மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம்

Added : பிப் 14, 2018 | கருத்துகள் (50)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

கோவை : ''மகா சிவராத்திரி என்பது, வெறுமனே விழித்திருக்கும் இரவு அல்ல; விழிப்புணர்வு கொடுக்கும் இரவு,'' என, ஈஷா யோகா மையத்தில் நேற்றிரவு நடந்த, மகாசிவராத்திரி விழாவில், சத்குரு பேசினார்.

மகாசிவராத்திரி விழா, 112 அடி ஆதியோகி சிலை முன் நேற்று நடந்தது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில், சத்குரு பேசியதாவது:ஒவ்வொரு மாதத்தின் 14-ம் நாளும், மாத சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. மாத சிவராத்திரியின் நாட்கள் அனைத்தும், இருண்ட இரவுகள். மாசி மாதத்தின்போது வரும் சிவராத்திரி, மகா சிவராத்திரி. இது, மிகவும் இருண்ட இரவு. உத்ராயண காலத்தின் துவக்கம். பூமியின் நிலையில் மாற்றம் ஏற்படும் காலம்.

அப்போது, ஆதியோகி சிலை அமைந்திருக்கும் இந்த இடத்தில் விழித்திருப்பது சிறப்பு. யோக பாதையில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு இது முக்கியமான இடம்; 365 நாட்களும் யோக பயிற்சியில் ஈடுபடுவோருக்கு சமமான பலன், இன்றைய ஒரு நாளில் கிடைக்கும். 11 டிகிரி அட்ச ரேகையில், பூமியின் வடக்கு நோக்கி இருக்கும் இடங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை.

கவனித்துப் பார்த்தால், முக்கியமான கோயில்கள் அந்த இடத்தில்தான் அமைந்திருக்கும். ஆதி யோகி சிலை அமைந்திருக்கும் இடமும், 11 டிகிரி அட்ச ரேகையில் அமைந்திருக்கும் இடம்தான். இந்த நாளை சிவன் - பார்வதியின் திருமண நாள் என்று சிலர் சொல்வார்கள். சிவன், எதிரிகளை ஜெயித்த நாள் என்று சொல்வோரும் உண்டு. மகா சிவராத்திரியைக் கொண்டாட இயற்கை, ஆதியோகியின் கருணை இரண்டும் துணை இருக்கிறது.

மனித குலம் பெறக் கூடிய அனைத்து சிக்கல்களுக்கும் தீர்வு தரக் கூடியவர் ஆதியோகி. தங்களைப் பற்றிய சிந்தனை இப்போது மக்களுக்கு வந்திருக்கிறது. அவர்களின் பார்வை, மதத்தில் இருந்து பொறுப்புணர்வு நோக்கி திரும்புகிறது. மனிதர்களுக்கான எல்லா தீர்வுகளும் உள்ளேதான் இருக்கிறது. ஏனென்றால், அவர்களுக்கு ஏற்படும் அனைத்து பிரச்னைகளும் உள்ளுக்குள் இருந்துதானே ஏற்படுகிறது. இது வெறுமனே விழித்திருக்கும் இரவு அல்ல. விழிப்புணர்வு கொடுக்கும் இரவு.

வெறுமனே இருக்கக் கூடிய மனம், பேயின் விளையாட்டுக் கூடம் என்று மேல்நாட்டு பழமொழி ஒன்று இருக்கிறது. ஆனால், மனித மனம் எப்போதும் வெறுமனே இருப்பதில்லை. அது எதையேனும் சிந்தித்துக்கொண்டேதான் இருக்கிறது.

இங்கு, உங்கள் மனதை ஒன்றுபட்ட நிலைக்கு கொண்டு செல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. உடலை சுமையாக சுமந்துகொண்டிருக்காமல், ஒன்றுபட்ட நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும். உங்கள் உடலை நீங்களே தின்று கொள்ள அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு, சத்குரு பேசினார்.

இந்நிகழ்ச்சியில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், தமிழக அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, செல்லுார் ராஜு, நடிகை தமன்னா உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்றனர். துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடுவின் வாழ்த்துரை ஒளிபரப்பப்பட்டது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arivu - Salem,இந்தியா
19-பிப்-201807:42:50 IST Report Abuse
Arivu என்னமா ரீல் உட்றாங்க
Rate this:
Share this comment
Cancel
Marshal Thampi - Nagercoil,இந்தியா
18-பிப்-201818:02:54 IST Report Abuse
Marshal Thampi கணபதி கொலுவும் ஊர்வலமும் போல இந்தியா புரா சிவாலய ஓட்டமும் நடைமுறைக்கு கொண்டுவரப்படுமா ? கணபதி ஊர்வலத்துக்கு முன்னாலே உள்ள சிவாலய ஓட்டம்
Rate this:
Share this comment
Cancel
நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா
15-பிப்-201803:34:35 IST Report Abuse
நந்தினி திவ்ய பாரதி எண்ணமாச்சுமா சொலீவச்சிருக்காங்கலமா. பெப்ரவரி 14 அநீக்கி வாலெண்டின்ஸ் டே வச்சிபோட்டங்க. சினிமாக்காரவுங்கல்லம் வந்துவச்சிப்போனங்களமா. நாங்கல்லம் இங்க ஒரு பெரிய்ய்ய ஹோட்டல் இற்குதில்லா அது பக்கதுல சின்ன பெரியா ஹோட்டல் இருகூ அங்கதா போனோம்.
Rate this:
Share this comment
Cancel
Rangaraj - Coimbatore,இந்தியா
14-பிப்-201816:17:08 IST Report Abuse
Rangaraj பலகோடி மக்கள் தொகையில் இது மாதிரி சிலர் இருக்கத்தான் செய்வார்கள் முதலில் யானைக்கு ரூட் விடுங்க அப்பறம் சிவனை பாக்கலாம் சிவராத்திரியில் தமிழ்நாடே இருண்டு கிடக்குது இதைவிட பெரிய இருட்டு சிவராத்திரி இல்லே
Rate this:
Share this comment
Cancel
Snake Babu - Salem,இந்தியா
14-பிப்-201814:41:23 IST Report Abuse
Snake Babu /////உங்கள் உடலை நீங்களே தின்று கொள்ள அனுமதிக்க வேண்டும்/// இதற்கு என்ன அர்த்தம். // அய்யா அவர் கூறுவதை முழுமையாக பாருங்கள் //உங்கள் மனதை ஒன்றுபட்ட நிலைக்கு கொண்டு செல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. உடலை சுமையாக சுமந்துகொண்டிருக்காமல், ஒன்றுபட்ட நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும். உங்கள் உடலை நீங்களே தின்று கொள்ள அனுமதிக்க வேண்டும்// உங்களுடைய மனம் ஒன்றுபட்ட நிலைக்கு கொண்டு செல்லும் போது அது மனமற்ற நிலை, எண்ணங்களற்ற நிலை, நான் என்ற எண்ணம் இருக்கும் வரை மனம் அற்ற நிலை வரவே வராது, அதனால் நான் என்ற ஒன்று அழியவேண்டும், பெரும்பாலும் இந்த நான் என்று ஒன்று இந்த உடலை கொண்டே உருவெடுக்கும். ஆகையால் இந்த உடலை பற்றிய உணர்வை தொலைக்கவேண்டும். அதற்கான உணர்வை அனுமதிக்கவேண்டும். உடலை தொலைத்து விட்டோம் என்ற நிலை வரும் போது நான் என்ற உணர்வு மறைந்து தான் என்று உணர்வு நிற்கும். இதை உணர்த்துவதற்கு உங்கள் உடலை நீங்களே தின்று கொள்ள அனுமதிக்கவேண்டும். ஆங்கிலத்தில் டைஜஸ்ட் என்று கூறியதை அல்லது வேறு ஏதேனும் கூறியதையே அல்லது இப்படியே கூறி இருந்தாலோ இது குறிக்கும் அர்த்தம் இது தான். எனக்கு தெரிந்த வரை. இந்த உடல் மனம் எண்ணம் கோசம் இவை எல்லாம் தொலைத்த நிலையிலே தான் என்ற உணர்வு வரும். அது ஆழ்நிலை தியானத்தில் வருவது, அதற்கு இந்த உடலை தொலைப்பது என்பது இன்றி அமையாத ஒன்று. நான் மறைத்து தான் என்ற உணர்வு பெற்றவர்கள் நிலை அமைதி நிலை, ஆனந்த நிலை, அதில் கோவம் சோகம் வெறுப்பு என்று எதுவுமே இருக்காது நன்றி வாழ்க வளமுடன்.
Rate this:
Share this comment
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
14-பிப்-201813:14:02 IST Report Abuse
pradeesh parthasarathy சில ஊர்களில் சிவராத்தரி அன்று சினிமா தெயட்டர்களில் ஷகீலா படம் போடுவார்கள் .... காலம் செய்த கோலம் ....
Rate this:
Share this comment
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
14-பிப்-201813:11:23 IST Report Abuse
pradeesh parthasarathy மகா சிவராத்திரியை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் வரலாற்று பிரசித்தி பெற்ற சிவாலய ஓட்டம் நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் மகா சிவராத்திரி நாளில் குமரியில் பக்தர்கள் பன்னிரண்டு சிவ ஆலயங்களுக்கு நடந்து சென்று வருவார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரளா பகுதியை ஒட்டியிருக்கும் மார்த்தாண்டம் பகுதியில் அமைந்துள்ளது திருமலை அருள்மிகு மகாதேவர் கோவில். சிவராத்திரி நாளில் பக்தர்கள் தங்கள் ஓட்டத்தை இந்த ஆலயத்தில் இருந்துதான் தொடங்குவார்கள். திருமலையில் ஆரம்பித்து திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்னிபாகம், கல்குளம், மேலான்கோடு, திருவிடைகோடு, திருவிதாங்கோடு, திருபன்னிகோடு, திரு நட்டாலம் என பன்னிரண்டு ஆலயங்களிக்கு பக்தர்கள் நடந்து செல்வார்கள். இது சுமார் 90 கிலோமீட்டர் தூரம் கொண்ட பக்தி பயணம் ஆகும். இதில் பங்குகொள்ளும் பக்தர்கள் மூன்று நாள் கடுமையான விரதங்கள் மேற்கொண்டு சிவராத்திரி அன்று ஓட்டத்தை ஆரம்பிப்பார்கள். காலில் செருப்பு அணிய மாட்டார்கள். ஒவ்வொரு கோவில் குளத்திலும் குளித்து ஈர துணியுடன் ஆலயம் சென்று தரிசனம் செய்து பின் அடுத்த ஆலயம் நோக்கி பயணம் செய்வார்கள். சிவாலய ஓட்டத்தின் வரலாறு இந்த சிவாலய ஓட்டத்திற்கு பல கதைகள் சொல்லப்பட்டாலும் அதிகமாக நம்பப்படுவது சுண்டோதரன் எனும் அரக்கனின் கதை தான். முன்பு ஒரு காலத்தில் சுண்டோதரன் என்னும் அரக்கன் ஒருவன் இருந்தான். அவன் மிக சிறந்த சிவ பக்தன். சிவலிங்கத்தை எங்கு பார்த்தாலும் குளித்து அந்த லிங்கத்தை மூன்று முறை சுற்றி விட்டுதான் மறுவேலை பார்ப்பான். அவன் ஒரு முறை சிவ பெருமானை நினைத்து கடுமையாக தவம் புரிந்தான். அவனது தவத்தில் மகிழ்ந்த சிவ பெருமான் அவன் முன் தோன்றி, “என்ன வரம் வேண்டும்” என்று கேட்க, அரக்கன் “தான் யாரை நோக்கி தனது சுண்டு விரலை காட்டுகிறேனோ அவன் சாம்பல் ஆகிட வேண்டும் ” என்று வரம் கேட்க, சிவபெருமானும் கொடுத்து விட்டார். வரத்தை பெற்றதும் அரக்கனுக்கு தனக்கு உண்மையிலே வரம் கிடைத்து விட்டதா என்று சந்தேகம் எழுந்தது. உடனே சிவபெருமானிடம், “நான் இதனை சோத்தித்து பார்க்க தேவலோகம் வரை போகவேண்டும். இப்போது அதற்கு நேரமில்லை. அதனால் தங்களிடமே இதனை சோதித்து பார்க்க போகிறேன்” என அரக்கன் சொல்ல சிவபெருமான் அதிர்ந்து அங்கிருந்து தப்பித்து ஓடுகிறார். ஓடும்போதுதான் சிவபெருமானுக்கு அரக்கனின் சிவபக்தி குறித்து நினைவு வர தன் கழுத்தில் இருந்து ஒரு ருத்ராட்சையை எடுத்து கீழே போட்டார். அதில் ஒரு லிங்கம் உருவானது. லிங்கத்தை கண்டதும் மூடனான அரக்கன் அருகில் உள்ள குளத்தில் குளித்து லிங்கத்தை வழிபாடு செய்து பின் துரத்தினான். சிவபெருமானும் அரக்கன் தன்னை நெருங்கும் போதெல்லாம் ஒரு ருத்திராட்சையை போட்டு வந்தார். ஓடும் போது சிவபெருமான் காக்கும் கடவுளான விஷ்ணுவை உதவிக்கு கோவிந்தா.... கோபாலா.... என அழைத்தபடி ஓடினாராம். அதன் அடையாளமாகாத்தான் தற்போதும் பக்தர்கள் ஓடும் பொது கோவிந்தா... கோபாலா என்று கூவிய படி செல்வார்கள். சிவராத்திரி அன்று சிவ ஆலயத்தில் நட்டகும் விசேஷத்தில் கோவிந்த கோபாலா என பக்தர்கள் முழங்குவது வித்தியாசமாகவும் புதுமையாகவும் இருக்கும். பன்னிரெண்டாவது ஆலயமான நாட்டலாம் வரும்போது விஷ்ணு பெண் அவதாரமான மோகினியாக தோன்றி அரக்கனை மயக்கி அவனுடன் ஆடுகிறார். விஷ்ணு ஆடுவதை போன்றே அரக்கனும் ஆட, விஷ்ணு தனது சுண்டு விரலை தன்னை நோக்கி காட்ட, அரக்கனும் அவ்வாறே செய்ய அரக்கன் சாம்பல் ஆகி விடுகிறான். அதனால் தான் பன்னிரெண்டாவது ஆலயத்தில் மட்டும் விஷ்ணு சன்னதியும் இருக்கும். சிவாலய ஓட்டத்தில் ஓடும் பக்தர்கள் தங்கள் கையில் விசிறி வைத்திருப்பார்கள். எல்லா ஆலயம் செல்லும்போது லிங்கத்திற்கும் விசிறி விடுவார்கள். அதாவது தங்களுடன் சிவபெருமானும் ஆடுவதாக ஐதீகம். அவ்வாறு ஓடும் சிவபெருமானுக்கு இளைப்பாற விசிறி விடுவது வழக்கம். பக்தர்கள், நடையாக நடப்பது மட்டுமல்லாது வாகனங்களிலும் இந்த பன்னிரண்டு கோவில்களுக்கு இந்த சிவராத்திரி நாளில் சென்று வருவார்கள். குமரி மட்டுமல்லாது கேரளாவில் இருந்தும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள். இந்த பிரசித்தி பெற்ற சிவாலய ஓட்டத்திற்காக சிவராத்திரி நாளில் குமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
Rate this:
Share this comment
Shriram - Chennai,இந்தியா
14-பிப்-201819:20:10 IST Report Abuse
Shriramஅருமை ப்ரதீஷ் அவர்களே...
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
14-பிப்-201812:18:24 IST Report Abuse
Kuppuswamykesavan மிஸ்டர் தமிலன், வல்லளார் பெருமகனார், ஜோதியாக மாறி, இறைவனுடன் கலந்தார் என்று கூறுவதில் கூட, ஓர் விஷேச சிறப்பும் செய்தியும் இருக்கு எனலாம். வல்லளார் ஓர் துறவி எனலாம். சாமானிய மனிதர்கள் ஒவ்வொருவரும், இந்த உலக மனித சமுதாயத்திற்கு, ஆற்ற வேண்டிய கடமைகள் அதிகம், அதற்கான துறைகளும் அதிகம். அதைத்தான், சாமானிய மனிதர்களிடம், இறைவனும் எதிர்பார்ப்பார் எனலாம். ஒரு முழுமையான துறவியை விட, ஒரு குடும்பஸ்த்தன், தன் தினசரி கடமைகளை, செவ்வனே செய்து முடித்துவிட்டு, சில நிமிடங்களேனும், தன்னை(இறைவனை) நினைத்து தொழுபவரை, அந்த இறைவன், முன்னுரிமை கொடுத்து வாழ்த்துவான் எனலாம். தான் படைத்த உலக மனித சமுதாயம், கலகலப்பாக சந்தோசமாக ஆனந்தமாக நிம்மதியாக வாழ்வதையே, அந்த இறைவனும் விரும்புவான் எனலாம். ஆக, துறவிகள் கடைபிடிக்க வேண்டிய, அத்தியாவசிய உடல் பராமரிப்பு கட்டுப்பாடுகளை, ஒரு குடும்பஸ்தன் ஏன் கடைபிடிக்கனும்?. ஒரு துறவி, ஒரு வேளை உணவு மட்டுமே சாப்பிட்டால் போதும் எனலாம். ஆனால், ஒரு குடும்பஸ்தனுக்கு, குறைந்தபட்சம், இரு வேளை உணவு என்பது மிகவும் அவசியம்தானே?. புரிகிறதா?.
Rate this:
Share this comment
Cancel
Tamilan - Doha,கத்தார்
14-பிப்-201811:11:04 IST Report Abuse
Tamilan இங்கு, உங்கள் மனதை ஒன்றுபட்ட நிலைக்கு கொண்டு செல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. உடலை சுமையாக சுமந்துகொண்டிருக்காமல், ஒன்றுபட்ட நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும். உங்கள் உடலை நீங்களே தின்று கொள்ள அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு, சத்குரு பேசினார். Can someone explain
Rate this:
Share this comment
Gopi - Chennai,இந்தியா
14-பிப்-201817:46:04 IST Report Abuse
Gopiஊன் உடலை சுருக்கி (ஆசையும் சேர்த்து ) உள்ள ஒளியை ஏற்றுதல். இதை உடனே செய்ய முடியாது. இல்லறத்தில் இருப்போரும் இதை பின்பற்றலாம்....
Rate this:
Share this comment
Cancel
Vasu - Coimbatore,இந்தியா
14-பிப்-201811:01:33 IST Report Abuse
Vasu பாபா ராம்தேவ் கஷ்டப்பட்டு உடம்பை வளைத்து யோகா கற்றுத்தருகிறார், அவரை பின்பற்றினால் நன்மை உண்டு
Rate this:
Share this comment
இந்தியன் kumar - chennai,இந்தியா
14-பிப்-201814:09:09 IST Report Abuse
இந்தியன் kumarஉடம்பு மட்டும் நன்றாக இருந்தால் போதாது மனமும் தூய்மையாக இருக்க வேண்டும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை