ண வெங்காய மார்க்கெட் கடைகளை அகற்ற நடவடிக்கை ரோட்டில் விரித்தால் அள்ள உத்தரவு | Dinamalar

தமிழ்நாடு

ண வெங்காய மார்க்கெட் கடைகளை அகற்ற நடவடிக்கை ரோட்டில் விரித்தால் அள்ள உத்தரவு

Added : பிப் 14, 2018
Advertisement
 ண வெங்காய மார்க்கெட் கடைகளை அகற்ற நடவடிக்கை  ரோட்டில் விரித்தால் அள்ள உத்தரவு

மதுரை, மதுரை கீழமாரட் வீதியில் செயல்படும்
வெங்காய மார்க்கெட்டால் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்க அதை சென்ட்ரல் மார்க்கெட்டிற்கு மாற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
சென்ட்ரல் மார்க்கெட்டிலுள்ள காலியிடத்திற்கு வெங்காய மார்க்கெட்டை மாற்ற சில ஆண்டுகளுக்கு முன் மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது. இதற்கு வியாபாரிகளிடம் ஒத்துழைப்பு கிடைக்காததால் திட்டம் கைவிடப்பட்டது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இப்பகுதியில் போக்குவரத்தை மேம்படுத்தும் திட்டங்கள் உள்ளன. இதன்படி வெங்காய மார்க்கெட்டை மாற்றம் செய்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு செயல்படும் கடை உரிமையாளர்களுக்கு சென்ட்ரல் மார்க்கெட்டில் இட
ஒதுக்கீடு செய்ய மாநகராட்சி தயாராக உள்ளது.
கீழமாரட் வீதியில் ஆய்வு செய்த கமிஷனர் அனீஷ் சேகர் நடைபாதையில் வெங்காயம் விற்ற 30 கடைகளின் பொருட்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார். நடைபாதையில் வெங்காயம் விற்றால் நடவடிக்கை எடுக்கவும், கடைகளை வைக்காமல் கண்காணிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அதிகாரிகள் கூறியதாவது: லாரிகள், டிரை சைக்கிள்கள், டூவீலர்கள், வெங்காய கடைகள் என கீழமாரட் வீதி போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது.
லாரிகளில் இறக்கி வைக்கப்படும் வெங்காய மூடைகள் ரோடு வரை வைக்கப்படுகின்றன. நடைபாதையை ஆக்கிரமிக்கக் கூடாது என பல முறை எச்சரித்தும் வியாபாரிகள் கண்டுகொள்ளவில்லை. இங்கிருந்து மார்க்கெட் இடமாற்றம் செய்யப்பட்டால் மட்டுமே இப்பகுதியில் நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். சென்ட்ரல் மார்க்கெட்டில் வியாபாரிகளுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய கடைகள் உள்ளன.
ஏற்கனவே இங்கிருந்து சென்ட்ரல் மார்க்கெட் மாற்றப்பட்டுள்ளது. பழமார்க்கெட் இடமாற்றம் செய்யப்படவுள்ளது. வெங்காய மார்க்கெட்டையும் இடமாற்றுவது அவசியம். வியாபாரிகள் தாமாக முன்வந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X