ஜெ., இறந்தது எப்படி? விவேக்கிடம் விசாரணை Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஜெ., இறந்தது எப்படி?
விவேக்கிடம் விசாரணை

சென்னை : 'சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், ஜெ.,வை நேரில் பார்க்கவில்லை' என, விசாரணை கமிஷனில் ஆஜரான, இளவரசியின் மகன், விவேக் தெரிவித்துள்ளார்.

 ஜெயலலிதா மரணம்,  இளவரசி மகன் விவேக், சென்னை அப்பல்லோ மருத்துவமனை, விசாரணை கமிஷன், நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் , 
Jayalalitha death, ilavarasi son Vivek, Chennai Apollo Hospital, Commission of Inquiry, Justice Arumugasamy Commission, A.D.M.K,Jayalalitha,அ.தி.மு.க, ஜெயலலிதா,


ஜெயலலிதா மரணம் குறித்து, நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் விசாரித்து வருகிறது. இதுவரை, 20க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடந்துள்ளது. இளவரசியின் மகனும், ஜெயா, 'டிவி' நிர்வாகியுமான, விவேக், நேரில் ஆஜராக வேண்டும் என, 'சம்மன்' அனுப்பப்பட்டு இருந்தது.இதையடுத்து, விவேக், நேற்று காலை, 10:30 மணிஅளவில், கமிஷனில் ஆஜரானார். மூன்று மணி நேரம் நடைபெற்ற விசாரணையில், விவேக், பல தகவல்களை தெரிவித்துள்ளார்.அதில், அப்பல்லோ மருத்துவமனையில், ஜெ., அனுமதிக்கப்பட்ட போது, தான் வெளிநாட்டில் இருந்ததாகவும், அதனால், ஜெ.,வை நேரில் பார்க்கவில்லை என்றும்,கூறியுள்ளார்.

மேலும், ஜெ., மரணம் அடையும் அளவுக்கு, அவரது உடல்நிலையில், என்ன பாதிப்பு ஏற்பட்டதுஎன்பது பற்றி, தனக்கு எதுவும் தெரியாது என்றும், நீதிபதியிடம் தெரிவித்துள்ளார்.இதையடுத்து, விவேக், வரும், 28ல், மீண்டும் ஆஜராக, கமிஷன் உத்தரவிட்டுள்ளது. விசாரணை முடித்து வெளியே வந்த, விவேக், முதலில், செய்தியாளர் சந்திப்பை தவிர்த்தார். பின், சில நிமிடங்களில், செய்தியாளர்களை தேடி வந்து, பேட்டியளித்தார்.

Advertisement

அப்போது, அவர் கூறுகையில், ''கமிஷனில் ஆஜராக, இரண்டு நாட்களுக்கு முன், 'சம்மன்' அனுப்பி இருந்தனர். ''விசாரணையில் இருக்கும் போது, அதை பற்றி கூறுவது தவறு. மீண்டும், 28ல் விசாரணைக்கு வர உள்ளேன். எந்த ஆவணங்களையும், நான் சமர்ப்பிக்க வில்லை,'' என்றார்.

தடயவியல் பரிசோதனை!

ஜெ., சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட, ஐந்து, 'வீடியோ'க்களை, கமிஷனில், தினகரன் சமர்ப்பித்திருந்தார். அதேபோல், அவரது ஆதரவாளர் வெற்றிவேலும், ஜெ., சிகிச்சை வீடியோவை சமர்ப்பித்திருந்தார். இந்த வீடியோவின் உண்மை தன்மையை கண்டறிய, தடய அறிவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக, கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்தன.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
14-பிப்-201815:41:20 IST Report Abuse

Endrum Indianசெப்டம்பரில் இறந்த பிணத்தை பார்க்க அனுமதி கொடுக்கவில்லை என்று சிம்பிளாக சொல்லியிருக்கலாம்.

Rate this:
14-பிப்-201812:54:24 IST Report Abuse

ஸாயிப்ரியாஇவருக்கு தெரிந்ததெல்லாம்ஜெ...சானல்களும் அதன் வருமானம் மட்டுமே சசி சொல்படி.

Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
14-பிப்-201812:23:32 IST Report Abuse

dandyஇவன் சொல்வது முழு பொய் ...இவன் அடிக்கடி தன நண்பர்கள் உடன் அப்போல்லோ வந்ததாக பலர் கூறியுள்ளனர்...ஜெயா இறந்த பிறகுதான் அப்போலோ வந்திருக்க வேண்டும் ..பல பேர் சம்பத்த பட்டு உள்ளதால் ""முறையாக"" விசாரித்தால் உண்மை வெளி வரும் ..வெளிமாநில நேர்மையான அதிகாரிகள் .இதை செய்யமுடியும் ...டாஸ்மாக் நாட்டு அதிகாரிகள் விசாரிக்க மாடடார்கள் ,,விலை போக கூடிய பிறவிகள்

Rate this:
Shanu - Mumbai,இந்தியா
14-பிப்-201810:48:07 IST Report Abuse

Shanuஇந்த மன்னார்குடி கூட்டத்தை பத்தி யாராவது பேசினால் கொலை செய்வார்கள். நான் தமிழ்நாட்டை விட்டு வெளியே இருப்பதால் தைரியமாக கருத்து எழுத முடிகிறது.

Rate this:
Shanu - Mumbai,இந்தியா
14-பிப்-201810:46:12 IST Report Abuse

Shanuஜெயலலிதா அவ்வளவு சொத்தை இவனுக்கு கொடுத்து இருக்கிறார். 75 நாட்கள் ஆஸ்பத்திரியில் அவதிப்பட்ட பெண்ணை பார்க்கவில்லை என்றால், ??

Rate this:
Subash - Thanjai,இந்தியா
14-பிப்-201813:46:36 IST Report Abuse

Subashஇவனும் மாபியா கும்பலில் ஒருவன்....

Rate this:
Shanu - Mumbai,இந்தியா
14-பிப்-201810:44:01 IST Report Abuse

Shanuஇவர் ஒரு கூட்டு கள்ளன். இவனை ரெண்டு அடி அடித்து கேட்டால் உண்மை வரும். இவன் முகத்தை பார்த்தாலே வெறுப்பாக இருக்கிறது.

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-பிப்-201808:55:58 IST Report Abuse

Srinivasan Kannaiyaஇருக்கும் இடத்தை விட்டு விட்டு இல்லாத இடம் தேடி அலையும் ஆறுமுகசாமி...

Rate this:
karthi - chennai,இந்தியா
14-பிப்-201808:31:50 IST Report Abuse

karthiVivek is telling that he has not seen Jayalalita. It appears Mannargudi gang only responsible for Jayalalita's unnatural death.

Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
14-பிப்-201808:02:24 IST Report Abuse

Sanny அதெப்படி அப்போலோவில் இல்லாத வீடியோ பிரதி தினகரனிடம் மட்டும் இருக்கு.

Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
14-பிப்-201812:45:31 IST Report Abuse

dandyகாரணம் இந்த video அப்போலோவில் எடுக்கப்படவில்லை எங்கேயோ ..எப்போதோ ஜெயாவின் சிகிச்சையின் பொது வேலைக்காரியால் எடுக்கப்பட்டு morph பண்ணப்படாது ..கை அசைவை பாத்தாலே இது போலி என்று விளங்கும்...

Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
14-பிப்-201808:01:22 IST Report Abuse

Sanny அப்போது அந்த 75 நாட்களும் வெளிநாட்டில் இருந்ததுக்கு ஆதாரத்தையும் பாஸ் போர்ட், விமான டிக்கெட் மாதிரியையும் சமர்ப்பித்திருக்கணும். அப்படி செய்திருந்தால் நம்பிட்டோம்.

Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
14-பிப்-201812:25:24 IST Report Abuse

dandyகொஞ்ச நாட்களில் செய்து கொடுப்பான் ..சுதந்திர இந்தியாவில் ...அதுவும் டாஸ்மாக் நாட்டில் பணம் கொடுத்தால் எதுவும் முடியும்...

Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement