தண்ணியில்லா காடாக மாறும் பெங்களூரு நகரம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

தண்ணியில்லா காடாக மாறும் பெங்களூரு நகரம்

Added : பிப் 14, 2018 | கருத்துகள் (18)
Advertisement
 Bangalore city, water shortage, drinking water project, பெங்களூரு நகரம், தண்ணீர் பற்றாக்குறை, குடிநீர் திட்டம்,  கேப்டவுன் நகரம் , டே ஜீரோ, ரேஷன் முறை தண்ணீர், பி.பி.சி வெளியிடு, பெங்களூரு மக்கள் தொகை,  Cape Town, Day Zero, Ration water, BBC , Bengaluru population,

புதுடில்லி : தண்ணீர் இல்லாத, உலகின் முதல் நகரம் என்ற நிலையை, தென் ஆப்ரிக்காவின், கேப்டவுன் நெருங்கி உள்ள நிலையில், கர்நாடக தலைநகர், பெங்களூரு, விரைவில், அந்த நிலைக்கு தள்ளப்படும் அபாயம் உள்ளதாக, ஐ.நா., நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

'டே ஜீரோ' எனப்படும், குடிநீர் குழாய்கள் மூலம், வீடுகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும், அரசு தண்ணீர் வினியோகம் செய்வது நிறுத்தப்படும் நாள் என்ற நிலையை, கேப்டவுன் நகரம் எட்டியுள்ளது. கடும் தண்ணீர் பற்றாக்குறையால், அந்த நகரில் ஏற்கனவே, ரேஷன் முறையில் தண்ணீர் தரப்படுகிறது.

விரைவில், சாலையில் உள்ள குழாய்கள் மூலமே தண்ணீர், அதுவும் கட்டுப்பாடுடன், குறைந்த அளவே தரப்படும் நிலை அங்கு உள்ளது.இந்நிலையில், ஐ.நா., ஆதரவுடன் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவை, பி.பி.சி., வெளியிட்டு உள்ளது.அதில், உலகெங்கும், 11 முக்கிய நகரங்கள், விரைவில், கேப்டவுன் நகருக்கு ஏற்பட்டுள்ள நிலைக்கு தள்ளப்படும் அபாயம் உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

இந்த, 11 நகரங்கள் பட்டியலில், பிரேசிலின், சாவ்பாலோ, முதலிடத்தில் உள்ளது. 2015ல், சாவ்பாலோவில் உள்ள அணைகளின் நீர் இருப்பு, 4 சதவீதத்துக்கு குறைந்தது. ஒரு நிலையில், 20 நாட்களுக்கு மட்டுமே நீர் கிடைக்கும் நிலை இருந்தது. கடந்தாண்டு இந்த நிலை மேம்பட்டாலும், தற்போது, நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

இந்த பட்டியலில், இரண்டாவது இடத்தில், பெங்களூரு உள்ளது. பெங்களூரில் உயர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, குடிநீர், கழிவுநீர் வசதிகள் திட்டமிடப்படவில்லை என, ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இதனால், அங்கு அதிகளவு தண்ணீர் வீணடிக்கப்பட்டு உள்ளது; மாசுபட்டு உள்ளது. ஏரிகளின் நகரமாக இருந்த பெங்களூரில், பல ஏரிகள் குடியிருப்பு பகுதிகளாக மாறி உள்ளன.

தற்போது ஏரிகளில் உள்ள தண்ணீரும், மனிதர்கள் பயன்படுத்தும் தரத்தில் இல்லை என்றும், அந்த அறிக்கை தெரிவிக்கிறது.சீன தலைநகர், பீஜிங், மத்திய கிழக்கு நாடான, எகிப்தின் கெய்ரோ, தென்கிழக்கு ஆசிய நாடான, இந்தோனேஷியாவின், ஜகார்த்தா.

ரஷ்ய தலைநகர், மாஸ்கோ, பிரிட்டன் தலைநகர், லண்டன், ஆசிய நாடான, ஜப்பானின் தலைநகர், டோக்கியோ, அமெரிக்காவின், மியாமி நகர் ஆகியவை, இந்த பட்டியலில் உள்ளன.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vittal Anand - Chennai,இந்தியா
22-மார்-201816:52:58 IST Report Abuse
Vittal Anand அப்படியெல்லாம் பெங்களூரு வறண்டு போகாது. காவிரி நீரை திருப்பி விட்டிடுவான் கன்னடன்.
Rate this:
Share this comment
Cancel
VIKKI - KOLUMBOO,இலங்கை
15-பிப்-201809:16:15 IST Report Abuse
VIKKI நமக்காவது கடல் இருக்கிறது ,கடல் தண்ணீரை நல்லதண்ணீராக மாற்றி மக்களுக்கு வழங்கலாம் ஆனால் கர்நாடகாவில் கடல் இல்லை ,அங்கு தண்ணீர் வற்றிப்போனால் அவ்வளுவு பேரும் வீட்டை காலிசெய்ய வேண்டியதுதான்
Rate this:
Share this comment
Cancel
P. SIV GOWRI - Chennai,இந்தியா
15-பிப்-201808:55:03 IST Report Abuse
P. SIV GOWRI இனி வரும் காலம் இப்படித்தான் .பெய்தால் மழை.இல்லை என்றால் கடும் வறட்சி .
Rate this:
Share this comment
Cancel
நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா
15-பிப்-201803:48:22 IST Report Abuse
நந்தினி திவ்ய பாரதி சூப்பர். எங்ளுக்கு எல்லம் தண்ணீ கொடூகாமுடியதே அப்டீன்னு சொன்னாங்கள்ல, அத்தா அவங்களூகூ ஒண்ணுமே இல்லம போயிரும். ந்த காவீரி தண்ணீ இற்குதுல்லா அத திருசீ பக்கமுல்லம் கொண்டுவந்தூ அங்க தண்ணிக்குள்ளாரா ஒரு சிவன் சாமி இறக்குமில்லா அந்த ஸாமிக்கு தண்ணீ பூமிக்குள்ள கொடுக்கோணுமமா. அந்த திரூசீ சிவன் கோவில்லுக்கூ தண்ணீ வராம போச்சிதுன்னா யாருக்குமே தண்ணீ கெடைக்காதமா. பெங்களூரூ மொக்கையாட்டமாச்சுமா போயிருமமா.
Rate this:
Share this comment
Cancel
Viswanathan Meenakshisundaram - karaikudi,இந்தியா
14-பிப்-201821:42:12 IST Report Abuse
Viswanathan Meenakshisundaram இன்னும் நிறைய IT கம்பெனிகளாக திறக்க வேண்டும் . தென்னகத்தின் மாபெரும் சிலிகான் vaaley என பீற்றி கொண்டு 5 கோடி பேரை குடியேற்ற வேண்டும் . மிச்சம் இருக்கும் ஏரி குளங்கள் மீது பல அடுக்கு மாடி கட்டடங்கள் கட்டி ஒரே ஊரில் மேலும் மேலும் மூச்சு திணற திணற மக்கள் ஒருவர் மீது ஒருவர் ஏறுமளவிற்கு பெங்களூரை மட்டுமே டெவெலப் செய்ய வேண்டும் . நல்ல climate உள்ள ஊர் என்று சொல்லி கொண்டு அந்த ஊரை ஒரு வெளியாகி விட வேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா
14-பிப்-201820:06:56 IST Report Abuse
Srikanth Tamizanda.. கெடுவான் கேடு நினைப்பான். இது தமிழகத்துக்கும் பொருந்தும் என்று கன்னடர்கள் கூட நினைக்கலாம், ஒவ்வொரு முறையும் வெள்ளம் வந்து சென்னை நாறியபோது.. வெள்ள நீரை சேமிக்க துப்பில்லாமல் ஒவ்வொரு முறையும் கடலில் கலக்க விட்டு, அடுத்தவனிடம் கையேந்தும் சூழ்நிலை யாருக்கு??
Rate this:
Share this comment
Cancel
Raj - Chennai,இந்தியா
14-பிப்-201819:15:13 IST Report Abuse
Raj சாதனை சமுத்திரத்தையே வற்ற செய்வோம்
Rate this:
Share this comment
Cancel
Raj - Chennai,இந்தியா
14-பிப்-201819:14:41 IST Report Abuse
Raj சாதனை
Rate this:
Share this comment
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
14-பிப்-201817:48:06 IST Report Abuse
r.sundaram தர்மநியாயப்படி, சட்டப்படி அடுத்தவருக்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை தராதவர்களுக்கு இதுதான் நிலை. மத்திய அரசு கேட்காவிட்டாலும், தெய்வம் கேட்க்கும்.
Rate this:
Share this comment
Vittal Anand - Chennai,இந்தியா
22-மார்-201816:54:25 IST Report Abuse
Vittal Anandஅவனிடத்து வான் பொய்த்தாலும் தான் பொய்யாத வற்றா செல்வம் காவேரி இருக்கிறது....
Rate this:
Share this comment
Cancel
Gopi - Chennai,இந்தியா
14-பிப்-201817:33:39 IST Report Abuse
Gopi எச்சரிக்கை மணி பலதடவை அடித்தாகிவிட்டது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை