வரும் கல்வியாண்டில் 13 இன்ஜினியரிங் மேலாண்மை கல்லூரிகள் மூடல் Dinamalar

எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மூடல்
வரும் கல்வியாண்டில் 13 இன்ஜினியரிங்
மேலாண்மை கல்லூரிகள் மூடல்

தமிழகத்தில், 13 இன்ஜினியரிங் மற்றும் மேலாண் படிப்பு கல்லுாரிகள் மூடப்பட உள்ளன. இதற்கான அனுமதி கேட்டு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,க்கு, கல்லுாரிகள் கடிதம் அனுப்பி உள்ளன.

இன்ஜினியரிங் கல்லூரி, மேலாண்மை கல்லூரிகள் மூடல், ஏ.ஐ.சி.டி.இ., அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில், கல்லூரி மூடல், பி.ஆர்க் கல்லுாரி, அண்ணா பல்கலை,  கல்வியாண்டு , Engineering College, Management Colleges, AICTE, All India Institute of Technology Education, College closure, Barch College, Anna University,


ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்று, தமிழகத்தில், 550க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் மற்றும், பி.ஆர்க்., கல்லுாரிகள் செயல்படுகின்றன. அவற்றுக்கு, ஆண்டுதோறும், மத்திய அரசு சார்பில், ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் வழங்கப்படுகிறது.

அத்துடன், அண்ணா பல்கலை சார்பில், பாடத்திட்டத்துக்கான இணைப்பு அந்தஸ்தும் தரப்படுகிறது.


விண்ணப்பம்


வரும் கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கைக்கான அங்கீகாரம் கோரி, ஏ.ஐ.சி.டி.இ.,க்கு, இன்ஜி., கல்லுாரிகள் விண்ணப்பங்கள் அனுப்பியுள்ளன. முந்தைய கல்வியாண்டில்,இன்ஜி., - பி.ஆர்க்., எம்.சி.ஏ., மற்றும், எம்.பி.ஏ., படிப்புகளுக்கு, 586 கல்லுாரிகள் அனுமதி பெற்றன.

வரும் கல்வி ஆண்டிற்கு, இதுவரை, 578 கல்லுாரிகள் மட்டுமே விண்ணப்பித்து உள்ளன.அவற்றில், 13 கல்லுாரிகள், இன்ஜினியரிங், மேலாண்மை படிப்புகளில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கையை நிறுத்தி கொள்வதாக தெரிவித்துள்ளன.

ஏற்கனவே படித்து கொண்டிருக்கும் மாணவர்களுக்கு மட்டும் பாடம் நடத்தி, மூன்றாண்டுகளில், அவர்களின் படிப்பு முடிந்ததும், கல்லுாரியை முற்றிலும் மூட, 13 கல்லுாரிகளும் முடிவு செய்து உள்ளன. அவற்றில், சென்னையில், 5; கோவை, 3; திருச்சி, மதுரை தலா, 2 மற்றும் திருநெல்வேலி மண்டலத்தில், ஒரு கல்லுாரியும் இடம் பெற்றுள்ளன.

Advertisement


மாணவர் சேர்க்கை


அதுமட்டுமின்றி, 163 கல்லுாரிகள், சில பாடப்பிரிவுகளுக்கு மட்டும், மாணவர் சேர்க்கையை நிறுத்தி கொள்வதாக விண்ணப்பித்துள்ளன.அதனால், வரும் கல்வியாண்டு முதல், சில பாடப்பிரிவுகளில், புதிய சேர்க்கை நிறுத்தப்படுகிறது. சில கல்லுாரிகள், கல்லுாரி களை மூடுவது குறித்தோ, மாணவர் சேர்க்கை நடத்துவது குறித்தோ, எந்த விண்ணப்பமும் அளிக்கவில்லை என, உயர்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
- நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
15-பிப்-201810:58:18 IST Report Abuse

Sampath Kumarநல்லது இனி எல்லா கல்லூரிகளையும் கல்யாண மண்டபம் ஆகுங்க

Rate this:
mohan - chennai,இந்தியா
14-பிப்-201820:28:47 IST Report Abuse

mohanதிருநெல்வேலியில் இருந்து வரும் ஒரு பிரபல கல்லூரியின் மாணவர்களுக்கு மின்னழுத்தம் பற்றி கேட்டால் தெரியவில்லை. இவர்கள் எல்லாம் BE எலக்ட்ரிகல் பாஸ் செய்தவரக்ள்... இந்த மாதிரி கல்லூரிகள் தேவை இல்லை. மூடுவது சிறந்தது....

Rate this:
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
14-பிப்-201813:42:16 IST Report Abuse

SENTHIL NATHANகிராம பொருளாதாரமே இந்தியாவிற்கு தேவை என்றார் மகாத்மா காந்தி...குல கல்வியை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்றார் ராஜாஜி...கண்ணை மூடி கொண்டு இவற்றை எதிர்த்தித்தோம்.. இன்னும் 20 வருடங்களில் பல பழைய வழக்கங்களை மீட்க வேண்டிய கட்டாயத்தில் சமூகம் ஊசலாட போகிறது.....

Rate this:
கூமுட்டை - Panchgani,இந்தியா
14-பிப்-201813:13:01 IST Report Abuse

கூமுட்டை  ஒரு விஷயம் எரிச்சலை தருகிறது. யாருமே மூடப் போகும் கல்லூரிகளின் பெயரை குறிப்பிடவில்லை. கொஞ்ச நாள் முன்னாடியே இது போன்ற ஒரு செய்தியைப் படித்தேன். அப்போதும் பெயர் குறிப்பிடப்படவில்லை. பெயர் குறிப்பிட்டு பெற்றோர்களை காக்க வேண்டும்

Rate this:
Govindarajan Suresh - chennai,இந்தியா
14-பிப்-201811:07:30 IST Report Abuse

Govindarajan Sureshகள்ள சாராயம் மற்றும் மது பார்களை வைத்து பிழைப்பு நடத்திய " தொழிலதிபர்களுக்கு " டாஸ்மாக் மூலம் தொழில் நசிந்து போயிற்று. பின்னர் அவர்களெல்லாம் கல்வித்தந்தைகளாக மாறினார்கள். அதிலும் வியாவாராம் சரியாக போனியாகவில்லை. சினிமா துறையோ சீரழித்துவிட்டது. அதில் உள்ளவர்களே ஆட்டம் காணுகிறார்கள். இவர்களது அடுத்த புகலிடம் தான் தமிழக அரசியல். ஆளுக்கொரு லெட்டர் பேடு கட்சி ஆரம்பிக்க வேண்டியதுதான்

Rate this:
A.Gomathinayagam - chennai,இந்தியா
14-பிப்-201810:18:10 IST Report Abuse

A.Gomathinayagamதகுதி மதிப்பெண்கள் 35 விழுக்காடு ஆக குறைத்து அனைவரது ஆசையை தூண்டி விட்டு வங்கி கடன் தாராளமாக கொடுக்க பட்டு அரசியல் வாதிகள் கல்வி கூடங்கள் நிரம்பின.அரியர்ஸ். வேலை யின்மை.கல்விக்கடன் என வாழ்வை தொலைத்து விட்ட து இளைய சமுதாயம்

Rate this:
ARUL - chennai,இந்தியா
14-பிப்-201810:14:45 IST Report Abuse

ARUL"Sorry, we are closed "என்பதை விட " Enough, we are closed " ( அடித்த கொள்ளை எங்களுக்குப் போதும் ,கல்லூரி மூடப்படுகிறது ) என்பதே பொருத்தமான அறிவிப்பு.

Rate this:
சிற்பி - Ahmadabad,இந்தியா
14-பிப்-201808:49:03 IST Report Abuse

சிற்பி கடந்த வருடம் மூன்று மருத்துவ கல்லூரிகள் விலைக்கு வந்தன. நன்றி நீட். வரிசையாக இப்போது பொறியியல் கல்லூரிகள் மூடப்படுகின்றன. ஏன்? இதற்க்கு காரணம் பல. பணம் சம்பாதிப்பது ஒன்றையே குறிக்கோளாக கொண்டு ஆரம்பிக்க பட்டவை பல கல்லூரிகள். கல்லூரி திறக்கும் ஆசையில் பினாமி நிலங்களில் கல்லூரிகளை ஆரம்பிக்கின்றனர். பிறகு அதில் பாடம் நடத்த தகுந்த முதுகலை பயின்றவர்கள் கிடைக்க வேண்டுமே? அது தான் இல்லை. முதுகலை பொறியியல் படித்தவர்கள் அவ்வளவாக தமிழகத்தில் இல்லை. அதனால் அவரவர்களுக்கு தெரிந்த இருக்கும் சிலரிடம் இரண்டு மூன்று கல்லூரிகள் கையொப்பம் பெற்று முதுகலை பொறியியல் படிக்காதவர்களை கிடைத்தவரை கொண்டு கல்லூரியை ஓட்டி வருகின்றனர். இவர்களே ஊகித்து எவ்வளவு காலம் ஓட்டுவது என்று கல்லூரியை விரிவாக்கம் செய்யாமல் இருந்துவிட்டு, இப்போது விற்கும் நிலைக்கு வருகின்றனர். இந்த மாதிரி ஏதும் இல்லாத கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதில்லை. இந்த மாதிரி கல்லூரிகளால் இந்த பொறியியல் கல்விக்கே அவமானம். தரம் குறைந்து விட்டது. வேலை கிடைப்பதில்லை. மூடுவதே நல்லது. தரமான கல்வி நிலையங்கள் தேவை.

Rate this:
Jagath Venkatesan - mayiladuthurai ,இந்தியா
14-பிப்-201808:25:48 IST Report Abuse

Jagath Venkatesanஎன்ன தெரிகிறது...கல்லூரி முதல் போட்டு நடத்தும் கடை போல் இருக்கிறது.. படித்து முடித்தவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை.. அல்லது வேலை கிடைக்கும் கல்வி முறை இல்லை... இதை பற்றிய சிந்தனை அரசுக்கும் இல்லை... எல்லோருமே பணம் என்ற பிசாசை பேராசையால் அணைக்கவே நினைக்கிறார்கள். பகோடா கடை நடத்தினால் முதலாளி ஆகலாம் என்கிறார்கள் அரசியல் ஞானிகள்.. நிஜ ஞானிகள் இருந்த போது மக்கள் குறை இல்லாமல் இருந்தார்கள்... விஞ்ஞானிகள் வந்தபோது அறிவியல் வளர்ந்தது. முதலாளிகள் மட்டுமே முன்னேறி இருக்கிறார்கள்... கல்வி காசுக்கு விற்கப்படுகிறது. மருத்துவம் காசு உள்ளவரிடம் மட்டுமே பேசுகிறது.. உதவ யாரும் இல்லாமல் மக்கள் தவிக்கிறார்கள். இலவசத்தால் தேர்தல் சமயத்தில் வயிறு தடவப்படுகிறது.. தேர்தல் முடிந்த பின் ஒட்டியவயிறு வலியுடன் உயிருடன் போராடுகிறார்கள் .. இலவசம் பெற்ற மக்கள். உண்மை சுடும்... உணராதவர்கள் ... ஒப்பாரியுடன் போராட்டம்.

Rate this:
Arivu Nambi - madurai,இந்தியா
14-பிப்-201802:10:05 IST Report Abuse

Arivu Nambiஅறிவில்லாத பொறியாளர்களை உருவாக்கும் கல்லூரி என்ற பெயர் கொண்ட நிறுவனங்கள் தேவையில்லை, மூடுவது நல்லதுதான் .

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement