புதிய ரேஷன் கார்டு வழங்க... காலதாமதம்! "எல்காட்' சுறுசுறுப்படையுமா?| Dinamalar

தமிழ்நாடு

புதிய ரேஷன் கார்டு வழங்க... காலதாமதம்! "எல்காட்' சுறுசுறுப்படையுமா?

Added : பிப் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
புதிய ரேஷன் கார்டு வழங்க... காலதாமதம்!  "எல்காட்' சுறுசுறுப்படையுமா?

திருப்பூர்:புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்கள் நீண்ட நாட்கள் காத் திருக்கும் அவலம் தொடர்கிறது; இதற்கு தீர்வாக, முடங்கியுள்ள "எல்காட்' பிரிவில், புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் அச்சிடும் வசதியை ஏற்படுத்த வேண்டும்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 1,137 ரேஷன் கடைகளில், 7.06 லட்சத்துக்கும் அதிகமான ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன. கடந்த வார நிலவரப்படி, 7,01,267 ரேஷன் கார்டுதாரர்களுக்கு, "ஸ்மார்ட்' கார்டுகள் வந்துவிட்டன. ஆதார் விவரங்களில் மாறுபட்ட தக வல்கள் இருப்பதால், ஒவ்வொரு தாலுகாவிலும், கணிசமான நபர்களுக்கு ஸ்மார்ட் கார்டு கிடைக்கவில்லை.கடந்த ஓராண்டாக, ஸ்மார்ட் கார்டு நடைமுறையில் இருந்தாலும், புதிய கார்டுகள் அச்சிட மாவட்டத்தில் வசதி வாய்ப்பு இல்லை. திருத்தம் செய்யப்படும் ஸ்மார்ட் கார்டுகளை பிரின்ட் செய்ய, தாலுகா பொது சேவை மையத்தில் மட்டுமே வசதி இருந்தது. ஓராண்டுக்கு பின், கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி மற்றும் மண்டல அலுவலகங்கள், தாராபுரம், உடுமலை நகராட்சி சேவை மையங்களிலும் ஸ்மார்ட் கார்டு பிரின்ட் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.
பல்லடம் நகராட்சி, வெள்ளக்கோவில் மற்றும் காங்கயம் நகராட்சிகளில், இத்தகைய வசதி விரிவாக்கம் செய்யப்படவில்லை. ஸ்மார்ட் கார்டில் ஏராளமான குழப்பங்கள் இருப்பதால், திருத்தம் செய்து, புதிய கார்டை பிரின்ட் செய்ய, தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வருகின்றனர்.
திருத்திய கார்டுகளை பிரின்ட் செய்ய வசதி இருந்தாலும், புதிய கார்டு பிரின்ட் செய்ய வசதியில்லை. ரேஷன் கார்டு அச்சிடுவதற்காக துவங்கப்பட்ட "எல்காட்' மையம், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியாக மாறிவிட் டது. புதிய கார்டு கேட்டு விண்ணப்பம் செய்தவர்களுக்கு, சென்னையில் மட்டுமே கார்டு அச்சிடப்படுகிறது.
அனைத்து மாவட்டங்களுக்கும் கார்டு, சென்னையில் அச்சிட வேண்டி யிருப்பதால், காலதாமதம் ஏற்படுகிறது. புதிய விண்ணப்பங்களை கொடுத்து, மாதக்கணக்கில் விண்ணப்பதாரர்கள் காத்திருக்கின்றனர். பழைய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு, இதுநாள் வரை தீர்வு கிடைக்கவில்லை."எல்காட்' பிரிவு இருந்தும், புதிய கார்டு அச்சிட சரியான நடவடிக்கை எடுக் கப்படவில்லை. இதற்கு தீர்வாக, புதிய கார்டுகளை அச்சிட, "எல்காட்' மையத்தில், கட்டமைப்பை ஏற்படுத்தினால், தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு, விரைவாக "ஸ்மார்ட்'கார்டு வழங்க இயலும்.குடிமைப்பொருள் வழங்கல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், "புதிய விண்ணப்பங்களை பரிசீலித்து, மாவட்டத்திலேயே ஸ்மார்ட் ரேஷன் கார்டு அச்சிட்டால், விரைவாக கார்டு வழங்க முடியும். ஆனால், புதிய கார்டு அச்சிடும் வசதி, இங்கு இல்லை."ஒவ்வொரு நபரின் ஆதார் விவரங்கள் அடிப்படையில் ஸ்மார்ட் கார்டு தயாரிக்கப்படுவதால், எவ்வித முறைகேடு நடக் கவும் வாய்ப்பில்லை. எனவே, மாவட்ட "எல்காட்' பிரிவில் புதிய கார்டுகள் அச்சடிக்கும் வசதியை ஏற்படுத்த வேண்டுமென கேட் டுள்ளோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X