கட்சி அறிவிப்பில் கமலை முந்த ரஜினி ஆயத்தம் - ரசிகர் மன்றத்தினருடன் 3 நாள் ஆலோசனை Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கட்சி அறிவிப்பில் கமலை முந்த ரஜினி ஆயத்தம்
ரசிகர் மன்றத்தினருடன் 3 நாள் ஆலோசனை

நடிகர் கமலுக்கு முன், தன் கட்சி பெயரை அறிவிப்பது குறித்து ஆலோசிக்க, ரசிகர் மன்ற நிர்வாகிகளின் அவசர கூட்டத்துக்கு, நடிகர் ரஜினி ஏற்பாடு செய்துள்ளார்.

 ரஜினி அரசியல், ஆன்மீக அரசியல், நடிகர் கமல், தேர்தல் கமிஷன், ரஜினி கட்சி, கமல் அரசியல், ரஜினி மக்கள் மன்றம் , நாளை நமதே, ரஜினி ரசிகர் மன்றம், நடிகர் ரஜினிகாந்த்,ரஜினி புதிய கட்சி ,ரஜினி தனிக்கட்சி , கமல் புதிய கட்சி, கமல் தனிக்கட்சி, Rajini Political, Spiritual Politics, Actor Kamal, Election Commission, Rajini Party, Kamal Politics, Rajini makkal mandram , naalai namathe , Rajini Fan Club, Kollywood, Rajini, Rajinikanth, aanmeega arasiyal,


அமெரிக்காவிலிருந்து, இன்று சென்னை திரும்பும், நடிகர் கமல், ஓரிரு நாட்களில், டில்லி சென்று, புதுக்கட்சியை, தேர்தல் கமிஷனில் பதிவு செய்ய உள்ளார். வரும், 21ல், கட்சி பெயரை, மதுரை பொதுக்கூட்டத்தில் அறிவிக்கவுள்ளார்.

விருப்பம்


அமெரிக்கா சென்றிருந்த கமல், அங்கு அளித்த பேட்டி ஒன்றில், 'ரஜினியுடன் நட்பு வேறு;அரசியல் வேறு. அவருடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை' என்றார். ஆனால், ரஜினியோ, 'கமலுடன் கூட்டணி அமைக்கப்படுமா என்பதற்கு, காலம் தான் பதில் சொல்லும்' என்றார்.'கமலும், ரஜினியும் இணைந்து செயல்பட வேண்டும்' என, மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலர், நக்மா கூறியுள்ளார்.

இந்நிலையில், கமலுக்கு முன், ரஜினி, தன் கட்சியின் பெயரை வெளியிட வேண்டும் என, அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.இது குறித்து, ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூறியதாவது: கமல், தன் கட்சி பெயரை அறிவித்து விட்டு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்றால், அவரது கட்சியில், அதிக இளைஞர்கள் சேர வாய்ப்புள்ளது.

ஏற்கனவே, கமல் நடத்தி வந்த, 'மையம்' என்ற இணையதளம், 'நாளை நமதே' என, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இந்த இணையதளத்தில், உலக நாடுகளில் வசிக்கும் தமிழர்களின் ஆதரவு, கமலுக்கு அதிகமாக கிடைத்துள்ளது. எனவே, கமல் கட்சிக்கு முன், ரஜினி கட்சியை துவக்கினால், அவருக்கு பின்னால், இளைஞர்கள் அணிவகுக்கக் கூடும்.

திட்டம்எனவே, கமலுக்கு முன் ரஜினி, தன் கட்சி பெயரை அறிவிப்பது குறித்து ஆலோசிக்க, ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகிகளை அழைத்துஉள்ளார். சென்னை, கோடம்பாக்கம், ராகவேந்திரா மண்டபத்தில், இன்று முதல், மூன்று நாட்கள் வரை, ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். இவ்வாறு அவர்கள்கூறினர்.

Advertisement


களமிறங்கும் ரஜினி

கட்சி அறிவிப்புக்கு முன், மாவட்ட நிர்வாகிகளை நியமிப்பதில், ரஜினி நேரடியாக களமிறங்க உள்ளார். இதற்கு முன், ரஜினியால் நியமிக்கப்பட்ட குழுவினர், வேலுார், துாத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆலோசனை கூட்டம் நடத்தி, நிர்வாகிகளை நியமித்தனர். மற்ற மாவட்டங்களில், நிர்வாகிகளை நியமிப்பதற்கான ஆலோசனை கூட்டம், சென்னையில், ரஜினி முன்னிலையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, இன்றைய கூட்டத்தில், தேனி, நீலகிரி மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். விரைவில், சென்னை மாவட்ட நிர்வாகிகளும் நியமிக்கப்பட உள்ளனர். கமலின் அரசியல் பயணம் சூடு பிடித்துள்ள நிலையில், ரஜினியும் நேரடியாக களமிறங்கி, கட்சிப் பணியில் தீவிரம் காட்ட முடிவு எடுத்துள்ளார். தற்போது, ரஜினி நடித்த, காலா படம், ஏப்ரலில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ரஜினியின் கடைசி படமாக, மணிகண்டன் இயக்கத்தில், கடைசி விவசாயி படம் வெளியாகலாம் என, தெரிகிறது. அரசியல் பயணத்திற்கு வலுசேர்க்கும் வகையில், கடைசி விவசாயி படம், ரஜினிக்கு அமையும் என, கூறப்படுகிறது.


- நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.S.Jayagopal. - Salem,இந்தியா
14-பிப்-201819:15:12 IST Report Abuse

M.S.Jayagopal.காவிரி நதி நீர் பிரச்சினையை தமிழர்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். காவிரி நீருக்காக குரல் கொடுக்கும் இதே தமிழக தலைவர்கள் கர்நாடகாவில் கன்னடராக பிறந்து இருந்தால் தமிழகத்திற்கு தணணீர் கொடுக்க ஒப்புக்கொள்வார்களா? காவிரிப் பிரச்சினையில் நீதியும் அரசியலும் சேர்ந்தே உள்ளது. இதில் அரசியல் பிரச்சினை தீர்க்கப்படாதவரை ஒரு நியாயமான தீர்வு கிடைக்காது.

Rate this:
Raja - Madurai,இந்தியா
14-பிப்-201816:36:02 IST Report Abuse

Rajaஎதை கேட்டாலும் ரஜினி காலம் தான் பதில் சொல்லும் என்கிறார். அப்புறம் ஏனப்பா அவரை போயி தொல்லை பண்றீங்க. பதில் தெரிஞ்சா சொல்ல மாட்டாரா? அட ராமா ராமா. தமிழ் நாட்டுக்கு 2100 லயாவது நல்ல தலைவர் கிடைப்பாரான்னு தெரியவில்லை

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
14-பிப்-201815:36:11 IST Report Abuse

Endrum Indianகமலை முந்த ரஜினி, ரஜினியை முந்த விஜய், விஜய்யை முந்த அஜீத், ஆகமொத்தம் நல் ஒழுக்க மக்களே இல்லை போல டாஸ்மாக் நாட்டில். ஒரு வேடதாரி - டைரெக்டர் ஸ்டார்ட் என்றால் ஆடுவது, கட் கட் என்றால் நிப்பாட்டுவது - அடுத்த முதல் மந்திரி???? 8 .2 கோடி டாஸ்மாக் நாட்டு மக்களில் ஒரு நல்லவன் கூட கிடைக்கமாட்டார்களா மக்களின் துயர் துடைக்க. சினிமாவில் நடிகன், நடிகை ஒரு மாயத்தோற்றம் காண்பிக்கிறார்கள் அதை உண்மை என்று டாஸ்மாக் நாட்டு மக்கள் நம்புகின்றார்கள், அதான் டாஸ்மாக் கடைகள் ஓஹோ என்று நடக்கின்றது. .

Rate this:
Shanu - Mumbai,இந்தியா
14-பிப்-201814:30:24 IST Report Abuse

Shanuகமலை ஆதரித்தாலும் பரவாயில்லை. ரஜினியை ஆதரிக்க வேண்டாம். இவர் மோடிக்கு பினாமி. மேலும், இவர் கர்நாடகக்காரன். இவரை நம்பாதீர்கள். பதவிக்கு ஆசைப்படுகிறார். இவர் ஒரு தொகுதியில் ஜெயிப்பதே கடினம். அரசியலுக்கு வரும் முன்னர், காவிரி நீருக்கு, கர்நாடக அரசை ஒரு வார்த்தை கேட்க முடியுமா? அப்படி கேட்டால், இவரது சேர்த்து வைத்திருக்கும் சொத்து அணைத்து கர்நாடகாவில் அழித்து விடுவார்கள். ரஜினி ஒரு நாடககாரர். அவரை நம்ப வேண்டாம்.

Rate this:
sathiya narayanan - Dallas,யூ.எஸ்.ஏ
14-பிப்-201812:14:24 IST Report Abuse

sathiya narayananமுற்றிலும் உண்மை. ரஜினி பிஜேபி அழுத்ததால் மட்டுமே அரசியலுக்கு வந்து தன் மீது இருக்கும் மதிப்பை கெடுத்துக்கொள்ள போவது உறுதி.

Rate this:
sankar - trichy,இந்தியா
14-பிப்-201816:44:20 IST Report Abuse

sankarஅப்படி என்னங்க பீஜீபி தமிழ் நாட்டுக்கு கெடுதல் பண்ணீட்டாங்க . பன்னீரு பழனி விஜயபாஸ்கர் , இவங்க எல்லாம் சின்ன திமிங்கலங்கள் . ஜெயா பெரிய திமிங்கலம் . சசிகலாவும் கருணாவும் மலை முழுங்கிங்க . இவங்க எல்லாம் தமிழ் நாட்டில் வாரி சுருட்டினாங்க . ஒரு பக்கம் மத மாற்ற கும்பல்கள் மதம் மாற்றி வருகின்றன . என் ஜீ ஓ வின் வெளி நட்டு பணத்தை மோடி கண்காணிப்பதால் திருட்டு பணம் வரத்து குறைவு . நீங்க ஓட்டேய் போடாத பீஜேபிதான் இப்போ பல்கலை கழக நாத்தத்தை வெளிய கொண்டு வருகிறது . லைசென்ஸுக்கு லஞ்சம் ரேஷன் கார்டுக்கு லஞ்சம் ரேஷன் பொருள் எடை குறைவு . தாசில்தார் அலுவலகத்தில் லஞ்சம் வான்டட்டாரா போக்குவரத்து கழகத்தில் லஞ்சம் . போலீஸ் காரண் லஞ்சம் ..அரசு வேலைக்கு லஞ்சம் போக்குவரத்து மின்சார துறையில் ஊழல் . அரசு கான்ட்ராக்ட்டில் 50 : 50 அதிமுக திமுக . டாஸ்மார்க்கில் ஷேர் எப்படி எல்லா விதத்திலும் லஞ்சம் வாங்கும் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி . நீங்க பீஜேபிக்கு ஓட்டு போடல உங்களுக்கு பிஜேபியை கேட்க தகுதி இல்லை அதையம் மீறி அவர்கள் நல்ல து செய்கிறார்கள் . மீத்தேன் வேண்டாம் (இந்தியாவில் பத்து இடத்தில் மீத்தேன் எடுக்கிறார்கள் ) . ஹைட்ரொ கார்பன் வேண்டாம் (இந்தியாவில் வேறு மாநிலங்களில் எடுக்கிறார்கள் ) நியூட்ரினோ வேண்டவே வேண்டாம் . சந்திரபாபு என் மாநிலத்துக்கு கொடு என்கிறார் . திராவிட கலக்குங்க திருடங்க தான் அதில் எந்த சந்தேகமும் வேண்டாம் . கழகம் என்றால் மது அருந்தும் இடம் என்று அர்த்தம் . இவனுழுகலா மாநிலத்தை முன்னேற்ற போறாங்க...

Rate this:
Hari Bojan - Ootacamund (Ooty),இந்தியா
14-பிப்-201812:05:24 IST Report Abuse

Hari Bojan120 மக்களும் ஆளாளுக்கு ஒரு கட்சி தொடங்கினால் நன்றாக இருக்குமே இன்றோ எவரும் எவருடனும் சேரமாட்டார்கள்

Rate this:
Kurshiyagandhi - Arimalam,இந்தியா
14-பிப்-201811:59:18 IST Report Abuse

Kurshiyagandhiகூத்தாடிகளுக்கு வேலை இல்லை..அரசியலுக்கு வந்து நம்ம உயிரை எடுக்கப்போகுதுங்க..............

Rate this:
vimala - chennai,இந்தியா
14-பிப்-201811:47:01 IST Report Abuse

vimalaயார் பக்கமும் , எந்த பக்கமும் சாயாமல் , மக்களில் ஒருவனாக இருந்தால்தான் மக்களின் உண்மையான நிலவரம் புரியும் . மக்களுக்காக வே நின்று மக்களின் வாழ்வாதாரம் , கல்வி , ஊதியம் , வருமானம் அனைத்தும் உயரவேண்டும் . அணைத்து பொருட்களின் விலை உயரும்போதும் ,சாதாரண மக்களின் ஊதியமும் உயர வேண்டும் . இப்பொழுது உள்ள கட்சியெல்லாம் மக்களின் வாழ்வை உயர்த்தவில்லை மாறாக கட்சியும், கட்சி உறுப்பினர்களின் வாழ்க்கையும் தான் உயர்ந்து உள்ளது. பிஜேபி, காங்கிரஸ், ADMK, DMK, கமல், ரஜினி யாராக இருந்தாலும் மக்களின் நிலை அறிந்து ஆட்சி செய்தால் அவரின் ஆட்சி மக்கள் மத்தியில் உயர்ந்து நிற்கும். இல்லையென்றால் ......

Rate this:
vimala - chennai,இந்தியா
14-பிப்-201811:26:48 IST Report Abuse

vimalaஎந்த பக்கமும் , யார் பக்கமும் சாயாமல் மக்களில் ஒருவனாக இருந்து மக்களுக்கு நல்லது செய்தால் எந்த ஆட்சியும் நிலை நிற்கும். அது பிஜேபி , கமல் , ரஜினி யாராக இருந்தாலும் சரி. மக்களின் வாழ்கை, முன்னேற்றம் , கல்வி , ஊதியம் , எல்லாமே மக்களுக்கு தேவையான அளவு கிடைக்கிறதா என கீழ் தட்டு மக்களின் நிலைகளை உண்மையான மனதை நேய உணர்வோடு யார் செய்கிறார்களோ அவரின் ஆட்சியே நிலை நிற்கும் .

Rate this:
sankar - trichy,இந்தியா
14-பிப்-201816:50:29 IST Report Abuse

sankarமக்களுக்கு நல்லது கெட்டது என்ன தெரியும் . ஓசி சோறு கொடுத்தால் நல்ல ஆட்சி என்பான் . அம்மா கான்டீன் ஆயிரம் ஆரம்பிச்சா அம்மா தர்ம தேவதை என்பான் . அந்த தேவதை ஒரு ஐந்தாயிரம் கோடிய பாக்கெட்டில் போட்டுவிடும் ஓசி சோறும் போடும் நேரத்தில் . வாஜ்பாய் ரோடு போட நிலம் எடுக்கும்போது விவவசாயி விவாசாயி என்றான் இன்னிக்கி இந்தியா முழுதும் நல்ல ரோடு இருக்கு . இப்போ அதிலுள்ள பயணம் பண்ணி இப்ப எல்லாம் எட்டு மணி நேரந்தா ஆவுதேவே திருநெல்வேலிக்கு என்று பேசுறான் . நியூட்ரின்ன வேண்டாம் மீத்தேன் வேண்டாம் ஐட்ரோ கார்பன் வேண்டாம் . எதுவும் வேண்டாம் தண்ணீ சேமிக்க மாட்டோம் சொட்டு நீர் பாசனம் செய்ய மாட்டோம் . கர்நாடகா தண்ணீ விடேனோம் விடேனோம் இதான் எங்களுக்கு தெரியும் மக்களை கேட்டு ஆட்சி செய்தால் பயித்தியம் தான் பிடிக்கும் . பதவிக்கும் பொருளுக்கும் ஆசை படாமல் மக்களுக்கு நல்லது செய்து அவர்கள் வாயார வாழ்த்துவதை பெற வேண்டும் நினைக்கும் என்னை போன்ற நல்லவர்கள் வரும்போது நாடு சிறக்கும்...

Rate this:
kumar -  ( Posted via: Dinamalar Android App )
14-பிப்-201811:04:04 IST Report Abuse

kumarDifference between kamal and Rajani approach. Rajani route is independent and gradual. Kamal only reacts to what he thinks Rajani will do and looking for media headlines only. He doesnt seem to hold a clear view on any subject.

Rate this:
மேலும் 20 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement