மந்திரி, எம்.எல்.ஏ.,க்கள் வீட்டில் ஜெயலலிதா படம்: பிரேமலதா யோசனை - Jayalalitha | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மந்திரி, எம்.எல்.ஏ.,க்கள் வீட்டில் ஜெ., படம்: பிரேமலதா யோசனை

Added : பிப் 14, 2018 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ஜெயலலிதா படம், அ.தி.மு.க., பிரேமலதா, தே.மு.தி.க., விஜயகாந்த் மனைவி பிரேமலதா , மந்திரிகள், எம்.எல்.ஏ.,Jayalalitha Photo, AIADMK, Premalatha, DMDK, Vijayakanth wife Premalatha, ministers, MLA,

சென்னை: ''ஜெயலலிதா உருவப்படத்தை, அ.தி.மு.க., தலைமை அலுவலகம், மந்திரிகள், எம்.எல்.ஏ.,க்கள் வீடுகளில் திறக்கலாம்; சட்டசபையில் திறந்ததை ஏற்க முடியாது,'' என, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்தின் மனைவி பிரேமலதா கூறினார்.
ஆதரவு : சென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி: ஜெ., உருவப்படம் திறப்பு குறித்து, ஒவ்வொருவரும், ஒவ்வொரு கருத்துக்களை தெரிவித்துள்ளனர். ஏன் திறக்கக்கூடாது என, விஜயகாந்த் தெளிவாக விளக்கமளித்து உள்ளார். நீதிமன்றத்தால் குற்றவாளி என, அறிவிக்கப்பட்டவர் ஜெயலலிதா. அவரது உருவப்படத்தை, அ.தி.மு.க., தலைமை அலுவலகம், மந்திரிகள், எம்.எல்.ஏ.,க்கள் வீடுகளில் திறக்கலாம்; சட்டசபையில் திறந்ததை ஏற்க முடியாது.தமிழகத்தில், எல்லா துறைகளும் நலிந்து விட்டன; அவற்றை முன்னேற்ற, எந்த நடவடிக்கையையும் அரசு எடுக்கவில்லை. எதிர்காலத்தில், அரசு எப்படி செயல்பட போகிறது என்பதை, பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும். எங்களுக்கு பிடித்த கருத்துக்களை தெரிவித்தால் உடனே, பா.ஜ., கட்சிக்கு ஆதரவு என்கின்றனர்.
முடிவு : பல கோடி பணம் கொடுத்து, மருத்துவ படிப்புக்கான சீட்டுகளை வாங்க வேண்டிய நிலை உள்ளது. 'நீட்' தேர்வு வந்தால், சாமானியர்களின் பிள்ளைகளும் மருத்துவம் படிக்க முடியும். தேர்வுகள் முறைகேடு இன்றி நடக்க வேண்டும். தேர்தல் வந்தால், யாருடன் கூட்டணி என்பதை, விஜய காந்த் முடிவு செய்வார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-பிப்-201808:59:48 IST Report Abuse
Srinivasan Kannaiya அதுதான் எல்லோரும் தம்மை சொத்து சேர்க்க அனுமதிததற்க்காக ஜெ யின் படத்தை பேனா கிளிப்பிலும்,, சட்டை பையிலும் வைத்து உள்ளார்கள்...
Rate this:
Share this comment
Cancel
Renga Naayagi - Delhi,இந்தியா
14-பிப்-201808:37:41 IST Report Abuse
Renga Naayagi aatthukkaarar eppadi irukkaar
Rate this:
Share this comment
Cancel
Amirthalingam Sinniah - toronto,கனடா
14-பிப்-201807:10:07 IST Report Abuse
Amirthalingam Sinniah ஜே பாலூட்டி வளர்த்த கிளிகள் அமைச்சர்கள்,எம் எல் ஏ க்கள் போன்றவர்கள். எப்படி இவர்களால் சொன்னதை செய்யாமல் இருக்கமுடியும்.
Rate this:
Share this comment
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
14-பிப்-201803:36:13 IST Report Abuse
Sanny எல்லாவற்றுக்கும் முதல் இந்த விமான நிலையத்தில் இருந்து அரசியல்வாதிகள் பேட்டி கொடுப்பதை தடை செய்யணும், பயணிகள் இந்த அரசியல்வாதிகளின் முகத்தை பார்க்காமல் பயணம் செய்யணும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை