இளைஞர் காங்., தலைவர் கேரளாவில் படுகொலை | Dinamalar

இளைஞர் காங்., தலைவர் கேரளாவில் படுகொலை

Added : பிப் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

கண்ணுார்: கேரள மாநிலம், கண்ணுாரில், இளைஞர் காங்., தலைவர், மர்ம நபர்களால், கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன்தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின், கண்ணுார் மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவு, இளைஞர் காங்., தலைவர், சுஹைப், தன் நண்பர்கள், ரியாஸ், நவுஷத்துடன், தெருவோர டீக்கடையில், டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது, காரில் வந்த நான்கு பேர், கையெறி குண்டுகளை, அவர்கள் மீது வீசினர். இதனால், அவர்கள் நிலைகுலைந்த சமயத்தில், கத்தியால், சுஹைப் மற்றும் நண்பர்களை வெட்டி சாய்த்தனர். படுகாயம் அடைந்த மூவரும், அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.இருப்பினும், சிகிச்சை பலனளிக்காமல், சுஹைப் உயிரிழந்தார். இந்த சம்பவத்தின் பின்னணியில், இடது ஜனநாயக முன்னணிக்கு தலைமை வகிக்கும், மார்க்சிஸ்ட் கட்சியினர் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. கேரளாவில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சிக்கு வந்தது முதல், கண்ணுார் மாவட்டத்தில், அரசியல் படுகொலைகள் நடப்பது, சாதாரணநிகழ்வாகி வருகிறது.
தெலுங்கானாவில் பயங்கரம் : தெலுங்கானாவில், நால்கொண்டா மாவட்டத்தில், உள்ளூர், காங்., தலைவர், தர்மா நாயக், வீட்டுக்கு வெளியே துாங்கிக் கொண்டிருக்கையில், கட்டிலுக்கு கீழ், நாட்டு வெடிகுண்டுகள் வைத்து கொல்லப்பட்டார். குண்டுகள் வெடித்ததில், தர்மாவின் உடல், பல துண்டுகளாக சிதறியதாக, போலீசார் தெரிவித்தனர்.இந்த சம்பவத்துக்கு அரசியல் பின்னணி இல்லை என்றும், தனிப்பட்ட விரோதம், காரணமாக இருக்கலாம் என்றும் போலீசார் கூறினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை