விதி மீறியவர்களுக்கு அபராதம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விதி மீறியவர்களுக்கு அபராதம்

Added : பிப் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: நமது நாளிதழில் செய்தி எதிரொலியாக, விதி மீறி செல்லும் வாகன ஓட்டிகளுக்கு, போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.தேனாம்பேட்டை மண்டலம், ஜி.என்.செட்டி சாலையில், சுந்தர் சாலை,- தெற்கு போக் சாலை சந்திப்பு வரை, ஒரு வழிச்சாலையாக உள்ளது.ஆனால், வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்குவதை தவிர்க்க, ஒரு வழிப்பாதையில், எதிர் திசையில் செல்கின்றனர். இதனால், போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் அடிக்கடி ஏற்பட்டு வருகின்றன. சில மாதங்களுக்கு முன், விதிமுறை மீறி, ஒரு வழிச்சாலையில், எதிர் திசையில், மெட்ரோ பணிக்காக சென்ற கிரேன் மோதியதில், அதே பகுதியைச் சேர்ந்த, நிர்மலா, 45, உயிரிழந்தார்.அதன் பிறகும், வாகனங்கள், ஒரு வழிச்சாலையில், எதிர் திசையில் செல்கின்றன. மாநகராட்சி குப்பை லாரியும், விதிகளை மீறி செல்கிறது. இது குறித்து, நமது நாளிதழ், படத்துடன், செய்தி வெளியிட்டது.இதன் எதிரொலியாக, விதி மீறி செல்லும் வாகன ஓட்டிகளுக்கு, போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை