முதல்வர், நிதிஷ் குமார், ஜம்மு - காஷ்மீர் முதல்வர், மெஹபூபா முப்தி ஆகியோருக்கு எதிராக, தலா ஒரு வழக்கு உள்ளது.

மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, கேரள முதல்வர், பினராயி விஜயனுக்கு எதிராக, மோசடி, நேர்மையற்ற வகையில் சொத்து விற்க துாண்டுதல், கலவரம், கிரிமினல் சதி உட்பட, 11 வழக்குகள் உள்ளன.

இந்த பட்டியலில், ஆம் ஆத்மியைச் சேர்ந்தவரும், டில்லி முதல்வருமான, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக, சட்ட விரோதமாக கூட்டம் நடத்துதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உட்பட, 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

Advertisementபா.ஜ.,வைச் சேர்ந்த, ஜார்க்கண்ட் முதல்வர், ரகுபர் தாசுக்கு எதிராக, எட்டு; காங்கிரசைச் சேர்ந்த, பஞ்சாப் முதல்வர், அமரீந்தர் சிங்கிற்கு எதிராக, நான்கு; பா.ஜ.,வைச் சேர்ந்த, உ.பி., முதல்வர், யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக, மூன்று; தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த, ஆந்திர முதல்வர், சந்திரபாபு நாயுடுக்கு எதிராக, மூன்று கிரிமினல் வழக்குள் உள்ளன.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-பிப்-201817:24:43 IST Report Abuse

a.thirumalaiஐயோ வேற வேலையே இல்லையா

Rate this:
christ - chennai,இந்தியா
14-பிப்-201813:01:56 IST Report Abuse

christகிரிமினல்களை தான் பணத்தை வாங்கிக்கொண்டு ஜெயிக்க வைக்கின்றனர் நமது மக்கள் .கிருமினல்களுக்கு தேர்தலில் நிற்பதற்கும் வாய்ப்பும் அளிக்கிறது தேர்தல் கமிஷன்

Rate this:
Hari Bojan - Ootacamund (Ooty),இந்தியா
14-பிப்-201811:59:49 IST Report Abuse

Hari Bojanகுற்றவாளிகள்தானே நாட்டை ஆள(குட்டிச்சுவராக்க) வருகின்றார்கள்

Rate this:
Mohamed Ilyas - Karaikal,இந்தியா
14-பிப்-201810:27:45 IST Report Abuse

Mohamed Ilyasமஹாராஷ்டிர முதல்வர், தேவேந்திர பட்னவிசுக்கு எதிராக, 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன, இவற்றில், மூன்று வழக்குகள், மிக தீவிரமானவை. பா.ஜ.,வைச் சேர்ந்த, உ.பி., முதல்வர், யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக, மூன்று கிரிமினல் வழக்குள் உள்ளன., சினிமாவில் வில்லன் கிரிமினல் முதல்வரை பழி வாங்கினால் சந்தோச படும் மக்கள் தான் நிஜத்தில் இந்த கிரிமினல்களை முதல்வராக தேர்ந்தெடுக்கிறது

Rate this:
Varun Ramesh - Chennai,இந்தியா
14-பிப்-201810:07:31 IST Report Abuse

Varun Rameshஎப்போதுமே ஆதிக்க வெறியும் அடக்கியாளும் ஆக்ரோஷமும் கொண்டவர்கள் மட்டுமே நாடாள முடியும். அந்த வகையில், ஜனநாயகத்திற்குள்ளும் சர்வாதிகாரம் தான் கோலோய்ச்சும். இது இதிகாச காலங்களிலிருந்து நடந்து வருவதுதான். எனவே, குற்றப்பின்னணி கொண்டவர்கள் நாடாள்வதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-பிப்-201808:52:08 IST Report Abuse

Srinivasan Kannaiyaஆக கூடி மாநில முதல்வர்கள் அனைவரும் தரமில்லாதவர்கள்...

Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
14-பிப்-201813:09:45 IST Report Abuse

dandyஉலகில் ஆக கூடிய கை நாட்டுகள் வசிக்கும் இந்தியாவில் இது முடியும்...

Rate this:
Babu - Chennai,இந்தியா
14-பிப்-201808:48:57 IST Report Abuse

BabuPlease publish names of politicians who are not criminals. You will have no names. Barring a handful, every politician would invariably get involved in some criminal activity.

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
14-பிப்-201807:54:06 IST Report Abuse

ஆரூர் ரங்அரசியல் போராட்டங்களில் நிகழும் சிறு சிறு நிகழ்வுகளுக்கும் ஆளும்கட்சி கிரிமினல் வழக்கு போடுவது சகஜம் .இதனை வைத்து ஒருவரை கிரிமினல் எனக் கூறமுடியாது. இதுபோன்ற அறிக்கை கொடுக்கும் என் ஜி ஓக்களின் ஒரே குறி நாட்டின் பெயரை ரிப்பேராக்கி முதலீடுகளை வெளியே விரட்டுவதுதானோ என்னவோ?

Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
14-பிப்-201813:13:32 IST Report Abuse

dandyஹி ஹி ஹி எங்கள் தலீவர் கும்ப அங்கத்தினர் எல்லாம் யோகியர்கள்.. குப்பனுக்கும் சுப்பனுக்கும் பழைய கோவணம் ..ஆனால் குடும்ப மீசை முளைக்காதவன் எல்லாம் கோடிகணக்கில் சினிமா தயாரிப்பார்கள் ,,நாங்கள் விம்மி பெருமிதம் அடைவோம்..எப்படி பணம் வந்தது என்று கேட்கமாட்டோம் ..எப்படி கருப்பு துண்டு ..மஞ்சள் ஆகியது என்று அடித்தாலும் கேட்க மாடடோம்...

Rate this:
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
14-பிப்-201806:09:30 IST Report Abuse

D.Ambujavalliஆஹா, உலக மஹா உத்தமரை முதல்வராகக் கொண்ட தமிழகம்

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
14-பிப்-201805:56:50 IST Report Abuse

Kasimani Baskaranசின்னம்மா பெங்களூரில் இருப்பதால் தர்மம் தப்பியது....

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
14-பிப்-201809:11:57 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்டில்லியில் அடகு வைக்கப்பட்டுள்ளது....

Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement