நில அபகரிப்பு வழக்கு: பெண் சார் - பதிவாளர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நில அபகரிப்பு வழக்கு: பெண் சார் - பதிவாளர் கைது

Added : பிப் 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

சென்னை : போலி ஆவணம் வாயிலாக, 1.50 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரித்த வழக்கில், ராயப்பேட்டை சார் - பதிவாளர், சிவபிரியாவை, போலீசார் கைது செய்தனர்.சென்னை, ஆலப்பாக்கம், அஷ்டலட்சுமி நகரைச் சேர்ந்தவர், சொக்க லிங்கம்; சில ஆண்டு களுக்கு முன் இறந்துவிட்டார். இவருக்கு, பள்ளிக்கரணை, காமகோடி நகரில்,1.50 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் உள்ளது.
போலீசில் புகார் : இந்த நிலத்தை, அவரது மகன், சிதம்பரம், தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.திடீரென, விருகம்பாக்கத்தைச் சேர்ந்த, 'ஜீவன் பவுண்டேஷன்' என்ற நிறுவனத்தை நடத்தி வந்த, பெரியசாமி, 39, மற்றும் அவரது கூட்டாளிகள், திருவொற்றியூரைச் சேர்ந்த, விக்னேஷ்வரன், 28, தண்டையார்பேட்டை, ராஜேஸ்வரன், 35, ஆகியோர், சொந்தம் கொண்டாடினர்.சிதம்பரத்தின் தந்தை, சொக்கலிங்கம், தங்களிடம் நிலத்தை விற்றுவிட்டதாகவும், அதற்கான ஆவணங்களையும் காட்டி உள்ளனர். இதனால், அதிர்ச்சிஅடைந்த சிதம்பரம், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மத்திய குற்றப்பிரிவில் உள்ள, நில மோசடி தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்தனர். அப்போது, பெரிய சாமி மற்றும் அவரது கூட்டாளிகள் உள்ளிட்ட மூவரும், போலி ஆவணம் தயாரித்தும், ஆள் மாறாட்டம் செய்தும், சொக்கலிங்கத்தின் நிலத்தை அபகரித்தது தெரிய வந்தது. இதற்கு, சைதாப்பேட்டை சார் - பதிவாளராக பணியாற்றிய, சிவபிரியா உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, ஜன., 23ல், பெரியசாமி, விக்னேஷ்வரன், ராஜேஸ்வரன் ஆகியோரை, போலீசார் கைது செய்தனர். சார் - பதிவாளர் சிவபிரியா மீதும் வழக்கு பாய்ந்தது. அவர் திடீரென, ராயப்பேட்டை சார் - பதிவாளராக மாற்றப்பட்டார்.
விசாரணை : அவரிடம், கிடுக்கிப்பிடி விசாரணை நடந்து வந்தது. அப்போது, அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து, நேற்று மாலை, சிவபிரியாவை, போலீசார் கைது செய்தனர். கடலுார் மாவட்டம், கூத்தப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சிவபிரியா, 43; எம்.எஸ்சி., கணிதம் படித்து உள்ளார். அவர், தமிழக அரசு பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில், தேர்ச்சி பெற்று, 2002ல், பத்திரப்பதிவு துறையில், சார் - பதிவாளராக பணியில் சேர்ந்தார்.கடந்த, 2012ல், மாவட்ட பதிவாளராக பதவி உயர்வு பெற்றார். பின், சிவபிரியா, சிபாரிசு பெற்று, சைதாப்பேட்டை, சார் - பதிவாளராக பொறுப்பேற்று, அந்த இடத்தில், பல ஆண்டுகளாக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விதிமீறலுக்கு பெயர் போனவர்! :
 சிவபிரியா, விருகம்பாக்கம் சார் - பதிவாளராக இருந்த போது, 76 பத்திரங்கள், விதிகளை மீறி பதிவானதாக கண்டுபிடிக்கப்பட்டது. இதில், பெரும்பாலான பத்திரங்கள், ஏரி, குளம் போன்ற நீர்நிலைகள், தனியார் பெயருக்கு பதிவு செய்யப்பட்டவை என, விசாரணையில் கண்டுபிடிக்கப் பட்டது
சோழிங்கநல்லுார் தாலுகா, செம்மஞ்சேரியில், 90 கோடி ரூபாய் மதிப்பிலான, புறம்போக்கு நிலம், போலி ஆவணம் வாயிலாக மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக, மத்திய குற்றப்பிரிவு, 2014ல் பதிவு செய்தவழக்கில், சிவபிரியா சிக்கினார்
பள்ளிக்கரணை சதுப்புநில பகுதி யில், மோசடியாக பதிவான, 368 பத்திரங்களில், 252 பத்திரங்கள், சிவபிரியா சார் - பதிவாளராக இருந்த போது பதிவானவை. இது தொடர்பான வழக்கில், இந்தவிபரங்கள் வேண்டுமென்றே மறைக்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ramasamy naicken - Hamilton,பெர்முடா
15-பிப்-201802:04:07 IST Report Abuse
ramasamy naicken இந்த கேடி சிவப்ரியாவை கைது செய்ய கிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஆகி உள்ளன. நாலு நாளில் ஜாமியினில் வெளியே வந்து விடுவார். வழக்கு உச்ச நிதி மன்றம் வரை போய் தீர்ப்பு வருவதற்குள் சிவப்பிரியாவை புதைத்த இடத்தில புல் முளைத்து விடும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X