இந்திய அணி வரலாற்று வெற்றி; தொடரை வென்று சாதனை| Dinamalar

இந்திய அணி வரலாற்று வெற்றி; தொடரை வென்று சாதனை

Updated : பிப் 14, 2018 | Added : பிப் 14, 2018 | கருத்துகள் (20)
Advertisement
இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா,  ஒரு நாள் கிரிக்கெட், போர்ட் எலிசபெத், ரோகித் சர்மா சதம், இந்தியா வரலாற்று வெற்றி, India cricket team, South Africa, one day cricket, Port Elizabeth, Rohit Sharma century, India historic win, ODI, INDvsRSA,

போர்ட் எலிசபெத்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் ரோகித் சதம் விளாச, இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தவிர, தென் ஆப்ரிக்க மண்ணில் முதல் முறையாக ஒரு நாள் தொடரை வென்று வரலாறு படைத்தது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி ஆறு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. நான்கு போட்டிகள் முடிவில், இந்திய அணி 3-1 என முன்னிலையில் இருந்தது. ஐந்தாவது போட்டி போர்ட் எலிசபெத்தில் நடந்தது. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க அணி கேப்டன் மார்க்ரம் 'பவுலிங்' தேர்வு செய்தார். தென் ஆப்ரிக்க அணியில் கிறிஸ் மோரி நீக்கப்பட்டு ஷாம்சி இடம்பிடித்தார். இந்திய அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.


ரோகித் சதம்:

இந்திய அணிக்கு ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி 'சூப்பர்' துவக்கம் தந்தது. ரபாடா பந்துவீச்சில் தவான் இரண்டு பவுண்டரி விளாசினார். மார்கல் பந்தை ரோகித் பவுண்டரிக்கு விரட்டினார். தவான் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் கோஹ்லி (36) ரன்-அவுட்டானார். ரகானே 8 ரன்களில் திரும்பினார். அபார ஆட்டத்தை தொடர்ந்த ரோகித், ஒரு நாள் அரங்கில் 17வது சதம் விளாசினார். இவர் 115 ரன்களில் அவுட்டானார்.

நிகிடி 'வேகத்தில்' பாண்ட்யா (0), ஸ்ரேயாஸ் ஐயர் (30) சிக்கினர். தோனி 13 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 274 ரன்கள் எடுத்தது. புவனேஷ்வர் (19), குல்தீப் (2) அவுட்டாகாமல் இருந்தனர். தென் ஆப்ரிக்கா சார்பில் அதிகபட்சமாக நிகிடி 4 விக்கெட் வீழ்த்தினார்.


குல்தீப் கலக்கல்:

பின், களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணிக்கு கேப்டன் மார்க்ரம், ஆம்லா ஜோடி சிறப்பாக விளையாடினார். மார்க்ரம் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். டுமினி (1), டிவிலியர்ஸ் (6) ஏமாற்றினர். ஆம்லா (71) அரை சதம் அடித்து ஆறுதல் தந்தார். மில்லர் 36, கிளாசன் 39 போராடியபோதும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

முடிவில், தென் ஆப்ரிக்க அணி 42.2 ஓவரில் 201 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் 4 விக்கெட் வீழ்த்தினார். ஆட்ட நாயகன் விருதை சதம் விளாசிய ரோஹித் சர்மா தட்டி சென்றார்.


முதல் முறை:

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரை 4-1 எனக் கைப்பற்றியது. இதன்மூலம் தென் ஆப்ரிக்க மண்ணில் முதன்முறையாக ஒருநாள் தொடரை வென்று புதிய வரலாறு படைத்தது. இதற்கு முன், 4 முறை (1992-93ல் 2-5, 2006-07 ல் 0-4, 2010-11ல் 2-3, 2013-14ல் 0-2) இங்கு ஒருநாள் தொடரில் விளையாடிய இந்திய அணி, ஒருமுறை கூட தொடரை வென்றதில்லை.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
14-பிப்-201816:01:18 IST Report Abuse
இந்தியன் kumar இந்த வேகத்தில் போனால் அடுத்த உலகக்கோப்பை நமக்குத்தான்,
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
14-பிப்-201816:00:31 IST Report Abuse
இந்தியன் kumar இது போல் ஆஸ்திரேலியாவையும் அவர்கள் மண்ணில் வெல்ல வேண்டும்,
Rate this:
Share this comment
Cancel
ravichandran - Hosur,இந்தியா
14-பிப்-201813:47:44 IST Report Abuse
ravichandran everyone failed to notice batting performance of BHUVI
Rate this:
Share this comment
Cancel
tamilan -  ( Posted via: Dinamalar Android App )
14-பிப்-201813:16:22 IST Report Abuse
tamilan dhoni dhoni thala dhoni
Rate this:
Share this comment
sankar - trichy,இந்தியா
14-பிப்-201816:23:56 IST Report Abuse
sankarடோனி வாஸ்து ஒன்னும் ஸ்கோர் பண்ணல தினேஷ் கார்த்திக்கு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும் .தோனிக்கு தினேஷ் கார்த்திக் ஆகாது .கோலியும் அவரை கண்டு கொள்ள வில்லை...
Rate this:
Share this comment
Cancel
Ram - Chennai,இந்தியா
14-பிப்-201811:13:35 IST Report Abuse
Ram ஒயிட் வாஷ் செய்ய முடியவில்லையே ... சரி .. அடுத்தமுறை .....
Rate this:
Share this comment
Cancel
Mohamed Ilyas - Karaikal,இந்தியா
14-பிப்-201810:11:50 IST Report Abuse
Mohamed Ilyas இந்தியா ஒரு நல்ல ஸ்பிரிடோடு விளையாடியது கேப்டனின் வெற்றி பசியை அத்துணை வீரர்களின் மீதும் பரவ செய்கிறார் அதனால் தான் இந்தியாவால் தொடர் வெற்றி பெற முடிகிறது
Rate this:
Share this comment
Cancel
yuvaraj - Chennai,இந்தியா
14-பிப்-201809:54:28 IST Report Abuse
yuvaraj இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
14-பிப்-201809:47:10 IST Report Abuse
Rajavillupuram Congratulations to Men and women cricket team for their win against SA
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-பிப்-201808:21:44 IST Report Abuse
Srinivasan Kannaiya வா............................ழ்த்துக்கள்....
Rate this:
Share this comment
Cancel
14-பிப்-201807:51:15 IST Report Abuse
பரணி இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை